அங்குசம் பார்வையில் ‘போட்’ படத்தின் திரை விமர்சனம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அங்குசம் பார்வையில் ‘போட்’ படத்தின் திரை விமர்சனம் ! தயாரிப்பு: ‘மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ்’ & சிம்புதேவன் எண்டெர்டெய்ன்மெண்ட்’. பிரபா பிரேம்குமார், சி.கலைவாணி. டைரக்‌ஷன் : சிம்புதேவன். தமிழ்நாடு ரிலீஸ் : சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன். நடிகர்—நடிகைகள் : யோகிபாபு, கெளரி கிஷன், எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த், மதுமிதா, சாம், ஷா ரா, குலப்புளி லீலா, அக்‌ஷத். தொழில்நுட்பக் கலைஞர்கள்—ஒளிப்பதிவு: மாதேஷ் மாணிக்கம், இசை: ஜிப்ரான், புரொடக்‌ஷன் டிசைனர் ; டி.சந்தானம் எடிட்டிங்; தினேஷ் பொன்ராஜ், ஆர்ட் டைரக்டர் : எஸ்.அய்யப்பன், எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர் : வேல்.கருப்பசாமி, பி.ஆர்.ஓ.: நிகில் முருகன்.

அங்குசம் பார்வையில் போட் படம்
அங்குசம் பார்வையில் போட் படம்

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

இந்தியாவில் முதல்முறையாக முழுக்க முழுக்க [ படத்தின் ஆரம்பத்திலும் க்ளைமாக்சிலும் வரும் 15 நிமிட காட்சிகள் தவிர ] கடலில் எடுக்கப்பட்டது என்ற பெருமையுடன் வந்திருக்கிறது இந்த ‘போட்’.

1943 இரண்டாம் உலகப்போர் நடந்த போது இருந்த மெட்ராஸ்  [ அப்போது  மெட்ராஸ் தானே ] தான் கதைக்களம். ஜப்பான் போர் விமானங்கள் சென்னையில் குண்டு வீசப் போவதாக கிடைத்த பகீர் தகவலால் மெட்ராஸ் மக்கள் பதறி ஓடுகிறார்கள். வெள்ளைக்காரர்களிடம் சிக்கிக் கொண்ட தனது தம்பியை மீட்க வரும் முத்தையா [ யோகி பாபு]வும் அவரது பாட்டி குலப்புளி லீலாவும் இந்த பீதியால் தங்களது படகை நோக்கி கடலுக்குள் ஓடுகிறார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

ஆந்திராவைச் சேர்ந்த விஜயா [ மதுமிதா ], கேரளாவைச் சேர்ந்த ராஜா [ ஷா ரா ], சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஐயர் நாராயணன் [ சின்னிஜெயந்த் ] அவரது மகள் லட்சுமி [ கெளரி கிஷன் ], நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த முத்தையா [ எம்.எஸ்.பாஸ்கர் ] மார்வாடி லால் சேட் [ சாம் ] ஆகியோரும் யோகிபாபுவிடம் உயிர்ப்பிச்சை கேட்டு அந்தப் படகில் ஏறுகிறார்கள்.

யோகிபாபுவும் மற்றவர்களும் ஜப்பான் குண்டு வீச்சிலிருந்து தப்பினார்களா? இதான் இந்த Boat-ன்  Behind of the True Incidents .

முதலில் டைரக்டர் சிம்புதேவனுக்கும் கேமராமேன் மாதேஷ் மாணிக்கத்திற்கும் இவர்களுடன் சரிக்குச் சமமாக உழைத்த மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டையும் வாழ்த்தையும் சொல்லிவிடுவோம். ஏன்னா தரையில படம் எடுத்து ரிலீஸ் பண்றதுக்குள்ளயே அவனவனுக்கு தாவு தீர்ந்து போகுது. ஆனால் இந்த ‘போட்’ டை கடலிலேயே எடுப்பதுன்னா சாதாரணமா?

இப்ப மற்ற சங்கதிக்கு வருவோம்… படத்தின் ஹீரோ யார்னா.. டைரக்டர் சிம்புதேவனின் அரசியல் உள்ளுணர்வும் அதன் எதிரொலியாக ஒலிக்கும் பளீர் வசனங்களும் தான். 1943-ல் கதை நடந்தாலும் இப்போதைய அரசியல் அவலம், கார்ப்பரேட் கபளீகரம் இவற்றை கச்சிதமாகப் பொருத்தி வசனம் என்ற கத்தியைச் சொருகியிருப்பதில் தான் சிம்புதேவனின் சாமர்த்தியம் தெரிகிறது, புரிகிறது.

அங்குசம் பார்வையில் ‘போட்’
அங்குசம் பார்வையில் ‘போட்’

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

உதாரணத்திற்குச் சில வசன சாட்டையடிகள்..

“எழுச்சி… உங்களுக்கு..? என்னய்யா பெரிய எழுச்சி.. ஹரிதாஸ் படத்தை எப்படிய்யா ரெண்டு தீபாவளி வரைக்கும் ஓட்டுனீக? இதுலயிருந்தே தெரிஞ்சு போச்சுயா உங்க எழுச்சி..”

“அயோக்கியர்களுக்குத் தாண்டா போராளிகளைப் பார்த்தா தீவிரவாதிகளாத் தெரியும்”

“டொமாட்டோ, சொமாட்டோன்னு பேர் வச்சா வியாபாரம் பிச்சுக்கிட்டுப் போகுது..”

“பாரதியார் ஒங்க ஆளுக தானே…”

“இங்க இந்துவும் முஸ்லிமும் தாயா புள்ளையாத் தாண்டா இருக்கோம். நீங்க தாண்டா புதுசா ஒரு சாமியைக் கொண்டு வந்து கலவரம் பண்றீக”

அதே போல் சென்னை பாஷையின் கானா பாடலை கர்நாடக இசையுடன் மிக்ஸ் பண்ணி ஜிப்ரான் போட்ருக்காரே ஒரு பாட்டு.. அதான் சிம்புதேவன்னு சபாஷ் போட வைக்குது.

இது போன்ற இன்னும் பல பளீர் சுளீர் வசனங்கள் படத்தில் இருக்கத்தான் செய்யுது. ஆனா என்ன ஒண்ணு போட்டில் ஒன்பது பேர் உட்கார்ந்து மாறி மாறி பேசுவது தான் பெரும் சலிப்பு. ஆனாலும் டைரக்டர் சிம்புதேவனுக்கு வேற வழியே இல்லை என்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இருந்தாலும் மெஜாரிட்டியாக இருக்கும் சாதாரண சினிமா ரசிகனுக்கு இந்த ‘போட்’ பயணம் அலுப்பைத் தான் தரும். இந்த உண்மையையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

அதே போல் இந்தக் கதையின் நாயகனாக யோகி பாபுவை ஓரளவு தான் ஏற்றுக் கொள்ள முடிகிறதே தவிர முழுதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த ‘போட்—ஐ பத்திரமாகவும் சுவாரஸ்யமாகவும் கொண்டு செல்லும் அளவுக்கு துடுப்பு போடும் வலிமை துளியளவும் யோகிபாபுவுக்கு இல்லை என்பது தான் உண்மை. இதில் கெளரி கிஷன் –யோகிபாபுவுக்கிடையில் மெல்லிதாக லவ் ட்ராக் வேற. இதில் உச்சபட்ச டிராஜெடி என்னன்னா.. முத்தையாவாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், போட்டில் இருந்தபடியே குபீர்னு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் காஸ்ட்யூமுக்கு மாறி, இந்தியன் தாத்தா ஸ்டைலில் வெள்ளைக்காரனுக்கு வர்மக்குத்து குத்துறது தான்.

 –மதுரை மாறன்    

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.