திருச்சி மாவட்டத்தில் அனுமதி பெறாத விடுதிகளுக்கு கலெக்டரின் இறுதி எச்சரிக்கை !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், அறக்கட்டளைகள், சங்கங்கள், மதம் சார்ந்த நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்கள், நிறுவனங்கள் / தொழிற்சாலைகள் தனியார் மற்றும் தனி நபர் ஆகியோரால் நிர்வகிக்கப்படும் மகளிர் தங்கும் விடுதிகள், மகளிர் மற்றும் குழந்தைகள் தங்கும் இல்லங்கள், பள்ளி குழந்தைகளுக்கான விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பெண் குழந்தைகளுக்கான விடுதிகள் பணிபுரியும் பெண்கள்  விடுதிகள் பெண்களுக்கான இல்லங்கள், சிறார் இல்லங்கள், பள்ளி குழந்தைகளுக்கான விடுதிகள், பள்ளியுடன் இணைந்த விடுதிகள் நடத்தும் நிறுவனங்கள் மட்டுமன்றி மதசார்புடைய வேத பாட சாலைகள், மதரஸாக்கள், தேவாலயங்கள் ஆகியவற்றில் தங்கி மதம் / சமயம் சார்ந்த கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் மாணவிகளை உடைய அமைப்புகள் /  விடுதிகள் அனைத்தும் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் (ஒழுங்குமுறை) சட்டம் -2014ன் படி பதிவு செய்து உரிமம் பெறவேண்டும்.

துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து

பிரதீப்குமார் IAS
பிரதீப்குமார் IAS

இவ்வுரிமம் பெறாத விடுதிகள் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதாக கருதப்படும்.  எனவே உரிமம் பெறாத விடுதிகள் https://tnswp.com/ என்ற இணையதளம் வழியாக உரிய ஆவணங்களுடன் 05.10.2024க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

உரிமம் பெறாத விடுதிகள் உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்க தவறினால் விடுதியின் மீது அபராதம் மற்றும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. பலமுறை இவ்வாறு செய்தி வெளியிடப்பட்டும் இதுநாள் வரை உரிமம் பெறாமல் விடுதிகள் இயங்கி வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதுவே இறுதி எச்சரிக்கை என்பது இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள திருச்சிராப்பள்ளி மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி எண் 0431-2413796 என்ற எண்ணை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. என்று மாவட்ட ஆட்சியார் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதையும் படியுங்கள்.. 

இரண்டு வருடங்களுக்கு முன்பு அங்குசம் இணையத்தில் சட்டவிரோத விடுதிகள் குறித்த செய்தி

சட்டவிரோதமான மகளிர் விடுதிகள் ! அதிரும் திருச்சி ! 

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.