அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா – பேனர் கிழிப்பு – சிறப்பு எஸ்.ஐ. உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

குளித்தலை அருகே பொய்யாமணி, அம்பேத்கர் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா. வரவேற்பு பிளக்ஸ் போர்டுகளை கிழித்தெறிந்து, தெருவுக்குள் புகுந்து தாக்கிய சம்பவத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது மகன் விஷ்வா உட்பட 15 க்கும் மேற்பட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் குளித்தலை போலீசார் வழக்கு பதிவு. 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

மாரியம்மன் - கோவில்
மாரியம்மன் – கோவில்

 

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம் பொய்யாமணி பஞ்சாயத்து பொய்யாமணி அம்பேத்கர் நகரில் கடந்த 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை‌ காலை மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பக்தர்கள் வரவேற்று அம்பேத்கர் நகர் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பிளக்ஸ் போர்டுகளை வைத்திருந்தனர். அதனை அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தை சேர்ந்த சிலர் எப்படி நீங்கள் வரவேற்பு பிளக்ஸ் வைக்கலாம் என கூறி அதனை ‌ கிழித்து எறிந்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதை அடுத்து கடந்த 13 ஆம் தேதி இரு சமூகத்தினரின் முக்கிய பிரமுகர்கள் ஒன்று சேர்ந்து பிரச்சனையை சமூகமாக பேசி முடித்துவைத்தனர். இதை அடுத்து கடந்த 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை அம்பேத்கர் நகருக்குள் சென்ற ஒரு பிரிவினர் அங்குள்ளவர்களை குச்சியாலும் கல்லாலும் தாக்கியுள்ளனர். சினிமா சண்டைக் காட்சிகள் போல நடந்த இந்த சம்பவத்தில்
அம்பேத்கார் நகரைச் சேர்ந்த 10 மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சம்பவம் அறிந்ததும் குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் அதிரடி போலீசார் மற்றும் குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு அமைதியை ஏற்படுத்தினர்.

இந்நிலையில் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த வையாபுரி மகன் சிவப்பிரகாஷ் வயது 38 என்பவர் குளித்தலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரியின் பேரில் பொய்யா மணியை சேர்ந்தவர் ஏவுரி. இவர் குளித்தலை அருகே லாலாபேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார்.

Banner Tearing - Special SI Case against 15 people included!
Banner Tearing – Special SI Case against 15 people included!

இவருக்கு மகன் விஷ்வா. உட்பட 15 க்கும் மேற்பட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய

1. மகாமுனி மகன் மகாலிங்கம் வயது 27.
2. நடராஜன் மகன் கணேஷ் வயது 27.
3. ராஜகோபால் மகன் பிரசன்னா வயது 22.
4. சுரேஷ் மகன் கதிரவன் வயது 18.
5. ஆண்டியப்பன் மகன் ராஜலிங்கம் வயது 25.
6. ராஜகோபால் மகன் அரவிந்த் வயது 25.
7. ராஜா மகன் யுவராஜ் வயது 22.
8. சுந்தரம் மகன் பரத் வயது 28.
9. தனக்கோடி மகன் நவநீதன் வயது 52.

ஆகிய 9 பேரை குளித்தலை போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மற்றவர்களை தேடி வருகின்றனர்.

நவ்ஷாத்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.