கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் 28 ஆவது ஆண்டு விழா 24 ஆவது அரங்கேற்ற விழா !
எத்தனைத் தடைகள் வரும் போதும் நம்மையும் நாம் சார்ந்த சமூகத்தையும் சோர்வின்றி எழ வைத்து ஊக்கம் தருவது கலைகள் தான்.
கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் 28 ஆவது ஆண்டு விழா 24 ஆவது அரங்கேற்ற விழா !
கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் 28 ஆவது ஆண்டு விழா 24 ஆவது அரங்கேற்ற விழா நடைபெற்றது.
நிகழ்வில் கல்லூரியின் செயலர் அருள்பணி S..லூயிஸ் பிரிட்டோ தலைமையில் முதல்வர் முனைவர் ப.நடராஜன் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நடனக் கலைஞர் அருள்பணி. சஜு ஜார்ஜ் மற்றும் வயலின் கலைஞர் திரு. லட்சுமி நாராயணன் மற்றும் கல்லூரிக் குழு தலைவர் அருள்பணி அந்துவான் அடிகளார் பங்கேற்றனர். குரலிசை, கருவியிசை வீணை, வயலின் மிருதங்கம், மற்றும் பரதநாட்டியம் இறுதியாண்டு பயிலும் மாணவர்களின் அரங்கேற்றம் நடைபெற்றது.
தொடர்ந்து சிறப்பாக செயலாற்றிய சிறந்த NSS மாணவர்கள், சிறந்த மனித நேயச் செயல்பாடுகளுக்கான மாணவர்கள் மற்றும் சிறப்பாக செயலாற்றிய ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், விடுதியில் சிறப்பாக செயலாற்றிய சமையல் கலைஞர்கள், என யாவர்க்கும் சிறந்த செயல்பாட்டிற்கான விருதுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. சிறப்புரை யாற்றிய அருள்பணி.
சஜு ஜார்ஜ் கலை என்பது நிகழ்த்து முறையல்ல வாழ்க்கை முறை, எத்தனைத் தடைகள் வரும் போதும் நம்மையும் நாம் சார்ந்த சமூகத்தையும் சோர்வின்றி எழ வைத்து ஊக்கம் தருவது கலைகள் தான். பல்லாயிரம் மேடைகளில் தனியாக நடனம் செய்துள்ளேன் அகத்தையும் புறத்தையும் காத்து சமூக இருளகற்றி அன்பையும் நேயத்தையும் வளர்த்திட கலைஞர்கள் செயல்பட வேண்டும். சமாதான சமத்துவ பண்பாட்டுத் தூதர்களாக கலைஞர்கள் திகழ வேண்டும் என்றார்.
நிகழ்வை தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் சதீஷ் குமார் தொகுத்து வழங்கினார்.