சீமான் கட்சி கரும்பு விவசாயி சின்னம் பறிபோனது ! கைவிரித்த நீதிமன்றம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நாம் தமிழர் கட்சிக்குக் கரும்பு விவசாயி சின்னம் இல்லை டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு –  உச்சநீதி மன்றம் செல்லும் சீமான் – நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யக்கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.

2024ஆம் ஆண்டு ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், நாம் தமிழர் கட்சிக்கு, கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது நாம் தமிழர் கட்சி. நாம் தமிழர் கட்சி “நாங்கள் 2016ஆண்டு தேர்தல் முதல் 2021 தேர்தல் மற்றும் உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டோம். 1%, 3% என்று தற்போது 7% வரை வாக்கு வாங்கி நாம் தமிழர் கட்சிக்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் தற்போது தேசியக் கட்சி என்ற பெயரில் தொடங்கப்பட்ட கட்சிக்குக் கரும்பு விவசாயி சின்னத்தை வழங்கியது தேர்தல் ஆணைய விதிமுறைக்கு எதிரானது என்பதால் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை வழங்க உத்தரவிட வேண்டும்” என்ற வாதம் முன் வைக்கப்பட்டது.

ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பழனியாண்டியை பின்தொடர.....

சீமான் கட்சி சின்னம்
சீமான் கட்சி சின்னம்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இந்த வழக்கில் ஆஜரான தேர்தல் ஆணையம் தன்னுடைய வாதத்தில்,“நாம் தமிழர் கட்சி என்பது பதிவு செய்யப்பட்ட கட்சிதான். அங்கீகாரம் பெற்ற கட்சி அல்ல. பதிவு செய்யப்பட்ட கட்சிக்குச் சின்னத்தைக் கோர எந்த உரிமையும் இல்லை. டிசம்பர் மாதத்தில் கர்நாடக மாநிலத்தில் தொடங்கப்பட்ட தேசிய கட்சிக்குக் கரும்பு விவசாயி சின்னத்தை வழங்கினோம். நாம் தமிழர் கட்சி பிப்ரவரி மாதத்தில்தான் சின்னம் கோரி இணைய தளத்தில் விண்ணப்பம் செய்திருந்தது. முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் கர்நாடாக மாநிலத்தில் தொடங்கப்பட்ட தேசிய கட்சிக்குக் கரும்பு விவசாயி சின்னத்தை வழங்கினோம். இதில் எந்த விதி மீறலும் இல்லை”என்று வாதம் முன்வைக்கப்பட்டது.

குறைவான முதலீட்டில் நிலையான வருமானம் -

இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று (4.3.24) டெல்லி உயர்நீதிமன்ற இணைய தளத்தில் மாலையில் வெளியானது. அதில், இந்திய தேர்தல் ஆணையம் உரிய விதிமுறைகளின்படியே சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. மனுதாரர் கூறும்படி எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை. முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் ஏற்கனவே கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே வழக்கினை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டுள்ளது.

டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து இன்று (5.2.24) உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சின்னத்திற்காக சீமான் போராட்டம் ஓயாது என்பதை உணர்ந்துகொள்ள முடிகின்றது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.