அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

எழுத்தாளராக… பத்திரிகையாளராக…. மாற திருச்சி கல்லூரி மாணவா்களுக்கு அரிய வாய்ப்பு

0

திருச்சியில் அடகு நகையை விற்க

ங்குசம் அறக்கட்டளை உள்ளிட்ட தோழமை அமைப்புகளுடன் செயின்ட் ஜோசப் கல்லூரி தமிழாய்வுத்துறை இணைந்து நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான படைப்பிலக்கியப் பயிலரங்கம்.

திருச்சிராப்பள்ளி, செயின்ட் ஜோசப் கல்லூரியின் தமிழாய்வுத்துறை, அங்குசம் அறக்கட்டளை உள்ளிட்ட தோழமை அமைப்புகளுடன் இணைந்து எதிர்வரும் அக்டோபர் 03 மற்றும் 04 ஆகிய நாள்களில் படைப்பிலக்கியப் பயிலரங்கை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

வளனார் கல்லூரி மேலாண்மையினரின் முன்னிலையில் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கவிச்சுடர் இரா.சு.கவிதைப்பித்தன்  அவர்கள் விழாப் பேருரையாற்றி இப்பயிலரங்கைத் தொடங்கி வைக்க இருக்கிறார். தொடக்கவிழாவில் திருச்சிராப்பள்ளி எழுத்தாளர்கள் முதுதமிழ் எழிலரசி கேத்தரின் ஆரோக்கியசாமி மற்றும் தமிழ்ச்செம்மல் வீ.கோவிந்தசாமி ஆகியோர் தூய வளனார் கல்லூரி சார்பாக பாராட்டப்பட உள்ளனர்.

பேராசிரியர்கள் முனைவர் ஞா.பெஸ்கி, முனைவர் ஜா.சலேத், பத்திரிகையாளர்கள் ஜெடிஆர், வே.தினகரன், கவிஞர்கள் நந்தவனம் சந்திரசேகரன், திருவைக்குமரன், விக்கிபீடியா எழுத்தாளர் கி.மூர்த்தி ஆகியோர் மாணவர்களுக்குப் பயிற்சி வழங்க இருக்கிறார்கள். 35 மாணவர்கள் மட்டுமே இப்பயிற்சியில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.

https://www.livyashree.com/

எனவே கவிதை, கதை, கட்டுரை உள்ளிட்ட படைப்புகளையும் மற்றும் கட்டற்ற களஞ்சியமான விக்கிபீடியாவில் எழுதவும் ஆர்வமுடைய, முழுமையாக இப்பயிற்சியில் பங்கேற்கும் திறனுடைய இரண்டு மாணவர்களை மட்டும் தங்கள் கல்லூரியில் இருந்து தெரிவு செய்து இப்பயிற்சிக்கு அனுப்பிவைக்கும்படி பேரன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

குறிப்பு:

  • பதிவுக் கட்டணம் 250/- மட்டும்
  • பிற கல்லூரி மாணவர்களுக்கு இரண்டு நாள்களும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • பங்கேற்பாளர்கள் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்கவேண்டும்.
  • முதல்நாள் மாலை கொடுத்தனுப்புகிற எழுத்துப்பணியை சிறப்பாக செய்துவரும் மனதுடையவராக இருத்தல் வேண்டும்.

பயிற்சியில் முழுமையாகப் பங்கேற்று எழுத்தாளராக, மாணவப் பத்திரிகையாளராக மாற விரும்பும் திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்லூரியின் தமிழ்த்துறை வழியாக முனைவர் ஜா.சலேத் அவர்களை 63814 93915 என்கிற வாட்ஸ்அப் எண்ணில் தொடா்பு கொண்டு தங்கள் பெயரைப் பதிவு செய்யலாம்.

பதிவு செய்ய இறுதி நாள் : 25.09.2024

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.