மோடி பயோபிக்கில் நானா? சத்யராஜ் போட்ட வெடிகுண்டு !
மோடி பயோபிக்கில் நானா? ‘மழை பிடிக்காத மனிதன் ‘ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று காலை நடந்தது. எஸ்.டி.விஜய் மில்டன் டைரக்ட் பண்ணியிருக்கும் இப்படத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், சரத்குமார், மேகா ஆகாஷ் உட்பட பலர் நடித்துள்ளார்கள்.
விழாவில் அனைவரும் பேசிய பின்னர், மீடியாக்கள் சத்யராஜிடம், “மோடி பயோபிக்கில் நடிக்கிறீர்களா?” என கொக்கியைப் போட்டனர். ” அதுக்கு சான்ஸே இல்லை. ஒரு வேளை அதில் நடிச்சா நண்பர் மணிவண்ணன் டைரக்டரா இருக்கணும்.
இப்ப அவர் இல்லாததால வெற்றிமாறன் இல்லேன்னா மாரி செல்வராஜ் டைரக்ட் பண்ணினா கண்டிப்பாக நடிப்பேன்” என மீடியாக்களை தெறிக்க விட்ட சத்யராஜ், வழக்கம் போல தனது நாத்திக கருத்துகளையும் சரவெடி கொளுத்தி அசத்தினார்.