வரிசை கட்டி வரும் நானி சினிமாக்கள்!
‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – இயக்குநர் சைலேஷ் கொலானு – வால்போஸ்டர் சினிமா + யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ்- கூட்டணியில் தயாராகும் ‘ஹிட் : மூன்றாவது வழக்கு’ ( HIT : 3rd Case) எனும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி இருக்கிறது.
நானியின் 32 -வது படமான இதை இயக்குநர் டாக்டர் சைலேஷ் கொலனு இயக்குகிறார். க்ரைம் திரில்லர் ஜானரில் தயாராகிறது.
தொடர்ச்சியாக பிளாக் பஸ்டர் வெற்றிகளுடன் பயணித்து வரும் நடிகர் நானி, ஹைதராபாத்தில் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
இந்தப் படத்திற்காக நானி தன் உடல் தோற்றத்தை மாற்றம் செய்துள்ளார். சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்திற்கு மிக்கி ஜே. மேயர் இசையமைக்கிறார். கார்த்திகா ஸ்ரீனிவாஸ் படத்தொகுப்பு, தயாரிப்பு வடிவமைப்பு ஸ்ரீ நாகேந்திர தாங்கலா.
நிர்வாக தயாரிப்பாளர் : எஸ் வெங்கடரத்தினம் ( வெங்கட்)
ஒலிக் கலவை : ஜி . சுரேன்
லைன் புரொடியுசர் : அபிலாஷ் மந்தாதுபு
தலைமை இணை இயக்குநர் : வெங்கட் மட்டிராலா.
எஸ் எஃப் எக்ஸ் : சிங் சினிமா
வி எஃப் எக்ஸ் மேற்பார்வை : வி எஃப் எக்ஸ் டி டி எம் ( VFX DTM)
டி ஐ : B2h ஸ்டூடியோஸ்
வண்ணக் கலவை : எஸ். ரகுநாத் வர்மா
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ
‘ஹிட் -3’ படத்தையடுத்து இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில், எஸ் எல் வி சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கும் ‘#நானிஓடேலா 2’ படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார் நானி.
இது தொடர்பாக இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா பேசுகையில்” எஸ் எல் பி சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிப்பில் தயாராகும் நானி யின் இந்தப் படம் ‘தசரா’ படத்தை விட நூறு மடங்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் ‘ இருக்கும் என நான் உறுதியளிக்கிறேன்” என்கிறார்.
நானி என்ன சொல்றாருன்னா, “இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலாவின் பைத்தியக்காரத்தனமான அன்பு என் வாழ்க்கையில் மீண்டும் வந்து விட்டது. இதனை கண்டு தரிசிக்க தயாராக இருங்கள்” என்கிறார்.
–-மதுரை மாறன்