அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் ”சுதந்திர தின விழா – 2026” கொண்டாட்டம் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தேசபற்று பொங்கும் 80வது சுதந்திர தின விழா திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. திருச்சிராப்பள்ளி சமயபுரத்தில் அமைந்துள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம், 15ஆகஸ்ட்2026 அன்று நமது தேசம் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திரத்தை நினைவுகூர்ந்து 80வது சுதந்திரதினத்தை உற்சாகமாகக் கொண்டாடியது.

விழாவின் தலைமை விருந்தினராகப் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் திருமதி. அனந்தலட்சுமி கதிரவன் அவர்கள் கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்து ஊக்கமூட்டும் உரையாற்றினார். இளைஞர் குடிமக்களிடையே டிஜிட்டல் அதிகாரமளித்தல் மற்றும் புதுமைகளை ஊக்குவிப்பது, நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் அர்ப்பணிப்பால் பெற்ற சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், நிலைநிறுத்தவும் அவசியம் என்பதை அவர் வலியுறுத்தினார்.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம்
தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம்

பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிறப்பான அணிவகுப்பு மற்றும் பண்பாட்டுச் சிறப்புமிக்க கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தேசத்தில் நிலவும் அமைதி மற்றும் ஒற்றுமையின் உணர்வை பிரதிபலித்தனர். இவர்களின் பாராட்டத்தக்க பங்களிப்புக்கு இணைவேந்தர் பரிசுகள் வழங்கினார். பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் ரஞ்சன், பதிவாளர் டாக்டர் செல்வகுமார், பல்கலைக்கழக புல முதல்வர்கள், இணை புல முதல்வர்கள்,  பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டு இந்த விழாவை நாட்டின் நிலையான சுதந்திர பாரம்பரியத்திற்கு ஒரு நினைவுச் சின்னமாக ஆக்கினர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.