அங்குசம் சேனலில் இணைய

நடிகை இனியாவின் புது துவக்கம்.. ஆத்ரேயா டான்ஸ் ஸ்டூடியோ – இனியாவின் இனிய அவதாரங்கள்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நடிகை இனியாவின் புது துவக்கம்.. ஆத்ரேயா டான்ஸ் ஸ்டூடியோ – இனியாவின் இனிய அவதாரங்கள்! – ‘வாகை சூடவா’ படத்தின் மூலம் புகழ் பெற்றவர் நடிகை இனியா. நடிப்பு மட்டுமின்றி பலதுறைகளில் கவனம் செலுத்தி வரும் நடிகை இனியா,
ஆத்ரேயா டான்ஸ் ஸ்டுடியோ (AATREYA DANCE STUDIO) என்ற பெயரில் புதிய நடனப் பள்ளியை துவங்கி இருக்கிறார். நடிகை இனியாவின் குரு அருண் நந்தகுமார் ஆத்ரேயா டான்ஸ் ஸ்டுடியோவின் இணை நிறுவனராக உள்ளார்.

துபாயில் உள்ள சர்வதேச வர்த்தக மையத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் நடிகை இனியா மற்றும் அவரது குழுவினர் இணைந்து சிறப்பு நடன நிகழ்ச்சியை நடத்தி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்கள். இதோடு விருது வழங்கும் நிகழ்ச்சியை பின்னணியில் இருந்து நேர்த்தியாக அனைவரும் ரசிக்கும் வகையில் இயக்கி இருக்கிறார் இனியா. இதன் மூலம் ஷோ டைரக்டர் அவதாரமும் எடுத்துள்ளார் இனியா.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

AATREYA DANCE STUDIO
AATREYA DANCE STUDIO

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

நடனத்துறையில் பாரம்பரியம் மற்றும் நவீன கலை இரண்டையும் கலந்து புதுவித கலை வடிவம் கற்பிப்பதில் ஆத்ரேயா டான்ஸ் ஸ்டுடியோ சிறந்து விளங்குகிறது. பல்வகை நடனங்களை கற்றுக் கொடுப்பதோடு, மேடை நிகழ்ச்சிகள், விருது வழங்கும் விழாக்கள், பிரபலங்கள் கலந்து கொள்ளும் விழாக்கள், பிராண்டு அறிமுக நிகழ்வுகள், சிறப்பு விழாக்கள், இசை நிகழ்ச்சிகள் என பலவித நிகழ்ச்சிகளை நடத்துவதிலும் ஆத்ரேயா முழுவீச்சில் செயல்படுகிறது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

ஆத்ரேயா டான்ஸ் ஸ்டுடியோ குழுவினர் சமகால நடனம், செமி கிளாசிக்கல், திரைப்பட நடனம், ஃபியூஷன், கதக், ஒடிசி, அக்ரோபடிக், ஏரியல், லத்தீன் நடனம், ஹிப்ஹாப் நடனம் மற்றும் பண்பாட்டு கலை வடிவங்களை மிக நேர்த்தியாக ஆடும் வல்லமை பெற்றுள்ளனர்.

New journey started with AATREYA DANCE STUDIO
New journey started with AATREYA DANCE STUDIO

நடிகை இனியா, ஏற்கனவே அனோரா ஆர்ட் ஸ்டுடியோ என்ற பெயரில் ஆடை வடிவமைப்பு துறையிலும் ஈடுபட்டுள்ளார். இதன் கிளை மலேசியாவிலும் துவங்கப்பட்டது. டான்ஸ் ஸ்டுடியோவை ஆரம்பித்து விட்டு துபாயிலிருந்து இந்தியா திரும்பிய இனியா, தெலுங்கில் உருவாகும் “ஸ்வீட்டி நாட்டி கிரேஸி” படத்திலும் மலையாளத்தில் “கேங்ஸ் ஆஃப் சுகுமாரகுரூப்” படத்திலும், தமிழில் “சீரன்” என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.