ரயில்வே ஓய்வூதியர் குறைதீர்க்கும் முகாம் !
ரயில்வே ஓய்வூதியர் குறைதீர்க்கும் முகாம் – மதுரை கோட்டத்தில் ரயில்வே ஓய்வூதியர் மற்றும் ரயில்வே குடும்ப ஓய்வூதியர் குறைதீர்க்கும் முகாம் வருகிற டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்த முகாம் டிசம்பர் 16 அன்று காலை 10:30 மணி முதல் மதுரை ரயில்வே கல்யாண மண்டபத்தில் நடைபெறும்.
ஓய்வூதிய குறைபாடுகள், ஓய்வு பெற்ற நாளில் வழங்கப்பட்ட பண பலன்களின் குறைபாடு போன்ற குறைகள் மட்டுமே கணக்கில் எடுக்கப்படும். கொள்கை முடிவுகள், வாரிசுக்கு வேலை, பணியில் ஒழுங்கு நடவடிக்கை, சட்ட பிரச்சினைகள், ஏற்கனவே பதிலளிக்கப்பட்ட குறைகள் ஆகியவை இந்த முகாமில் பரிசீலிக்க தகுதி வாய்ந்தவை அல்ல.
எனவே ரயில்வே ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் தங்கள் பணப்பலன் குறித்த குறைகளை அக்டோபர் 30 ஆம் தேதிக்குள் மதுரை கோட்ட ஊழியர் நல அதிகாரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இந்தக் குறைகள் பரிசீலிக்கப்பட்டு முகாம் நாளன்று பதிலளிக்கப்படும் அல்லது உண்மையிலேயே குறைபாடு இருந்தால் பண பலன்கள் வழங்கப்படும்.
-ஷாகுல்