அட பழனி திருக்கோயிலில் பக்தர்களுக்கு இவ்வளவு சலுகைகளா ?
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டணமில்லா சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் விரிவான விவரங்கள் :
* காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை நாள் முழுவதும் அன்னதானம்.
* கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்களின் குழந்தைகளுக்கு சுடு பால்.
* காலணி பாதுகாப்பு மையம்.
* பஞ்சாமிர்த பிரசாதம் 40 கிராம்.
* படிப்பாதையில் நீர்மோர் மற்றும் சுக்கு காபி.
* வாகனம் நிறுத்தம்.
* முடி காணிக்கை மையம்.
* கழிப்பறை, குளியலறை
* சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்
* கிரி வீதியில் பேட்டரி கார் வசதி
* மாற்றுத்திறனாளிகள் மூத்த குடிமக்கள்.
* கர்ப்பிணி பெண்கள் கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு விரைவு தரிசனம்.
* கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி.
* முதலுதவி மருத்துவ வசதி.
* ஆம்புலன்ஸ் வசதி.
* சித்த மருத்துவ வசதி.
* மனநல காப்பகம்.
* கருணை இல்லம்.
* ஊக்கத் தொகையுடன் கூடிய நாதஸ்வரம் மற்றும் தவில் பயிற்சி பள்ளி.
* ஊக்க தொகையுடன் கூடிய அர்ச்சகர் பயிற்சி பள்ளி.
* ஊக்க தொகையுடன் கூடிய வேத பாடசாலை.
* பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் பெரிய ஹால் வசதி.
தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரத்திற்கு பாதயாத்திரை பக்தர்களுக்கு ஓராண்டிற்கு இரண்டு லட்சம் உணவுகள் என்று அனைத்து வகையிலும் பக்தர்களுக்கு கட்டணம் இல்லாமல் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
6-ஆம் நூற்றாண்டு திருநாவுக்கரசர் தர்ம சாலைகள் என்ற பெயரில் அப்பூதியடிகள் என்ற நாயன்மார் நடத்தியது போல பழநி திருக்கோயில் நிர்வாகம் நடைபெற்று கொண்டுள்ளது.