எந்த சிக்கலும் இல்லாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசம் செய்த இருக்கன்குடி கோவில் திருவிழா !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

லட்சக்கணக்கான பக்தர்களுடன் நடைபெற்ற இருக்கன்குடி கோவில் திருவிழா ஒரு வழக்கு கூட இல்லாமல் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை – விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட தென் தமிழ்நாட்டில் மிகப் பிரபலமான ஆன்மீகத் தளம் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் இக்கோவிலில் வருடம் தோறும், ஆடி கடைசி வெள்ளி மிக முக்கிய விசேஷமான நாட்களாக உள்ளது.

சாமி தரிசனம் செய்ய பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் பாதையாத்திரை மற்றும் அரசு இயக்கும் சிறப்பு பேருந்து மூலமாகவும், லட்சக்கணக்கான மக்கள் அக்கினி சட்டி முடி காணிக்கை செலுத்துதல் போன்ற பல்வேறு வகையான நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இத்திருத்தலத்தில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கப்பட்டது.  முன்னதாக இக்கோவிலில் பாரம்பரியமாக நடக்கும் சில முக்கிய திருவிழா நிகழ்வுகளில் இரு சமுதாயத்தைச் சேர்ந்த ஊர் பெரியவர்கள் பங்கேற்று சிறப்பிப்பது வழக்கம்.

கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோயில் நிர்வாகம், அதிகாரிகள் முன்னிலையில் மற்றும் இரு சமுதாயத்தினரிடம் பேச்சு வார்த்தை
கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோயில் நிர்வாகம், அதிகாரிகள் முன்னிலையில் மற்றும் இரு சமுதாயத்தினரிடம் பேச்சு வார்த்தை

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் தனித்தனியாக இரு வேறு கோயில்களை குறிப்பிட்டு கோவில்களில் முதல் மரியாதை தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கில் நீதிபதிகள் உத்தரவில் கோவிலில் சாமிக்கு தான் முதல் மரியாதை தனிநபருக்கு இல்லை என்றும் கோவிலில் முதல் மரியாதை என்ற பெயரில் தனி நபர்களுக்கு ஜாதி அடையாளத்துடனும், தலைப்பாகை கட்டுவது குடை பிடிப்பது போன்ற நிகழ்வுகளுக்கு இந்த நீதிமன்றம் தடை விதிப்பதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கொடியேற்ற நிகழ்வு
கொடியேற்ற நிகழ்வு

இந்த வழக்கை காரணம் காட்டி இருக்கன்குடி கோவிலில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடக்கவிருக்கும் ஒரு சமுதாயத்தினரின் பரிவட்டம் கட்டும் நிகழ்வினை நீதிமன்ற வழக்கை முன்னிறுத்தி கோயில் நிர்வாகத்தினர் மற்றும் அறநிலைத்துறை அதிகாரிகள் அந்த நிகழ்வினை நடத்த முடியாது என தெரிவித்திருந்தனர்.

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சாத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதில் இரு சமூகத்தைச் சேர்ந்த பெரியவர்கள் கோட்டாட்சியர், தாசில்தார், காவல்துறையினர், கலந்து கொண்டு இரு வேறு தேதிகளில் இரண்டு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் ரிஷப வாகன ஊர்வலம்
காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் ரிஷப வாகன ஊர்வலம்

இது குறித்து ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் பாரம்பரிய நிகழ்வுகளுக்கு ஏதும் நீதிமன்றம் தடை விதிக்கவில்லை எனவும் இந்த பிரச்சனை தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும், JC நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் இருப்பதால், எனவே பாரம்பரிய முறைப்படி நிகழ்வுகளை நடத்த தடை ஏதும் விதிக்க வேண்டாம் என குறிப்பிட்ட சமுதாயத்தினர் கோரிக்கை வைக்கவே இதைக் கோயில் நிர்வாகமும் அதிகாரிகளும் மறுத்து வந்த நிலையில், இந்த இரண்டு சமாதான கூட்டங்களிலும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால். குறிப்பிட்ட சமுதாயத்தினர் இந்த விவகாரம் தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர்.

கோவிலில் பாதுகாப்பு தொடர்பான  ஆய்வு பணியில் முன்னாள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
கோவிலில் பாதுகாப்பு தொடர்பான ஆய்வு பணியில் முன்னாள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

அது தொடர்பாக சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இறுதியாக நடந்த கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, மற்றும் சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில், நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பழைய முறைப்படி அனைத்து நிகழ்வுகளும் நடத்திக் கொள்ளலாம் என அனுமதி கொடுக்கப்பட்டதால் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவை எட்டி திருவிழா நடைபெற தொடங்கியது .

அதேசமயம் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா மாற்றப்பட்டு புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கண்ணன், நியமிக்கப்பட்டு,சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், மேலும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் என 1500க்கும் மேற்பட்ட ஆண், பெண், காவல்துறையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அவசர ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட்ட பக்தர்கள்
அவசர ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட்ட பக்தர்கள்

லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவதால்  ஜாதி ரீதியிலான மோதல்கள் சட்ட ஒழுங்கு, திருட்டு சம்பவங்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைகள் காவல்துறையினருக்கு சவாலாக இருந்த சூழ்நிலையிலும். ஒரு குற்ற வழக்கு கூட பதிவு செய்யாமல், சிறப்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு அனைவருக்கும் முன்னுதாரணமாக செயல்பட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்களில் பாராட்டுகளை காவல்துறையினர் பெற்று வருகின்றனர்.

– மாரீஸ்வரன் 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.