குருப்- II & IIA முதன்மைத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கம்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையத்தால் துணை வணிக வரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர், உதவியாளர் உள்ளிட்ட 2327 காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு குருப் -II & IIA தேர்வுக்கான அறிவிப்பாணை 20.06.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து முதல்நிலைத் தேர்வு 14.09.2024 அன்று நடைபெற்றது.

Sri Kumaran Mini HAll Trichy

தற்போது குருப்- II & IIA  முதன்மைத் தேர்வினை போட்டித்தேர்வளர்கள் சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 14.10.2024 அன்று திங்கள்கிழமை முதல் காலை 10.00 மணி அளவில் துவங்கப்படவுள்ளது.

Flats in Trichy for Sale

மேற்கண்ட பயிற்சிவகுப்பில், சிறப்பு பயிற்றுநர்களை கொண்டு அனைத்துப் பாடப்பகுதிகளுக்கும் பயிற்சியளிப்பதுடன், மாநில அளவில் பாடவாரியாக மாதிரித்தேர்வுகள் நடத்தப்பட்டு, இலவசமாக பாடக்குறிப்புகளும் வழங்கப்படும். எனவே, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த குருப்- II & IIA முதல்நிலைத் தேர்வினை எழுதிய அனைத்து போட்டித்தேர்வளர்களும் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து, பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மேலும், விவரங்களுக்கு 0431-2413510, 9499055901,9499055902 என்ற திருச்சிராப்பள்ளி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தொிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார், இ.ஆ.ப., அவா்கள் தொிவித்துள்ளாா்.

வெளியீடு:
உதவி இயக்குநா்,
செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம்,
திருச்சிராப்பள்ளி.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.