மலைக்கோட்டை மாவீரன் ரவுடி பட்டறை சுரேஷ் ! மண்ணை கவ்வியது எப்படி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மலைக்கோட்டை மாவீரன் ரவுடி பட்டறை சுரேஷ் ! மண்ணை கவ்வியது எப்படி !

திருச்சியில் மிகவும் பிரபலமான ரவுடி என்று அறியப்பட்ட பட்டறை சுரேஷ் (எ) மைக்கேல் சுரேஷ் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார். திருச்சி மாவட்ட போலீசாரால் சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட ”ஆப்ரேஷன் அகழி” என்ற சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், நில உரிமையாளர்களை யாரேனும் கட்டப்பஞ்சாயத்து மற்றும் நில அபகரிப்பு செய்யும் நபர்களோ, சரித்திர பதிவேடு குற்றவாளிகளோ நேரடியாகவோ அல்லது தொலைபேசியின் மூலமாக மிரட்டினாலோ அவற்றை ஆடியோ, வீடியோ, CCTV ஆதாரங்களுடன் நேரில் புகார் அளிக்குமாறும் அல்லது திருச்சி எஸ்.பி.யின் உதவி எண் 97874 64651 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு எஸ்.பி. வருண்குமார் அறிவித்திருந்த நிலையில், அதிரடியாக குற்றச்சாட்டுக்குள்ளான ரவுடிகளின் வீடுகளில் போலீசார் ரெய்டு நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

கடந்த செப்-19 ஆம் தேதி இரவு நடத்தப்பட்ட இந்த அதிரடி ரெய்டில், திருச்சியில் மிகவும் பிரபலமான ரவுடிகளில் ஒருவராக அறியப்படுபவரும் இந்திய ஜனநாயக் கட்சியில் (IJK) மாநில இளைஞரணி செயலாளராக பதவி வகித்து வருபவருமான மைக்கேல் சுரேஷ் என்கிற பட்டரை சுரேஷ் வீட்டில் இருந்து மட்டும் 66 அசல் பத்திரங்களை கைப்பற்றியிருந்தார்கள். இவை அனைத்தும் சட்டவிரோதமாக கட்டப்பஞ்சாயத்து மூலமாகவும், கந்து வட்டி தொழில் மூலமாகவும் மிரட்டி பெறப்பட்டவை என்பது விசாரணையில் தெரிய வந்திருப்பதாக போலீசு வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.

ரெய்டு நடவடிக்கையை தொடர்ந்து பட்டறை சுரேஷ் தொடர்புடைய இடங்களிலும் அடுத்தடுத்து சோதனைகளை மேற்கொண்டனர். ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதோடு, ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்கும் காளை மாடுகளையும் பராமரித்து வந்திருக்கிறார், பட்டறை சுரேஷ். முடுக்குப்பட்டியில் உள்ள ஜல்லிக்கட்டு மாடுகளை பராமரித்து வந்த அவரது மாட்டுக் கொட்டகையில் பணியாற்றிய அண்ணாமலை மற்றும் ஏழுமலை ஆகியோர் கடந்த செப்-22 அன்று கைது செய்யப்பட்டார்கள்.

இதனையடுத்தே, குடும்பத்தோடு புதுச்சேரிக்கு தப்பிய நிலையில் புதுச்சேரியில் வைத்தே பட்டறை சுரேஷை தனிப்படை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். திருவெறும்பூர் போலீசு நிலையத்தில் வைத்து, அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பத்திரங்கள் குறித்து போலீசார் விசாரித்து வருவதாக தெரிவிக்கிறார்கள்.

ரவுடிகள் வீட்டில் புகுந்து அள்ளிய பத்திரங்கள்
ரவுடிகள் வீட்டில் புகுந்து அள்ளிய பத்திரங்கள்

திருச்சியில் தனி சாம்ராஜ்யத்தையே கட்டமைத்திருந்த முட்டை ரவியின் இடது – வலது கரங்களில் ஒருவர்தான் பட்டறை சுரேஷ். மண்ணச்சநல்லூர் குணா, சாமிரவி, பட்டறை சுரேஷ் எல்லோருமே அன்றைக்கு முட்டை ரவியுடன் இருந்தவர்கள்தான் என்கிறார்கள். முட்டை ரவி என்கவுண்டருக்குப் பிறகு ஆளுக்கொரு ஏரியா பிரித்துக் கொண்டு அவரவர் ஏரியாவில் அவரவர் கெத்துக்காட்டி வந்ததாக சொல்கிறார்கள்.

இளைய வேந்தருடன் - பட்டரை சுரேஷ்
இளைய வேந்தருடன் – பட்டரை சுரேஷ்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

கோட்டை ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சாமிநாதனை சுட முயன்றது; சேலத்தில் ஒரு கொலை வழக்கு; தூத்துக்குடியில் மணல் குவாரியில் கொள்ளையடித்த வழக்கு என திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் முப்பதுக்கும் அதிகமான வழக்குகளை பட்டறை சுரேஷ்  எதிர்கொண்டு வருகிறார். அவற்றுள் பல வழக்குகளிலிருந்து விடுவிக்கவும் பட்டிருக்கிறார்.

அடுத்தடுத்து குண்டாசில் அடைக்கப்பட்ட நிலையில், திருந்தி வாழ்கிறேன் என்று சொல்லி ஒரு கட்டத்தில் தீவிர ரவுடியிசத்திலிருந்து ஒதுங்கி, அரசியலில் காலெடுத்து வைத்திருக்கிறார் பட்டறை சுரேஷ். இந்திய ஜனநாயக் கட்சியில் (IJK) மாநில இளைஞரணி செயலாளராக பதவி வகித்து வரும் பாரிவேந்தருக்கு மிகவும் நம்பகமான நபராகவும் மாறியிருக்கிறார். அவர் எங்கு சென்றாலும் பட்டறை சுரேஷை உடன் அழைத்துச் செல்லும் அளவுக்கு நெருக்கம் என்கிறார்கள்.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூரில் எம்.பி. வேட்பாளராக பாரிவேந்தர் போட்டியிட்ட சமயத்தில் மொத்த பண பட்டுவாடா விவகாரத்தையும் பட்டறை சுரேஷ்தான் பார்த்துக் கொண்டார் என்கிறார்கள். அப்போதைய கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் நிகழ்ந்த அரசியல் கொலை ஒன்றிலும் பட்டறை சுரேஷின் பங்களிப்பு இருந்ததாகவும் சொல்கிறார்கள்.

இளைய வேந்தருடன் ஆர்பாட்டத்தில்
இளைய வேந்தருடன் ஆர்பாட்டத்தில்

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்றும் ஜல்லிக்கட்டு மாடுகளை பயிற்சியளித்து வளர்ப்பதிலும் ஈடுபாடு காட்டி வந்திருக்கிறார் பட்டறை சுரேஷ். இதற்காக, முடுக்குப்பட்டியில் தனிவீட்டையே கட்டியிருப்பவர், மாட்டுக்கொட்டகைகளையும் பங்களா டைப்பில் கட்டியிருக்கிறார். மாடுகளை பராமரிப்பதற்கென்று ஆட்களையும் நியமித்திருக்கிறார்.

கடந்த ஆண்டு கொம்பன் ஜெகன் என்கவுண்டர் சமயத்தில்கூட, அவனோடு தொடர்புடைய ரவுடிகள் போலீசாரின் கண்காணிப்புக்குள்ளானார்கள். அப்போது, பட்டறை சுரேஷும் விசாரணை வளையத்திற்குள்ளானார். இரவோடு இரவாக காரணமே சொல்லாமல் பட்டறை சுரேஷை போலீசார் தூக்கிவிட்டார்கள். என்கவுண்டர் செய்யப்போகிறார்கள் என்று அப்போது பரபரப்பானது. ஆனால், வழக்கு ஒன்றின் விசாரணைக்காக திருவெறும்பூர் போலீசு நிலையத்தில் வைத்து நான்கு மணிநேரம் டி.எஸ்.பி. விசாரணை நடத்தி அனுப்பி வைத்திருந்தார். அப்போதே, இனி குற்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் என்பதாகவும் எழுதி வாங்கியபிறகே போலீசார் அனுப்பி வைத்திருந்தனர்.

ஜல்லிக்கட்டு பட்டரை சுரேஷ்
ஜல்லிக்கட்டு பட்டரை சுரேஷ்

இந்த பின்னணியில்தான், 66 அசல் பத்திரங்களுடன் தற்போது கைதாகியிருக்கிறார் பட்டறை சுரேஷ். அவையனைத்தும் கட்டப்பஞ்சாயத்து மற்றும் மிரட்டி வாங்கப்பட்டவை என்பதாக போலீசாரின் விசாரணையில் உறுதிபடுத்தப்பட்டால் போலீசின் கரம் இருகும் என்கிறார்கள்.

Varunkumar ips
Varunkumar ips

தலைநகரிலும் அடுத்தடுத்து பெரிய பெரிய ரவுடிகள் கைது என்கவுண்டர் என அனல் பறக்கும் நிலையில், திருச்சியில் ”ஆபரேஷன் அகழி” தன் பங்குக்கு சூட்டைக் கிளப்பியிருக்கிறது. ரவுடிகளின் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

—    அங்குசம் புலனாய்வுக்குழு.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.