மோடி ”மனுஷனே” இல்லியாம் … அட அவரே சொன்னது தான் !
மோடி ”மனுஷனே” இல்லியாம் … அட அவரே சொன்னது தான் ! இதில் இன்னும் ஒரு கோணம் உள்ளது. சராசரி இந்திய / இந்து மனம் அமானுஷ கடவுள் தேட்டம் கொண்டது. அது, புராண இதிகாசங்களை கேள்வியே இல்லாமல் அப்படியே நம்பி ஏற்கும்.
அதன் விளைவுதான் எல்லாவற்றையும் ‘வழிபடுதல்’ என்னும் குணம். தோல்வியின் சந்தேகம் வந்த ஹிந்துத்துவா இப்படியான ஒரு மாயவலை தயாரித்து விரிக்கலாம்.
மகாபாரத பாண்டவர் பிறப்பைப் போல, ராமாயண சீதை பிறப்புபோல கன்னி மரியின் மகன் ஏசுபோல தன் பிறப்பை சாதாரண மனிதப் பிறப்புக்கு அப்பாற்பட்ட தெய்வீகப் பிறப்பாக சொல்லி,அப்பாவி மக்களை நம்பவைத்தால், தங்கள் மீதான விமர்சனங்களை கடப்பது எளிதாகும் என்ற யுக்தியின் விளைவாகவும் மோடி இப்படி பேசலாம்.
மனிதத் தவறுகளை எதிர்க்கும்‘மக்களின் ஆவேசம்’ கடவுளிடம் வரும்போது‘பணிந்து கும்பிடும்’ தன்மை அடைவதை பயன்படுத்தும் ஒரு யுக்தியாகவும் தோன்றுகிறது.
தன் பிறப்புக்கு ஒரு நோக்கம் இருப்பதான மோடியின் பிரச்சாரம், தன்னை அவதாரமாக மக்களை ஏற்க வைப்பதே. விஷ்ணு ‘மனித ராமராக’ அவதரித்ததை ஏற்கும் மக்கள் தன்னையும் ஏற்பார்கள் என்பது மோடியின் கணக்கு. மக்கள் ஏற்கமாட்டார்கள் ஏற்ககூடாது என்பது நம் ஆசை. ஆழமாக ஆசைப்படுவோம். ஜூன் 4 அவதார பிம்பம் அடியோடு ஒழியட்டும்.
– நந்தலாலா