சூர்யாவுக்கு எதிராக சூர்யா ! விஜய் சேதுபதியின்  ’வில்லங்க ஆட்டம்’

0

சூர்யாவுக்கு எதிராக சூர்யா! விஜய் சேதுபதியின்  ’வில்லங்க ஆட்டம்’  தந்தையர் தினத்தில் ‘தப்பாட்டம்’  விஜய் சேதுபதியின் 50-ஆவது படமாக, ‘மகாராஜா’ கடந்த வெள்ளியன்று [ ஜூன் 14 ] ரிலீசானது. படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு உழைப்பு அசாத்தியமாக இருந்து அனைவரையும் அசத்தி விட்டது என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம் டைரக்டர் நித்திலன் சாமிநாதனின் திரைக்கதைக் குழப்பம் பெருங்குழப்பமாகிவிட்டதால் வெகுஜனங்கள் மனதில் இந்த மகாராஜா சிம்மாசனம்  போட்டு அமரவில்லை என்பது தான் நிஜம்.

விஜய் சேதுபதி மகன் சூர்யா
விஜய் சேதுபதி மகன் சூர்யா

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

சரி, வி.சே.வின் மகாராஜா கதையை இத்தோட நிறுத்திக்குவோம். அடுத்து வி.சே.வின் மகன் சூர்யாவின் கதைக்கு வருவோம்.  2019-ரிலீசான ‘சிந்துபாத்’ படத்தில் விஜய்சேதுபதியுடன் சில சீன்களில் வந்து கவனம் ஈர்த்தார், சூர்யா. அப்போதெல்லாம் மீடியாக்களில் சூர்யா சேதுபதி என்று தான் குறிப்பிடுவார்கள். ஏன்னா ஏற்கனவே தமிழ் சினிமாவில் சூர்யா என்ற ஹீரோ இருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா என்ற டைரக்டரும் முழு நேர நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதனால் தான் சூர்யா சேதுபதி என்று மீடியாக்களில் வந்தது. அது தான் நியாயமும் கூட.

ஆனால் இப்போது அதே சூர்யா சேதுபதி, ‘பீனிக்ஸ்’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக புரமோட் ஆகியுள்ளார். ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இப்படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமாகிறார். அனல் அரசுவின்  மனைவி ராஜலட்சுமி அனல் அரசு தான் படத்தின் தயாரிப்பாளர்.

‘பீனிக்ஸ்’ மூலம் தனது மகன் ஹீரோவாக அறிமுகமானதால் ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறார் விஜய் சேதுபதி. ஒரு தகப்பனாக அவரது மகிழ்ச்சியும் நியாயமானது தான், தேவையானது தான்.

இனிமே விஜய் சேதுபதியின் தப்பான வில்லங்க ஆட்டத்திற்கு வருவோம். அதாகப்பட்டது, இந்த ‘பீனிக்ஸ்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னையில்  [ ஜூன்.16 தந்தையர் தினம்  ] நடந்தது. இதற்காக பத்திரிகையாளர்களுக்கு  அழைப்பும், படத்தின் பி.ஆர்.ஓ ரியாஸ் அஹமதுவிடமிருந்து வந்தது.

அதில் சூர்யா, விக்னேஷ், அபிநட்சதிரா நடிக்கும் ‘பீனிக்ஸ்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளுமாறு வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பியிருந்தார் ரியாஸ். நமக்கோ பெருங்குழப்பம். சூர்யா இப்போது ‘கங்குவா’ படத்துல நடிச்சு முடிச்சிருக்காரு. அடுத்து சுதா கொங்கரா டைரக்‌ஷன்ல ஒரு படத்துல நடிப்பது உறுதியாகிருச்சு. இதுக்கடுத்து வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்துல நடிக்கப் போறதா ஒரு பேச்சு இருக்கு. ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு டைரக்ட் பண்ணும் படத்துல எப்ப கமிட்டானார் சூர்யான்னு குழப்பமோ குழப்பம், பெருங்குழப்பம்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

சூர்யா சேதுபதி, ‘பீனிக்ஸ்’
சூர்யா சேதுபதி, ‘பீனிக்ஸ்’

சரி, போய்த்தான் பார்ப்போமேன்னு விழா நடந்த லி மேஜிக் லேண்டர்ன் தியேட்டருக்குப் போனோம்.  தங்களின் மகனுக்காக தந்தை விஜய் சேதுபதியும் தாய் ஜெஸ்ஸியும் வந்திருந்தார்கள். இருவரின் முகத்திலும் அப்படி ஒரு பூரிப்பு.

அன்றைய தினம் தந்தையர் தினம் மற்றும் டைரக்டர் அனல் அரசுவின் பிறந்த தினம் என்பதால், டிரைலர் ரிலீசுக்கு முன்பாக பிறந்த தினம் கேக் வெட்ட விஜய் சேதுபதியை மேடைக்கு அழைத்தார் விழா தொகுப்பாளரான ஒரு தம்பி. அப்போது சூர்யா விஜய் சேதுபதி என முழுப்பெயரையும் சொல்லிவிட்டார் அந்த தம்பி. உடனே அந்த தம்பியின் கையைப் பிடித்து இழுத்து காதுக்குள் ஏதோ சொன்னார் விஜய் சேதுபதி.

சூர்யா விஜய் சேதுபதி
சூர்யா விஜய் சேதுபதி

கேக் வெட்டி முடித்ததும், “இப்போது சூர்யா நடிக்கும் பீனிக்ஸ் டிரைலர் வெளியிடப்படுகிறது” என்றார் அந்த தம்பி. ’அறிமுகம் சூர்யா’ என்று மட்டும் தான் டிரைலரிலும் போட்டார்கள்.

ஏற்கனவே இருக்கும் பெரிய ஹீரோ சூர்யா மீது விஜய் சேதுபதிக்கு அப்படி என்ன கோபமோ, காட்டமோ, கடுப்போ….

– மதுரை மாறன்

 

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.