“எனது வாழ்வும் அரசியலும் தான் ‘வாழை’ படம்” -டைரக்டர் மாரி செல்வராஜ் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

“எனது வாழ்வும் அரசியலும் தான் ‘வாழை’ படம்” –டைரக்டர் மாரி செல்வராஜ்!

Navvi Studios நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar, Farmer’s Master Plan Production வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட, புதுமுக குழந்தை நட்சத்திரங்களுடன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, கலையரசன், கர்ணன் ஜானகி ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்க, மனதை மயக்கும் ஒரு மாறுபட்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ‘வாழை’. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் மாரி செல்வராஜ் தனது நான்காவது படைப்பாக இப்படத்தினை இயக்கியுள்ளார்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

திரைப்படம் 'வாழை'
திரைப்படம் ‘வாழை’

ஆகஸ்டில் ரிலீஸாகும் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் ஜூலை 18 அன்று சென்னையில் நடைபெற்றது.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

இந்நிகழ்ச்சியில் பேசியவர்கள்….

Disney+ Hotstar பிரதீப் மில்ராய்
“ஒரு சின்னப்படமாகத் தான் ஆரம்பமானது வாழை. ஹாட்ஸ்டாருக்காக ஆரம்பித்து இப்போது திரையரங்குக்குக் கொண்டு வருகிறோம். ரெட் ஜெயண்ட் மூவிஸ் செண்பகமூர்த்தி சாருக்கு நன்றி. வாழை மாரி செல்வராஜ் எனும் நாயகனின் கதை, அவர் வாழ்வில் அவர் பட்ட கஷ்டத்தைச் சொல்லும் படைப்பு இது. இது போல் இன்னும் பல நல்ல படங்கள் செய்வோம்”.

நடிகை திவ்யா துரைசாமி
“நான் ரொம்ப நாள் எதிர்பார்த்த மேடை இது. மாரி சார் கால் பண்ணிச் சொல்லும் போது, என்னோட ட்ரீம் புராஜக்ட் இது, இந்தப்படத்துக்கு முழுமையான உழைப்பைத் தந்தால், உன் கேரியரில் நல்ல படத்தைத் தருவேன் என்றார். அந்த நொடியிலிருந்து நான் என்னை சரண்டர் பண்ணி விட்டேன். இந்தப்படத்தில் நான் இருக்கக் காரணம் மாரி சார் தான். அவரிடம் நான் நல்லா நடிக்கிறேனா எனக் கூட கேட்டதில்லை, நன்றி சொன்னதுமில்லை. படத்தின் படப்பிடிப்பு முடிந்த நாளில் பாராட்டினார்.எல்லாவற்றிற்கும் நன்றி சார். இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்”.

திரைப்படம் 'வாழை'
திரைப்படம் ‘வாழை’

நடிகர் கலையரசன்
“வாழை தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக இருக்கும். உங்களுக்கும் இந்தப்படம் புது அனுபவமாக இருக்கும்”.

நடிகை நிகிலா விமல்,
“என் கேரியரில் இது மிக முக்கியமான படமாக இருக்கும். நான் நடித்ததை விட என்னுடன் நடித்த அந்த இரண்டு சிறுவர்கள் நடிப்பைத் திரையில் பார்க்க ஆவலாக இருக்கிறேன். இந்த வாய்ப்பு தந்த மாரி சாருக்கு நன்றி. இது ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும் நன்றி”.

நிகிலா விமல்
நிகிலா விமல்

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு,
“இந்த மேடையில் இருக்கும் கபாலி தந்த ரஞ்சித், கர்ணன் தந்த மாரி செல்வராஜ் இருவரையும் ஆத்மார்த்தமாக வாழ்த்துகிறேன். இந்தப்படத்தின் பாடல்களைப் பார்த்தேன். சந்தோஷ் நாராயணன் மாரி இருவரிடமும் ஒரு மேஜிக் இருக்கிறது. பாடல்கள் எல்லாம் அவ்வளவு நன்றாக வந்துள்ளது. மிகப்பெரிய சாதனைகள் படைக்கும் படைப்பாக இப்படம் இருக்கும். ஹாட்ஸ்டாரில் மட்டுமல்லாது, திரையரங்கிற்குக் கொண்டு வாருங்கள் என்றேன், அதை நிறைவேற்றிய மாரிக்கு நன்றி. இந்தப்படம் மிகச்சிறந்த வெற்றிப்படமாக இருக்கும்”.

இயக்குநர் பா. இரஞ்சித்,
“தயாரிப்பாளர் கிடைக்காமல் அலைந்த மாரி இன்று தயாரிப்பாளராக மாறியிருப்பது மகிழ்ச்சி. பரியேறும் பெருமாள் எனும் கனமிக்க படைப்புடன் வந்த மாரி, தன் சொந்த தயாரிப்பில், தன் மனதுக்குப் பிடித்த ஒரு நல்ல படத்தை உருவாக்கியிருப்பான் என நினைக்கிறேன். இப்போது கண்டண்ட் உள்ள படங்களை வெளியிடுவதும், டிஜிட்டல் ரைட்ஸ் விற்பதும் பெரிய பிரச்சனையாக உள்ளது. இந்தப் படத்தை ஹாஸ்டார் தயாரித்ததால் மாரி தப்பிவிட்டான் என்றே நினைக்கிறேன். இப்போது சினிமாவில் நல்ல படங்களை வெளியிடுவதில் உள்ள பிரச்சனைகளை அனைவரும் பேச வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தப்படத்தில் சந்தோஷ் நாராயணன் நல்ல இசையைத் தந்துள்ளார். படக்குழு நல்ல உழைப்பைத் தந்துள்ளனர். இயக்குநர் ராம், மாரியின் வழிகாட்டியாக இருக்கிறார். வாழை மிகச்சிறந்த படைப்பாக இருக்கும் வாழ்த்துக்கள்”.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

திவ்யா துரைசாமி
திவ்யா துரைசாமி

இயக்குநர் ராம், “பரியேறும் பெருமாளுக்குப் பிறகு மாரி செல்வராஜ் பல மலைகள் ஏறிக்கொண்டே இருக்கிறான். அவன் பேசிக்கொண்டே இருப்பான் அதை நாம் கேட்டுத்தான் ஆக வேண்டும். அது காலத்தின் கட்டாயம். அவன் இன்னும் பல உயரம் அடைய வாழ்த்துக்கள். அவனுக்குத் துணையாக இருக்கும் குடும்பத்திற்கு என் வாழ்த்துக்கள்”.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்
“இது எனக்கு ஸ்பெஷல் படம், எனக்கு மிகப் பிடித்த படம். ரஞ்சித் தான் பரியேறும் பெருமாள் படம் பற்றிச் சொன்னார். இதே இடத்தில் தான் பரியேறும் பெருமாள் பற்றி நிறையப் பேசினேன். இப்போது வாழைக்காகப் பேசுகிறேன். பரியேறும் பெருமாள் போலவே வாழை பார்த்தும் வியந்து விட்டேன். இந்தப்படம் தமிழ் சினிமாவின் 5 சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும். இந்த திரைப்படத்தை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பீர்கள் என்று நம்புகிறேன்”.

இயக்குநர் மாரி செல்வராஜ்,
“பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்ன்ன் படங்களுக்கு நீங்கள் தந்த ஆதரவு தான், இம்மாதிரியான படைப்புகளை மக்களிடம் எடுத்துச் செல்ல, ஊக்கமாக இருந்தது. முதலில் உங்களுக்கு நன்றி. இங்கு மேடையில் நான் பணியாற்றிய ரஞ்சித் சார், செண்பக மூர்த்தி சார், கலைப்புலி தாணு சார் என எல்லோரும் இருக்கிறார்கள். அவர்களிடம் மீண்டும் இணைந்து பணியாற்றவுள்ளேன். என் அரசியல் தெரிந்து கொண்டவர்கள் என்னுடன் தொடர்ந்து பணியாற்றுவது, என்னைப் புரிந்து கொண்டு ஆதரவு தருவது மிகப் பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. இயக்குநர் ராம் சார் இருக்கும் தைரியம் தான் என்னை வழிநடத்திக் கொண்டிருக்கிறது. உன்னுடைய கதை உணர்ச்சிகள் கொண்டது அதை என்றும் விட்டு விடாதே என்று அறிவுரை சொல்வார். ஒவ்வொரு நடவடிக்கையிலும் அவரின் பங்கு இருக்கிறது அவருக்கு என் நன்றிகள். உதயநிதி சார் மாமன்னன் ஷூட்டிங் சமயத்தில் வாழைப் படத்தைப் பார்த்து விட்டார்.

director mari selvaraj
director mari selvaraj

படத்தைப் பார்த்து விட்டு இந்தப் படத்தை நான் திரையரங்கில் வெளியிடுகிறேன் என்றார். சென்பகமூர்த்தி சார் எப்போதும் என்னை நன்றாகப் பார்த்துக் கொள்வார், மாமன்னனில் நன்றாகப் பார்த்துக் கொண்டார். வாழை படம் அவருக்குப் பிடிக்குமா ? என்று சந்தேகத்திலிருந்தேன். அவர் படம் பார்த்துவிட்டு, இரண்டு மணி நேரம் பேசவில்லை. அதன் பிறகு இந்தப் படத்தில் நான் கண்டிப்பாக இருக்க வேண்டும் படத்தைத் திரையரங்குக்குக் கொண்டு வருகிறேன் என்று சொல்லி அவர் தான் இந்தப் படத்தை திரையரங்கிற்குக் கொண்டு வந்துள்ளார் அவருக்கு என் நன்றிகள்.

சந்தோஷ் நாராயணன் முதல் படத்திலிருந்து மிக நெருங்கிய நண்பர். எங்கள் கூட்டணியில் பாடல்கள் நன்றாக இருப்பதாகச் சொல்கிறார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் விதம்தான் காரணம்.அட்டகாசமாகப் பாடல்களைத் தந்துவிட்டார். நன்றி. கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் எல்லோருமே மிக அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார்கள். இது என்னுடைய வாழ்க்கை கதை, நான் பட்ட கஷ்டத்தை அவர்கள் பட வேண்டும் என்று முதலிலேயே சொல்லிவிட்டேன்.

திரைப்படம் 'வாழை'
திரைப்படம் ‘வாழை’

நான் வாழ்க்கையில் என்ன கஷ்டம் பட்டேனோ, அதை நீங்கள் இந்த படத்தில் பட்டால் தான், அந்த வலி தெரியும் என்று சொல்லித் தான் அவர்களை நடிக்க வைத்தேன். மிக அட்டகாசமாக நடித்துள்ளார்கள். நான் அடுத்த படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், எந்த கேள்விகளும் கேட்காமல், இந்த படத்தைத் தயாரிப்பதில் முழுமையான சுதந்திரத்தைத் தந்த, ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்கு எனது நன்றிகள். என் மனைவி திவ்யா இந்த படம் மூலம் தயாரிப்பாளராகியிருக்கிறார். இது என்னுடைய வாழ்க்கை கதை. இந்தக் கதை திரைப்படமாக வரும் போது, அதில் அவர் பெயர் வருவது மிக முக்கியம் எனக்கருதுகிறேன்.

அவர் ஒரு சினிமா ரசிகையாக இருந்தார். அதுதான் அவரையும் என்னையும் இணைத்தது. தயாரிப்பாளராக அவர் பெயர் வருவது பெருமையாக உள்ளது. என்னையும் என் அரசியலையும் புரிந்து கொள்வதற்காக மட்டுமே எடுக்கப்பட்ட திரைப்படம் வாழை. இந்த படத்தைப் பார்த்து முடிக்கும் போது, உங்களுக்கு என்னைப் பற்றி முழுதாக புரியும். இந்த படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்”.

சிறுவர்கள் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி, தயாரிப்பாளரும் நடிகருமான ஜே சதீஷ் குமார் மற்றும் கர்ணன் ஜானகி அம்மா முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

திரைப்படம் 'வாழை'
திரைப்படம் ‘வாழை’

படக் குழு விபரம் :

எழுத்து இயக்கம் – மாரி செல்வராஜ்,
ஒளிப்பதிவு – தேனி ஈஸ்வர்,
இசை – சந்தோஷ் நாராயணன்,
கலை இயக்கம் – குமார் கங்கப்பன்,
படத்தொகுப்பு – சூரிய பிரதமான்,
சண்டைப்பயிற்சி – திலீப் சுப்பராயன்,
நடனம் – சாண்டி,
பாடல்கள் – யுகபாரதி, விவேக், மாரி செல்வராஜ்,
உடை வடிவமைப்பு – ஶ்ரீ ஸ்வர்ணா,
ஒலி வடிவமைப்பு – சுரேன் G,
ஸ்டில்ஸ் – ஜெய்குமார் வைரவன்,
உடைகள் – ரவி தேவராஜ்,
மேக்கப் – R கணபதி,
விளம்பர வடிவமைப்பு – கபிலன் செல்லையா,
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM),
எக்ஸிக்யூட்டிவ் புரோடியூசர் – வெங்கட் ஆறுமுகம்,
தயாரிப்பாளர் – திவ்யா மாரிசெல்வராஜ், மாரி செல்வராஜ்,

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.