சர்ச்சைக்குள் சிக்கிய சிவகாசி இளைஞர் கொலை விவகாரம் 3 பேர் கைது !
சர்ச்சைக்குள் சிக்கிய சிவகாசி இளைஞர் கொலை விவகாரம் 3 பேர் கைது – காவல்துறையினரின் முதல் தகவல் அறிக்கையின் படி ஆணவக் கொலை என செய்தி வெளியிட்ட முன்னணி தொலைக்காட்சிகள் இந்த சம்பவத்திற்கு ஆணவ கொலை காரணம் இல்லை என மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்ட விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா காலனியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் கார்த்திக் பாண்டியன் (26) சிவகாசி ரிசர்வ் லைன் பகுதியில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். மேலும் அதே பகுதியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும்.
சிவகாசி வம்பு இழுத்தான் மூக்கு பகுதியைச் சேர்ந்த பொன்னையா என்பவரின் மகள் நந்தினி (22) ஆகிய இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக நந்தினியின் பெற்றோர் மட்டும் அவரது சகோதரர் எதிர்ப்பை மீறி திருமணம் நடந்து அய்யம்பட்டி என்ற கிராமத்தில் தனியாக வீடு எடுத்து ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
சம்பவத்தன்று நேற்று வழக்கம்போல் நந்தினி சூப்பர் மார்க்கெட்டில் பணி முடிந்து அவரை அழைத்துச் செல்ல தங்கபாண்டியன் வெளியே காத்திருந்துள்ளார்,
அப்போது இரு சக்கர வாகனத்தில் மாஸ்க் அணிந்து வந்த 3 மர்ம நபர்கள் நந்தினியின் கண் முன்னே கார்த்திக் பாண்டியனை சரமாரியாக வெட்டி தப்பிச் சென்றனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கார்த்திக் பாண்டியன் துடிதுடிக்க சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த சம்பவம் தொடர்பாக திருத்தங்கள் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கார்த்திக் பாண்டியனின் உடலை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை நடந்த சம்பவ இடத்தை விருதுநகர் மாவட்ட கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் சுப்பையா ஆகியோர் நேரில் ஆய்வு செய்து முதற்கட்ட விசாரணையில் நந்தினியின் அண்ணன் பாலமுருகன், மற்றும் அவரது நண்பர்கள் தனபால், சிவா, ஆகிய மூவரும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது .

அவர்களை கைது செய்து அளித்த வாக்குமூலத்தில், நந்தினி காதல் திருமணம் செய்தது விருப்பம் இல்லாமல் குடும்பத்தில் பிரச்சனையாக இருந்த போதும் என்னுடைய மற்றொரு தங்கையும் காதல் திருமணம் செய்த ஆத்திரத்தால் அதற்கு இவர்கள் உடந்தையாக இருந்ததற்காக கார்த்திக் பாண்டியனை கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அந்த மூவரையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆச்சார்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த கொலை தொடர்பாக பிற முன்னணி தனியார் தொலைக்காட்சிகளில் முதல் தகவல் அறிக்கையின் படி ஆணவ கொலை என முதலில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது இதற்கு மறுப்பு தெரிவித்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த சம்பவம் ஆனது ஆணவக் கொலை கிடையாது முன்பகை காரணமாகவே நடந்துள்ளது என மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
– மாரீஸ்வரன்