அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திண்டுக்கல் மாநகராட்சி வரிப்பணம் ரூ.4.66 கோடி கையாடல் – இ-சேவை மைய உரிமையாளர் கைது

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திண்டுக்கல் மாநகராட்சியில் மக்கள் வரிப்பணம் ரூ.4.66 கோடியை கையாடல் செய்த விவகாரத்தில் கைதான இளநிலை உதவியாளர் சரவணனுக்கு போலியான வங்கி ஆவணங்களை தயாரித்து கொடுத்த இ-சேவை மைய உரிமையாளர் ரமேஷ்ராஜாவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

போலீசார் விசாரணையில் சரவணனுக்கு வங்கியில் பணம் செலுத்தியது போல் போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்தது வேதாந்திரிநகரைச் சேர்ந்த ரமேஷ்ராஜா என தெரிந்தது. இவர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இ-சேவை மையம் நடத்தி வருகிறார்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

ரமேஷ்ராஜாவும், சரவணனும் பள்ளி காலம் முதல் நண்பர்கள் என்பதும், இருவரும் இணைந்தே இம்மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து ரமேஷ் ராஜாவை மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, எஸ்.ஐ.,கார்த்திகேயன் மற்றும் போலீசார் கைது செய்தனர்.

இவர் மீது விருதுநகரில் தனியார் வங்கியில் வேலை செய்த போது நகை கையாடலில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.