பிறந்தநாள் விழா காணும் … மன்னிக்கதெரிந்த மாமனிதரே!
மலைக்கோட்டைமண்ணில் முடிசூடாமன்னாக வலம்வந்து மக்கள் பிரச்சனைகளுக்கும் கழகதொண்டர்களின் பிரச்சனைகளுக்கும் தீர்வுகாணும் எங்கள் முதன்மைக்கு பிறந்தநாள் எங்களுக்கோ திருநாளாம்! தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்மஸ் போன்று பண்டிகைநாளாகும். நவம்பர் 9-ல் கழக தொண்டர்கள் புத்தாடை அணிந்து மகிழ்ச்சியின் எல்லைக்கு செல்கிறார்கள்.
“மன்னிக்கத்தெரிந்த மனிதன் மாமனிதன்” – என்ற வைரவரிகளுக்கு ஏற்ப வாழ்ந்துகாட்டும் எங்கள் குடும்பத்தின் மூத்த அண்ணனை வாழ்த்துகிறேன்.
வாழ்த்துவதற்கு வயதோ, பதவியோ, பட்டமோ தேவையில்லை. நல்ல மனம் இருந்தால் போதும் என்பதால் நீங்கள் நூறு ஆண்டுகாலமும் அதற்குமேலும் வாழவேண்டும். அப்போதும் நான் திருச்சி மாவட்ட மட்டுமல்ல தமிழக முழுவதும் பேனர் கட்அவுட் வைத்து மகிழவேண்டும்.
நீங்கள் எதிரிகளை எதிரிகளாக பார்ப்பீர்கள்! ஆனால், கட்சி தொண்டனையோ கருணை உள்ளதோடு பார்ப்பீர்கள். கழக முன்னணியினரின் ஓட்டுனர்கள், அரசு வாகன ஓட்டுனர்களையும் உரிமையுடன் பெயர் சொல்லி அழைப்பதுதான் சிறப்பு.
முரசொலி “அதிகாலையிலேயே கழக கொண்டனின் கரங்களின் தவழவேண்டும்” என்பதற்காக ரூவீலர் வாங்கிக்கொடுத்து பேப்பர் போடச்சொன்னீர்கள். பேப்பர் போடும் நபரையும் அன்பாக, முரசொலி, முரசொலி என அழைத்து மகிழ்ந்தீர்கள்.
கழகபேச்சாளர்கள் கருணாமூர்த்தி தொடங்கி இடிமுழக்கம் செல்வராஜ் வரை உடல்நல குறைவு ஏற்பட்டால் மருத்துவமனையில் சேர்த்து ராஜ வைத்தியம் பார்த்து குணப்படுத்தும் எங்களின் முதன்மையே உங்கள் கரங்களுக்கு முத்தம் இடுகிறேன்.
திமுக ஒன்றிய துணை செயலாளர், பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட துணை செயலாளர் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தொடங்கி கோயில் வரை பல்வேறு பொறுப்புகளை தந்த உங்களுக்கு என் குடும்பமும் எனது சமுதாயமும் கோடான கோடி நன்றியை தெரிவிக்கிறது. உலகத்தில் அமைதியான இடம் தாயின் மடி என்று முன்னோர்கள் சொல்வார்கள். ஆனால், அதற்கும்மேலாக நீங்கள் தான் எனக்கு தாயின் மடியாக, சகோதரதுவத்தின் சாட்சியாக என்றென்றும் இருக்கிறீர்கள்.
எங்கள் அண்ணனே நான் மரணத்தை முத்தமிடும்வரை உன் பாதசுவடுகளில் பயணிப்பேன் என்று சத்தியபிரமாணம் செய்கின்றேன்!
தலைவா! உங்கள் பிறந்தநாளில் எங்களை போன்ற தொண்டர்களை மன்னித்து ஆசீர்வதியுங்கள். என்னை போன்ற இலட்சக்கணக்கான தொண்டர்களின் வாழ்த்துக்களோடு என் வாழ்த்துக்களையும் இணைத்துக்கொள்ளுங்கள் என இருகரம் கூப்பி வேண்டுகிறேன்.
– குடமுருட்டி சேகர்.