அங்குசம் பார்வையில் ‘சைரன் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சைரன்
சைரன்

அங்குசம் பார்வையில் ‘சைரன்-108’. தயாரிப்பு: ‘ஹோம் மூவி மேக்கர்ஸ்’ சுஜாதா விஜய்குமார். இணைத் தயாரிப்பு: அனுஷா விஜய்குமார். தமிழ்நாடு ரிலீஸ்: ரெட் ஜெயண்ட் மூவிஸ். டைரக்டர்: அந்தோணி பாக்யராஜ். ஆர்ட்டிஸ்ட்ஸ்: ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி, அழகம் பெருமாள், யோகி பாபு, சாந்தினி தமிழரசன், அஜய், டெக்னீஷியன்கள்: ஒளிப்பதிவு: செல்வக்குமார், இசை: ஜி.வி.பிரகாஷ்குமார், பின்னணி இசை: சாம் சி.எஸ். நடனம்: எடிட்டிங்: ரூபன் பிருந்தா, ஸ்டண்ட் மாஸ்டர்: திலீப் சுப்பராயன், காஸ்ட்யூம் டிசைனர்ஸ்: அனு பார்த்தசாரதி, அர்ச்சா மேத்தா, எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர்: ஒமர். பிஆர்ஓ: சதீஷ் (Aim)

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

உரிய நேரத்தில் உயிரைக் காக்கும் ஆம்புலன்ஸ் டிரைவராக இருக்கிறார் திலகன் ( ஜெயம் ரவி). ஆனால் மனைவியின் உயிரை எடுத்ததாக ( கொலை செய்ததாக) பொய் வழக்கில் சிக்க வைக்கப்பட்டு ஆயுள் தண்டனைக் கைதியாகிறார். சில வருடங்கள் கழித்து அப்பாவின் உடல்நிலை மோசமாக , அப்பாவையும் தான் ஜெயிலுக்குப் போகும் போது பிறந்து, இப்போது வளர்ந்திருக்கும் பெண் குழந்தையும் பார்க்க சில நாட்கள் பரோலில் வருகிறார் ஜெயம் ரவி. ஆனால் அவரது மகளோ.. தன் அம்மாவைக் கொன்ற கொலைகாரன் என்ற வெறுப்பில் அப்பாவைப் பார்க்க மறுக்கிறார்.

சைரன்
சைரன்

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

இதனால் மகளை தூரத்தில் இருந்தே பார்த்து மனம் மகிழ்கிறார் ஜெயம் ரவி. பரோலில் வந்த ரவி, கையெழுத்துப் போடும் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் நந்தினியாக இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். விசாரணைக் கைதி ஒருவன் ஸ்டேஷனில் இறந்த வழக்கில் சிக்கி, சஸ்பெண்டாகி, உயர்மட்ட விசாரணைக்குப் பிறகு பணியில் சேர்ந்த நேரத்தில் தான் ஜெயம் ரவியும் கையெழுத்துப் போட வருகிறார். சாதிவெறி பிடித்த டி.எஸ்.பி.நாகலிங்கத்திற்கும் ( சமுத்திரக்கனி) நந்தினிக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான். எதிர்க்கட்சித் தலைவர் அண்ணாச்சி மாணிக்கத்தங்கம் ( அழகம் பெருமாள்) , அவரது பதவியைக் குறிவைக்கும் அன்பு ( அஜய்) இருவருமே சமுத்திரக்கனி யின் சாதியைச் சேர்ந்தவர்கள்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஜெயம் ரவி பரோலில் இருக்கும் நேரத்தில் அழகம் பெருமாளும் அஜய்யும் கொல்லப்படுகிறார்கள். இந்தக் கொலைகளுக்கும் ஜெயம் ரவி தான் என முடிவு கட்டி மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்துகிறார் இன்ஸ்பெக்டர் கீர்த்தி சுரேஷ். ஆனால் தான் கொலை செய்யவில்லை என ஆதாரத்துடன் நிரூபித்து சாமர்த்தியமாக தப்பிக்கிறார் ஜெயம் ரவி. உண்மையிலேயே அந்தக் கொலைகளைச் செய்தது யார்? ஜெயம் ரவியின் மனைவி அனுபமா பரமேஸ்வரனை கொலை செய்தது யார்? என்பதற்கு விடை தான் அழுத்தம் மற்றும் ஃபேமிலி டச்சிங்குடன் சத்தமாக ஒலிக்கும் இந்த ‘ சைரன் ‘. ஒயிட் & ஒயிட் பேண்ட் ஷர்ட்டில் ஆம்புலன்ஸ் டிரைவராகவும் கலர் ஜிப்பா வேட்டியில் சால்ட் & பெப்பர் தலைமுடி தாடியுடன் ஆயுள் தண்டனைக் கைதியாகவும் ஜெயம் ரவியின் கேரக்டரை சிரத்தையுடன் வடிவமைத்துள்ளார் டைரக்டர் அந்தோணி பாக்யராஜ். இரண்டு கேரக்டர்களையும் உணர்வுப்பூர்வமாக உள்வாங்கி மெச்சத்தகுந்த நடிப்பை வழங்கி பார்வையாளர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்கிறார் ஜெயம் ரவி.

அதிலும் பரோலில் வந்த பிறகு பணிவாகவும் மெல்லிய குரலிலும் ஜெயம் ரவியின் டயலாக் டெலிவரி ரொம்பவே ஈர்க்கிறது. கேட்க, பேச முடியாத மாற்றுத் திறனாளி நர்ஸ்ஸாக, ஜெயம் ரவியின் மனைவி ஜெனி (அனுபமா பரமேஸ்வரன்) கதாபாத்திரமும் மகள் மலர் ( யுவினா பார்வதி) கதாபாத்திரமும் கதையின் பயணத்திற்கு வலு சேர்க்கின்றன. மிடுக்கான இன்ஸ்பெக்டராக கீர்த்தி சுரேஷ் படம் முழுவதும் கவனம் ஈர்க்கிறார். குற்றவாளிகளை நிற்க வைத்து போலீசார் ‘ ஐடெண்டிஃபிகேஷன் பரேட் ‘ நடத்துவதைத் தான் பார்த்திருக்கிறோம். ஆனால் இதிலோ போலீஸ்காரர்களை நிற்க வைத்து கீர்த்தி சுரேஷ் ஐடெண்டிஃபிகேஷன் பரேட் நடத்துவது, பரோல் கைதி ஜெயம் ரவி, ஷேடோ போலீஸ் யோகி பாபு மூலம் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்டை எடுப்பது, கையெழுத்து லெட்டஜரை எடுப்பதெல்லாம் யோகி பாபு காமெடி போலவே ஆகிவிட்டது. ஜெயம் ரவியின் தங்கையாக, மகளின் வளர்ப்புத் தாயாக வரும் சாந்தினி தமிழரசனும் மனதில் நிற்கிறார்.

சைரன்
சைரன்

ஆம்புலன்ஸ் சேஸிங் ஃபைட் டில் கேமரா மேன் செல்வக்குமாரும் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயனும கடுமையாக உழைத்த இருக்கிறார்கள்.ஜி.வி.பிரகாஷின் “கண்ணம்மா” மற்றும் “நேற்று..” பாடல்கள் சுகமான ராகங்கள். சாம் சி.எஸ்.சின் பேக்ரவுண்ட் ஸ்கோர் சைரனுக்கு சூப்பர் ஃபாஸ்ட் சப்போர்ட், சில சீன்களில் ஓவர் சவுண்ட். காஞ்சிபுரம் பகுதியில் கதை நடப்பதால் ஜெயம் ரவி நிற்கும் ஒரு டீக்கடையில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ( நடுவகிடு எடுத்திருப்பது), புகைப்படங்கள், பெரியார் பேருந்து நிறுத்தம், ஜெயிலில் ஜெயம் ரவி திருக்குறள் படிப்பது, மனித உயிர்களின் மகத்துவம் குறித்து, சக கைதிகளுக்கு ஜெயம் ரவி பாடம் போதிப்பது என பல காட்சிகள் டைரக்டர் அந்தோணி பாக்யராஜின் உள்ளத்து சாட்சிகள். நமது உளப்பூர்வ வாழ்த்துக்கள்.க்ளைமாக்ஸை செம செண்டிமெண்ட்டாகவும் டச்சிங்காகவும் வைத்த விதம் அருமை. ஜெயம் ரவிக்கு இந்த ‘சைரன்’ நல்ல வெற்றி ஒலி.

-மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.