பிடிஜி யுனிவர்சல்’சி.சி.ஜி.’ டிரைலர் ரிலீஸ் மேட்டர்ஸ் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பிடிஜி யுனிவர்சல்’சி.சி.ஜி.’ டிரைலர் ரிலீஸ் மேட்டர்ஸ் –  வட அமெரிக்காவில் மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கும் தமிழரான பாபி பாலசந்திரன் தமிழ் சினிமாவில் தனது பங்கும் இருக்க வேண்டும் என்ற விரும்பி பிடிஜி யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை துவங்கி, அதன் மூலம் தமிழ்த் திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார்.

இவரது நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட முதலாவது திரைப்படமான ‘டிமான்ட்டி காலனி-II’ இந்த ஆக.15- ஆம் தேதி ரிலீஸாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

இந்நிறுவனத்தின் இரண்டாவது படம் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ். இதில் வைபவ், அதுல்யா ரவி,மணிகண்டா ராஜேஷ், ஆனந்தராஜ், இளவரசு, ஜான் விஜய், சுனில் ரெட்டி, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன்,பிபின், ஹுசைனி,
உள்பட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். முழு படப்பிடிப்பும் முடிந்து வெளியிட்டுக்கு தயாராகியுள்ளது.

BTG Universal
BTG Universal

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

இதனால் இப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா ஆக.18-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. திரைப்பட குழுவினர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இதில் பேசியவர்கள்….

நடிகர் இளவரசு “தயாரிப்பாளர்கள் எனக்கு பேசியதைவிட அதிக சம்பளம் கொடுத்தனர்,நான் திரும்ப கொடுக்கிறேன் என்றவுடன் நாகரிகமாக திரும்ப பெற்றுக் கொண்டனர். இசையமைப்பாளர் திரு டி..இமான் இன்று வளர்ந்து தனக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்துள்ளார். நடிகர் வைபவ் பார்ப்பதற்கு தான் அமைதியான ஆள். ஆனால் பயங்கர சேட்டைக்காரர். அதுல்யா, நடன இயக்குனர் அஜய் ராஜ் மற்றும் படக் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். நல்ல சினிமாக்களை ஆதரியுங்கள். அவை வெற்றி அடைய உதவும் வகையில் நல்ல விமர்சனங்களை எழுதி தமிழ் சினிமா முன்னேற ஊடகவியலாளர்கள் உதவி புரிய வேண்டும் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன்”.

சண்டைப் பயிற்சியாளர் டான் அசோக் “இப்படத்தில் பணிபுரிய வாய்ப்பளித்த தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். வைபவ் அவர்களுடன் இது மூன்றாவது திரைப்படம். சண்டைக் காட்சிகளில் சீரியஸாக இல்லாமல் மிகவும் ஜாலியாக பணியாற்றினோம். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்”.

நடிகர் ரெடின் கிங்ஸ்லி “பிடிஜி யுனிவர்சலின் முதலாவது திரைப்படம் டிமான்டி காலனி-II சிறப்பாக போய்க்கொண்டிருக்கிறது. அடுத்ததாக சென்னை சிட்டி கேங்ஸ்டர் வெளியாக உள்ளது. அடுத்து அருண் விஜய் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்து, இதேபோன்று நிறைய படம் தயாரிக்க வேண்டும் என வேண்டுகிறேன்”.

நடிகர் ஜான் விஜய் “இப்படம் நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாகும். நானும் இளவரசு அவர்களும் நடிக்கும் திரைப்படங்கள் வெற்றியடைந்து வருகின்றன. இத்திரைப்படத்திற்காக அனைவரும் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

நடிகர் ஆனந்தராஜ் “தயாரிப்பாளருக்கு எனது வாழ்த்துக்கள்.. இந்த கம்பெனி சிறிய படங்களை நிறைய தயாரிக்க வேண்டும். இந்த சினிமா நன்றாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். சக நடிகர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படம் வெற்றியடைய ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்”.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

நடிகை அதுல்யா “தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் எனது நன்றிகள். இசையமைப்பாளர் டி இமான் அவர்களுக்கு நன்றி. எங்களது படக்குழு மிகவும் ஜாலியாக இருந்தது. தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் மிக்க நன்றி”.

இயக்குனர் விக்ரம் ராஜேஷ்வர் “இந்த வாய்ப்பளித்த பாபி மற்றும் மனோஜ் பெனோ இருவருக்கும் நன்றிகள். சிறந்த பாடல்களை அளித்த, என்னுடைய பள்ளித் தோழர் டி. இமான் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். படப்பிடிப்பின்போது நன்கு ஒத்துழைப்பு அளித்த வைபவ் மற்றும் அதுல்யாவுக்கும் மிக்க நன்றி”.

இசையமைப்பாளர் D இமான் “பிடிஜி யுனிவர்சல் தயாரிப்பில் இத்திரைப்படத்தில் பணியாற்றியதற்கு மிக்க மகிழ்ச்சி. அவர்கள் பிடிஜி யுனிவர்சல் இசை வெளியீட்டு நிறுவனத்தையும் துவங்கி உள்ளனர். அதன் மூலம் இத்திரைப்படத்தின் பாடல்கள் வெளியாவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும், பாடலாசிரியர்களும், பாடகர்களும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். வைபவ்,அதுல்யா மற்றும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள் “.

நடிகர் வைபவ் “தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரன் மற்றும் மனோஜ் பெனோ இருவருக்கும் மிக்க நன்றி. இங்கு வந்து வாழ்த்திய சகோதரர் அருண் விஜய், இமான், இயக்குனர்கள் மற்றும் சக நடிகர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப்படம் மிகவும் நகைச்சுவை விருந்தாக இருக்கும்”.

தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரன்”எங்களது நிறுவனத்தின் வியூகத் தலைமையாளராக இருக்கும் மனோஜ் பெனோ மற்றும் எங்களது குழுவினர், சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த,எங்களது முதல் திரைப்படமான ‘டிமான்ட்டி காலனி-II இயக்குனர் அஜய் ஞானமுத்து மற்றும் எங்களது அடுத்த திரைப்படம் ஆன ‘ரெட்ட தல’ திரைப்படத்தின் ஹீரோ அருண் விஜய் இருவருக்கும் மிக்க நன்றி.

சிறப்பான நடிகர்களை ஒன்றிணைத்து, தரமான நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை அளிக்க வேண்டும் என்ற நோக்கில் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தை எடுத்துள்ளோம். அது உங்களை மகிழ்விக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஊடகத்துறையினர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”.

பிடிஜி யுனிவர்சல் வியூகத் தலைமையாளராக இருக்கும் மனோஜ் பெனோ, “பாபி பாலச்சந்திரனை எனக்கு சிறுவயதிலிருந்தே தெரியும். பாபி இதுவரை ஈடுபட்டிருக்கும் அனைத்து தொழில்களும் வெற்றி அடைந்துள்ளன. அதேபோல இதுவும் வெற்றிடைய வேண்டும் என அவரது தந்தை விரும்பினார்.

“டிமான்ட்டி காலனி-II” திரைப்படம் மூலமாக எங்களுக்கு முதல் வெற்றியை அளித்த இயக்குனர் அஜய் ஞானமுத்துக்கு மனமார்ந்த நன்றிகள். மற்றும் எங்களது அடுத்த படமான சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படமும் வெற்றியடைய வேண்டும். அடுத்த படமான ரெட்டதலயும் 75% படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது.

அதன் ஹீரோ அருண் விஜய் இங்கு வந்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி. விக்ரம் ராஜேஷ்வர் போன்ற புது இயக்குனர்களுக்கு நிறைய வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றன. இந்த திரைப்படம் வெற்றியடைய உங்களது அனைவரது ஆதரவையும் வேண்டுகிறேன்”என்றார்.

இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.