2 வயது குழந்தை உட்பட 5 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்த ஆசிரியர் குடும்பம் – சிவகாசி பரிதாபம் !
கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விஷம் அருந்தி 2வயது குழந்தைக்கும் விஷம் கொடுத்து தற்கொலை விருதுநகர் மாவட்டம் சிவகாசி திருத்தங்கல் பாலாஜி நகரை சேர்ந்த லிங்கம் (45) இவர் ராஜபாளையம் அருகே உள்ள கிராமத்தில் அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி பழனியம்மாள் (42) இவர் சிவகாசி அருகே உள்ள சுக்கிரவார்பட்டி கிராமத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார், இந்த தம்பதியினருக்கு ஆனந்வள்ளி (28) என்ற மகளும் ஆதித்யா (13) என்ற மகனும் உள்ளனர்,ஆனந்தவல்லிக்கு திருமணம் ஆகி சுசிக்கா என்ற (2) வயது குழந்தையுடன் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று (மே 23) இன்று காலை எப்பொழுதுமே இந்த தம்பதியினர் அதிகாலையிலேயே எழுந்து வெளியே வருவது வழக்கம் ஆனால் வெகு நேரமாகியும் தம்பதியினரின் வீடு திறக்காமல் இருந்துள்ளது.
சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது 5 பேரும் பேச்சு மூச்சு அற்று கீழே விழுந்த நிலையில் இருந்துள்ளனர்.
உடனடியாக திருத்தங்கல் காவல் நிலையத்திற்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர், காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது 5 பேரும் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளனர்.
உடனடியாக அவர்களின் உடலை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்,காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தம்பதியினருக்கு அதிக அளவிலான கடன் சுமை இருப்பதாலும் கடனை எவ்வாறு திருப்பி செலுத்தப் போகிறோம் என மன உளைச்சலில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

தம்பதியினர் தாங்கள் விஷம் அருந்தியது மட்டுமல்லாமல் தன் மகள் மகனுக்கும் கொடுத்து ஒன்றுமே அறியாத 2 வயது குழந்தைக்கும் கொடுத்திருப்பது அப்பகுதி பொதுமக்கள் இடையே அதிர்ச்சியையும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடன் வாங்கிய அனைவருமே தற்கொலை செய்து கொள்ள வேண்டுமானால், இங்கு யாருமே உயிர் வாழ முடியாது,எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வு அல்ல இதற்காக அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் தற்கொலை தடுப்பு மையங்களை நடத்தி வருகிறார்கள்.
எப்பொழுதெல்லாம் மன உளைச்சல் மற்றும் தற்கொலைகளுக்கான எண்ணம் தோன்றும் பொழுதும் அரசு அறிவித்துள்ள 104 எண்ணிற்கு அழைத்து ஆலோசனை பெறலாம்.
-மாரீஸ்வரன்