பாஜக – பாமக ” பலமான ” தொகுதியில் நேரடியாக களம் காணும் திமுக ?
தொகுதி உடன்பாட்டை நிறைவு செய்த வேளையில், திமுகவின் தேர்தல் வியூகமும் வெளிப்பட்டுள்ளது ...
திமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளின் தொகுதிகள் அறிவிப்பு!
திமுக புதிதாக ஆரணி, ஈரோடு, தேனி தொகுதிகளில் போட்டி?
இந்திய நாடாளுமன்றத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்ய இடையில் இன்னும் ஒருநாள் மட்டுமே இருக்கும் சூழ்நிலையில், திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதியைக் காங்கிரஸ் கட்சியின் இழுபறியால் இறுதி செய்யமுடியாமல் இருந்துவந்தது. இதனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை மீது கோபம் கொண்டதாகவும் செய்திகள் கசிந்தன. இன்று (18.3.24) பிற்பகல் 1.00 மணியளவில் காங்கிரஸ் புதுச்சேரி தொகுதி, தமிழ்நாட்டில் போட்டியிடும் 9 தொகுதிகளில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
காங்கிரஸ் (10)
- திருவள்ளூர்(தனி) 2. கடலூர். 3. மயிலாடுதுறை 4. சிவகங்கை 5. திருநெல்வேலி 6. கிருஷ்ணகிரி 7. கரூர் 8. விருதுநகர் 9. கன்னியாகுமரி 10. புதுச்சேரி. இதனைத் தொடர்ந்து மதிமுக போட்டியிடும் ஒரு தொகுதியும் இறுதி செய்யப்பட்டுள்ளது.
மதிமுக (1) 1. திருச்சிராப்பள்ளி
இதனையடுத்துத் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளின் பட்டியலும் உடனே வெளியிடப்பட்டது.
திமுக (21)
- வடசென்னை, 2. மத்தியச் சென்னை 3. தென்சென்னை 4. ஸ்ரீபெரும்புதூர் 5. காஞ்சிபுரம்(தனி) 6. அரக்கோணம் 7. திருவண்ணாமலை 8. ஈரோடு 9. வேலூர் 10. தர்மபுரி, 11. பெரம்பலூர் 12. கள்ளக்குறிச்சி, 13. சேலம், 14. நீலகிரி(தனி) 15. தேனி 16. பொள்ளாச்சி 17. தஞ்சாவூர் 18. தென்காசி(தனி) 19. தூத்துக்குடி, 20. கோவை 21. ஆரணி
மற்ற கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள்
விடுதலை சிறுத்தைகள் (2) 1. விழுப்புரம் (தனி), 2. சிதம்பரம் (தனி)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2) 1. மதுரை, 2. திண்டுக்கல்
இந்தியக் கம்யூனிஸ்ட் (2) 1. நாகப்பட்டினம்(தனி) 2.திருப்பூர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (1) 1.ராமநாதபுரம்
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி (1) 1. நாமக்கல்
தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில் திமுக 21 தொகுதிகளிலும், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றது. விடுதலைச் சிறுத்தைகள் தங்களின் பானை சின்னத்திலும், மதிமுக பம்பரம் சின்னத்திலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஏணி சின்னத்திலும், காங்கிரஸ் கை சின்னத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரிவாள் சுத்தியல் சின்னத்திலும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கதிர் அரிவாள் சின்னத்திலும் போட்டியிடுகின்றன.
திமுக தன் கூட்டணி கட்சிகளோடு தொகுதி உடன்பாட்டை நிறைவு செய்த வேளையில், திமுகவின் தேர்தல் வியூகமும் வெளிப்பட்டுள்ளது. திமுக தென்மாவட்டங்களில் தென்காசி, தூத்துக்குடி மற்றும் தேனி தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகின்றது. சென்னையைத் தவிர்த்து, பாமகவிற்குச் செல்வாக்கு உள்ள தொகுதிகளான ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஆரணி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகின்றது. கொங்கு மண்டலத்தில் பாஜகவுக்குச் செல்வாக்கு உள்ள தொகுதிகளான கோவை, ஈரோடு, பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடுகின்றது.
பாமக, தேமுதிக பாஜக கூட்டணியில் இணையப்போகின்றதா? அல்லது அதிமுக கூட்டணியில் இணையப்போகின்றதா? என்ற முடிவு தெரியாமல் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை இறுதி செய்யமுடியாமல் தவித்து வருகின்றன. தேர்தல் பணிகளில் தமிழ்நாட்டில் திமுக முன்னணியில் உள்ளது என்பது வெள்ளிடை மலையாகவே தெரிகின்றது.
ஆதவன்