பாத்ரூம் கூட போக முடியல … பயந்துகிட்டு பயணம் பன்றோம் … ரணமான ரயில் பயணங்கள் !

10

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பாத்ரூம் கூட போக முடியல … பயந்துகிட்டு பயணம் பன்றோம் … ரணமான ரயில் பயணங்கள் ! இரயில் பயணங்கள் பெரும்பாலும் சலிப்பூட்டுவதில்லை. குழந்தைகளின் குதூகலப் பயணம் என்பதோடல்லாமல், அன்றாட அலுவல் மற்றும் பிழைப்பு காரணமாக ஊர் விட்டு ஊர் வந்து தமிழகத்தின் ஏதோ ஒரு மாவட்டத்தில் செட்டில் ஆகியிருப்பவர்களுக்கு வார இறுதி நாட்களில் சொந்த ஊர் சென்று திரும்புவதற்கான அயற்சி அற்ற பயணம் எனில் முதல் தேர்வு இரயில் பயணமாகத்தான் இருக்கும்.

ரணமான ரயில் பயணங்கள்
ரணமான ரயில் பயணங்கள்

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

பாத்ரூம் கூட போக முடியல, பயந்துகிட்டு பயணம் பன்றோம் … என அலறியபடி அபாய சங்கிலியை இழுத்து புகார் அளிக்கும் அளவுக்கு இரயில் பயணங்கள் மாறிவிட்டதென்பது, அவலமானது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் வரை செல்லும் வண்டி எண் 12512 ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் ரயில் சேலம் ஜோலார்பேட்டை மார்க்கமாக செல்லுகிறது , ஞாயிற்றுக்கிழமைகள் என்றாலே சொல்லத் தேவையில்லை. கூட்டம் நிரம்பி வழியும். கோயம்புத்தூரில் இருந்து ஜோலார்பேட்டை வரவேண்டும். கோயம்புத்தூர் ரயில் நிலையத்திற்கு மிக சரியாக மாலை 3:25 மணிக்கு வந்துவிடும் என்று அறிவிப்பு செய்தார்கள். அடித்து பிடித்து முன்பதிவு செய்யப்படாத இரண்டாம் வகுப்பு பெட்டியை தேடி முன் பகுதிக்கு ஓடினேன்.

ஸ்லீப்பர் கோச், ஏசி கோச் என்று வரிசையாக படித்துக் கொண்டே ஓடி, கடைசியில் என்ஜினுக்கு முன்பாக ஒரே ஒரு முன்பதிவு இல்லா இரண்டாம் வகுப்பு பெட்டியை ஒதுக்கி இருந்தார்கள். இவ்வளவு கூட்டமாக இருக்கிறதே என்று முன் பகுதியில் இருந்து பின்பகுதிக்கு ஓடினேன். அங்கும் ஒரே ஒரு முன்பதிவு இல்லா பெட்டி இருந்தது. சரி தலை விதி என்று எண்ணி அந்தப் பெட்டியில் முன்டியடித்து ஏறினேன். உள்ளே எள்ளு போட்டால் எள்ளு இறங்காது என்று கிராமத்திலே ஒரு பழமொழி ஒன்று சொல்வார்கள். அப்படி ஒரு கூட்டம் நெருக்கி கொண்டு இருந்தனர் . ஒரு வழியாக உள்ளே ஏறி விட்டேன். கால் வைப்பதற்குக்கூட இடமில்லை. கடைசியில் 280 கிலோமீட்டர் தூர பயணத்தை பல மணி நேரம் நின்றபடியே பயணித்து ஜோலார்பேட்டை வந்து சேர்ந்தேன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

இந்நிலையில் கோவை ரயில் நிலையத்தில் முன்பதிவு பெட்டிகளில் ஏறிய சென்னை வரை செல்லும் பயணிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பெட்டி முழுவதும் (வடக்கன்”ஸ்) வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் நிறைந்ததிருந்தனர். கிடைத்த இடங்களில் எல்லாம் அமர்ந்துகொண்டவர்கள் வழிநெடுக காத்து புகாத அளவிற்கு நின்று கொண்டிருந்தனர். பர்த்திங் இடத்திற்கும் லக்கேஜ் இடத்திற்கும் பெட்ஷீட்டில் ஊஞ்சல் கட்டி ஆங்காங்கே தொங்கியபடி படுத்து இருந்தார்கள். சிலர் லக்கேஜ் வைக்கும் இடங்களில் கூட படுத்து இருந்தனர். ஏதாவது பேச முயன்றால் நாம் சொல்வது அவனுக்கு புரியவில்லை. அவன் சொல்வது நமக்கு புரியவில்லை. கூடவே பெட்டி முழுவதும் துர்நாற்றமும் வீசியது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ரணகளமான ரயில் பயணம்
ரணகளமான ரயில் பயணம்

வேறு வழியின்றி பயணம் தொடர, நடுவழியே கழிவறைக்கு செல்லவும் வழிவிடாமல் நெருக்கி கொண்டிருந்தனர். கோவையில் இருந்து பயணம் இப்படியே தொடர, ஜோலார்பேட்டையில் ரயில் நின்றது. அப்போது கூட்டத்தை விலக்கிக் கொண்டு சிலர் கழிவறைக்கு சென்றபோது, அதனுள்ளும் சிலர் அமர்ந்து பயணித்து கொண்டிருந்ததை கண்டு கடும் அதிருப்தியடைந்தனர். அவர்கள் வெளியேற மறுத்ததால் புலம்பெயர் தொழிலாளர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் புறப்பட்ட நிலையில், ஆத்திரத்தில் இருந்த பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். பின்னர் ரயில்வே போலீசார் விரைந்து பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் கழிவறையில் அமர்ந்திருந்த புலம்பெயர் தொழிலாளர்களை ( வடக்கன்”ஸ்) வெளியேற்றி கழிவறையைப் பயணிகள் பயன்படுத்த உதவி புரிந்தனர்.

ரயில் பயணம் என்றால் சுகமான பயணம் என்று சொல்வார்கள். இப்பொழுதெல்லாம் அது ரணகள பயணமாகவே இருக்கிறது. ஏழை எளிய மக்களை புழு பூச்சியாகக் கூட மதிப்பதில்லை, தற்போது உள்ள ரயில்வே நிர்வாகம். முன்பு போல், கூடுதலான முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளை இணைத்து பயணிகளின் துயரத்தை போக்க வேண்டும், தினமும் ரயில்களை சுத்தம் செய்ய வேண்டும், என்பதே பயணிகளின் கோரிக்கை.

– மணிகண்டன்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

10 Comments
  1. சுந்தரேசன் says

    இவங்களுக்கு வந்தே பாரத்தான் முக்யம். மத்த ரயில்கள் எப்படி போனால் என்ன?

  2. X Ray says

    தென் இந்தியா வட இந்தியர்களால் இன்னும் பல பிரச்சினைகளை சந்திக்கும்.

    1. குமார் says

      வட இந்தியர்களை தமிழ்நாட்டை விட்டு விரட்டிவில்லை என்றால் பல பிரச்சினைகளை தென் இந்தியா சந்திக்கும் இந்த வடக்கன்ஸ் ஆயிரக்கணக்கில் தமிழ்நாட்டுக்கு வந்து தமிழர்களின் வேலைகளை பறிப்பதொடு தினமும் வடக்கான்ஸ் ஆல் தொல்லையாக உள்ளது தமிழ்நாடு அரசு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் நீங்களா எதுக்கு டா கவர்ன்மென்ட் அஹ் நடத்துறீங்க😒

      1. Ramani says

        கோவை ரயில்நிலையத்தில் நானும் அந்த குறிப்பிட்ட ரயிலை பார்த்தேன். அனைத்து பெட்டிகளும் நிரம்பி வழிந்தது ஒரே நாற்றம் வேறு. கோவை to ஈரோடு செல்ல
        கார்ட் இடம் இது ஈரோடு செல்லுமா? என்று கேட்டு அந்த ரயிலில் நின்று கொண்டே பயணம் செய்ய லாம் என்று எண்ணினேன் கார்ட் நீங்கள் இதில் பயணம் செய்யாமல் அடுத்த ரயிலில் வாருங்கள் என்றார் .ஏன் அப்படிச் சொன்னார் என்பது ரயில் பெட்டி களை நெருங்கிய போதுதான் தெரிந்து கொள்ள முடி தது .அப்படி ஒரு நாற்றம்.

      2. R.Balachandran says

        It has become a nuisance for all Travellers who buy Tickets. Many of the Vadakkans do not buy Tickets. Only 2 days back I came back to Chennai after Travelling in 2nd AC Reserved Coach. But local vendors are freely travelling. TTE keeps quite.

    2. குமார் says

      சரியாக சொன்னீர்கள்

  3. Dr.N.Thiagarajan says

    All long distance trains from south to Northern states

  4. Selvin samuel says

    Government is interested in vande Bharat trains only. Travel in other trains is not comfortable

  5. Sampathkumar says

    தமிழ்நாட்டில் உள்ளவர்கள் பிஜேபி சப்போர்ட் பண்ணா இப்படித்தான் இருக்கும்

  6. வீராசாமி says

    இரயில்களில் குளிர்சாதன பெட்டிகள் அதிகம் எதற்கு சாதாரண பயண சீட்டில் பயணிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது .. குளிர்சாதன பெட்டிகள் பெரும்பாலும் காலியாக உள்ளது.. சாதாரண பெட்டிகள் மக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது.. மத்திய அரசு முடிவு செய்தது என்ன.. இனியும் செய்ய போவதும் என்ன? மீண்டும் ஒரு பெருந்தொற்று பரவ போகிறது.. மத்திய அரசு மக்களை குறை சொல்லி அரசியல் செய்யத்தான் போகிறது நாட்டு மக்களுக்கு சராசரி வாழும் மக்களின் நிலை ??..

Leave A Reply

Your email address will not be published.