எடப்பாடியிடம் பங்கு கேட்க மாட்டோம் ! நயினார் நாகேந்திரன்

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

மதுரையில் மார்ச் 1 அன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பிரச்சார கூட்டம் தொடர்பாக மதுரை மஸ்தான்பட்டியில் தனியார் விடுதியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில் ….

மார்ச் 1ம் தேதி மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது. தற்போது மாநாட்டில் மட்டும் பிரதமர் கலந்து கொள்வதாக உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன அவை முடிந்தால் அதையும் திறப்பதற்கு வாய்ப்பு உள்ளது. கௌரவ விரிவுரையாளர்களுக்கு நல்லது செய்வோம் என தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள், ஆனால் செய்யவில்லை. தூய்மை பணியாளர்களை போராட வைத்து அடித்து தெருவில் நிறுத்திதற்போது சாப்பாடு போடுகிறார்கள் போராட்டம் நடத்துபவர்களிடம் தற்போது முதலமைச்சர் பேசி எப்படியாவது அடித்துபிடித்து கூட்டணி மந்திரி சபை இல்லாமலே நான் முதலமைச்சராகி உங்களுக்கு நல்லது செய்கிறேன் என சமாளித்து வருகிறார் என்றார்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

நயினார்நாகேந்திரன் பேட்டி ....ஆட்சியில் பங்கு ஒத்து வராது என முதல்வர் தெரிவித்தது குறித்த கேள்விக்கு ..

கூட்டணியை விட்டு வெளியேறுவதற்கு ஏதாவது காரணம் காங்கிரஸ் கட்சிக்கு தேவைப்படுகிறது. எதற்காக டெல்லி சென்று கனிமொழி ராகுல்காந்தியை பார்க்க வேண்டும். எதற்காக கூட்டணி ஆட்சி ஒத்து வராது என முதல்வர் பேச வேண்டும். எதற்காக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் 2006 தேர்தல் பற்றி பேச வேண்டும் எல்லாம் பார்க்கும்போது திமுக காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் உள்ளது தெரிகிறது.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

நாங்கள் தெளிவாக சொல்லி விட்டோம். தேசிய ஜனநாயக கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி நாங்கள் எதுவும் கேட்க மாட்டோம். நாங்கள் கேட்கவில்லை அவர்கள் மாட்டேன் என சொல்லவுமில்லை என்றார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக திண்டுக்கல் சீனிவாசன்தெரிவித்தது குறித்த கேள்விக்கு ..

தேமுதிகவிடம் நாங்கள் இதுவரை கூட்டணி பேசவில்லை என்றார்

சசிகலா புதிய கட்சி தொடங்குவதால் அதிமுக ஓட்டுக்களை பிரிப்பாரா என்ற கேள்விக்கு …

நாங்கள் யாரையும் கஷ்டப்பட்டு கூட்டணியில் சேர்க்கவில்லை ஒவ்வொரு எம்ஜிஆர் தொண்டனும் திமுகவை எதிர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளார்கள். தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது பல மாற்றங்கள் வரும் என்றார்.

—  ஷாகுல், படங்கள்  : ஆனந்தன்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.