விக்ரவாண்டிக்கு மீண்டும் இடைத்தேர்தல் ! மூன்று நாட்களில் வேட்புமனு தாக்கல் !

நடைப்பெற்ற விக்கிரவாண்டி 2016 மற்றும் 2021 ஆகிய இரு தேர்தல்களில் வெற்றி பெற்ற ராதாமணி, புகழேந்தி , ஆகியோர் முழுமையாக பதவியை முடிக்காமல் இறந்து விட்டதால் தொடர்ந்து இடைத்தேர்தலை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

விக்ரவாண்டிக்கு மீண்டும் இடைத்தேர்தல் ! மூன்று நாட்களில் வேட்புமனு தாக்கல் !

“விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது” என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

Sri Kumaran Mini HAll Trichy

விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற மக்களவைத் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவுமான  புகழேந்தி  திடீரென மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இ்ந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதி உட்பட நாடு முழுவதும் 13 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி ஜூன் 14- ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கும் என்றும், ஜூன் 21- ஆம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. ஜூலை 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி , விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன்- 10 முதல் அமலுக்கு வந்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் சத்தியபிரத சாஹூ அறிவித்துள்ளார்.

தேர்தலுக்கு சரியாக இன்னும் 29 நாட்களே இருக்கும் நிலையில் இந்த திடீர் அறிவிப்பு அரசியல் கட்சிகளின்  வட்டாரத்தில் பதற்றத்தை  ஏற்படுத்தியுள்ளது . ஆனால், திமுக சார்பில் ஏற்கனவே வேட்பாளர்கள் யார் என்பது ஏறத்தாழ முடிவாகிவிட்டதாகவும்  அந்த பட்டியலில் முதல் இடத்தில் மறைந்த எம்எல்ஏ புகழேந்தியின் மகனும் விழுப்புரம் மத்திய மாவட்ட பொறியாளர் அணி செயலாளராக இருக்கும் செல்வகுமார் இடம்பெற்றிருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.

Flats in Trichy for Sale

விழுப்புரம் நகராட்சி முன்னாள் சேர்மன் ஜனகராஜ், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதமசிகாமணி, மாநில விவசாய அணி துணை தலைவர் அன்னியூர் சிவா, ஒன்றிய செயலாளர் வேம்பி ரவி, முன்னாள் எம்.எல்.ஏ., மகன் செல்வகுமார் மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான தினகரன் ஆகியோர் பெயர்களும் பரிசீலனை பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது என்கிறார்கள்.

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி

அ.தி.மு.க., சார்பில் விக்கிரவாண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் எசாலம் பன்னீர், முன்னாள் எம்.எல்.ஏ., முத்தமிழ்செல்வன், முன்னாள் அமைச்சர் சண்முகத்தின் சகோதரர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி தொரவி சுப்ரமணியன், தெற்கு ஒன்றிய செயலாளர் முகுந்தன், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி தலைவர் குமரன் உள்ளிட்டோர் வாய்ப்பு கேட்டு வருகின்றனர் .

பாமக சார்பில் , விழுப்புரம் வடக்கு மாவட்ட பாமக தலைவர் சிந்தாமணி புகழேந்தி,  வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் வாய்ப்பு கேட்டுள்ளனர்.

நடைப்பெற்ற விக்கிரவாண்டி 2016 மற்றும் 2021 ஆகிய இரு தேர்தல்களில் வெற்றி பெற்ற ராதாமணி, புகழேந்தி , ஆகியோர் முழுமையாக பதவியை முடிக்காமல் இறந்து விட்டதால் தொடர்ந்து இடைத்தேர்தலை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது .

கேஎம்ஜி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.