நட்டியின் டபுள் ஆக்ட்! ஆண்டவன் – அவதாரம் ஆரம்பம்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஞ்சுபுரம், அழகு குட்டி செல்லம், சாலை ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் சார்லஸ், இப்போது தனது லைட் சவுண்ட் & மேஜிக் நிறுவனம் சார்பில் ‘ஆண்டவன் அவதாரம்’ என்கிற படத்தை தயாரித்து இயக்குகிறார்.

நடிகர் நட்டி நட்ராஜ்  இந்தப் படத்தில் கதாநாயகனாக அதிலும் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

 நடிகர் நட்டி நட்ராஜ்
நடிகர் நட்டி நட்ராஜ்

நடிகர் ராகவ் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்ற  நடிகர்களின் தேர்வு  நடைபெற்று வரும் நிலையில்  மூன்று நாட்களுக்கு முன்பு அக்-9-ஆம் தேதி படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் துவங்கியுள்ளது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

படம் குறித்து இயக்குநர் சார்லஸ் கூறும்போது, “இந்தப் படத்திற்கு ‘அவதாரம்’ என்றுதான் டைட்டில் வைக்க விரும்பினேன். ஆனால் அது நாசர் சாரிடம் இருப்பதால், அவர்களது பெருமைக்குரிய படைப்பு என்பதால் அந்த டைட்டிலைத் தர அவர்களுக்கு விருப்பமில்லை. அதனால் ‘ஆண்டவன் அவதாரம்’ எனப் பெயர் சூட்டி படப்பிடிப்பை துவங்கியுள்ளோம்.

ஆண்டவன் அவதாரம்நடிகர் நட்டி முதல் முறையாக இந்தப் படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். அப்பா-மகன், அண்ணன் தம்பி என்று வழக்கமான இரு வேடங்கள் போன்று இல்லாமல் யாரும் யூகிக்க முடியாதபடி இவை உருவாக்கப்பட்டுள்ளன. சொல்லப்போனால் இது ஒரு சயின்ஸ் ஃபிக்சன் படம்.

சயின்ஸ் பிக்சன் என்றாலும் எதிர்காலத்தில் நடப்பது போன்ற அல்லது நம்ப முடியாத விஷயங்கள் போல அல்லாமல் இன்று நிகழ்காலத்தில் நடக்கக்கூடிய விஷயங்களை வைத்து இதை உருவாக்கி உள்ளோம். அதே சமயம்  நகைச்சுவையும் இருக்கும்” என்கிறார்.

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

ஆண்டவன் அவதாரம்
ஆண்டவன் அவதாரம்

தொழில்நுட்பக் குழு

கதை, திரைக்கதை வசனம், இயக்கம்– சார்லஸ்

ஒளிப்பதிவு-ஜி. பாலமுருகன்

இசை- நவ்நீத்-ராகவ்

படத்தொகுப்பு–பிரவீன் பாஸ்கர்

மக்கள் தொடர்பு- A.ஜான்

 

— மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.