CPS- ம் வேண்டாம்…. UPS- ம் வேண்டாம்…. OPS… (பழைய ஓய்வூதியத் திட்டம்) அமல்படுத்தப்படுமா? ஐபெட்டோ வா.அண்ணாமலை !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

CPS- ம் வேண்டாம்….. UPS- ம் வேண்டாம்…. OPS (பழைய ஓய்வூதியத் திட்டம்) அமல்படுத்தப்படுமா?   என கேள்வி எழுப்பி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவரும் ஐபெட்டோ அகில இந்திய பொதுச்செயலருமான வா.அண்ணாமலை.

தமிழ்நாடு அரசு சாதக அரசா? அல்லது பாதக அரசா? மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு என்றால் திராவிட மாடல் அரசு சொன்னதையும் செய்யவில்லை! சொல்லாததையும் செய்யவில்லை! இதை அறியாதவர் எவரும் இல்லை!

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படுமா? ஆளுங்கட்சி- எதிர்க்கட்சிகளின் அறிக்கைப் போரில் ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் மனம் மகிழும் வண்ணம் அறிவிப்புகளை முதலமைச்சர் அவர்கள் வெளியிட உள்ளார் என திமுக அரசு தரப்பில் செய்திகள் வெளிவந்தது? தெரியுமா?

ifecto annamalai
ஐபெட்டோ வா.அண்ணாமலை

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

அரசை நடத்துவது முதலமைச்சர் தலைமையில் உள்ள அமைச்சரவையா? தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் உள்ள நிதித்துறை முதன்மைச் செயலாளரா?

ஓய்வூதியர்களின் குறைகளை கேட்பதற்காக பிரிக்கப்பட்ட துறை மீண்டும் இணைக்கப்பட்டது. பணி ஓய்வு பெறும் பென்ஷன்தாரர்கள் மற்றும் குடும்ப பென்ஷன்தாரர்கள் குறைகளை அளிக்கவும் அவர்களின் நலன்களை பாதுகாக்கவும் 1994 ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக ஆட்சியில் நிதித்துறையில் இருந்து தனியாகப் பிரித்து ஓய்வூதியர் இயக்குனரகத்தை உருவாக்கினார்கள்….

இந்த இயக்ககத்தின் இயக்குனர், இணை இயக்குனர், துணை இயக்குனர், கணக்கு அலுவலர், உதவி கணக்கு அலுவலர்கள் என மொத்தம் 88 பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டு முறைப்படி இயங்கி வந்தது. மறு சீரமைப்பு என்ற முன்மொழிவை ஏற்று பென்ஷன் இயக்குனரகம் அரசு தகவல் தொகுப்புமையம், சிறுசேமிப்புத் துறை மூடப்பட்டது என்பதற்கு பதிலாக கருவூல கணக்குத் துறையுடன் இணைக்கப்பட்டது என ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுசேமிப்புத் துறையினை மாவட்ட ஆட்சியாளர்களாலும் சென்னையில் மாநகராட்சி ஆணையராலும் நிர்வகிக்கப்படும். வெளிவந்துள்ள  அரசாணையின்எண் : G. O (ms)No.343 நாள்: 12. 11. 2024 Finance  (Treasuries and Accounts-III Department ).

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

புதிய ஓய்வூதிய திட்டம் தமிழகத்தில் 2003 ஏப்ரல் மாதம் முதல் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் காலத்தில் தொடங்கப்பட்டு இன்றுவரையில் 6.14 லட்சம் பேர் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு வாய்ப்பு இல்லாமல் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் காலத்தில் விடியல் அரசில் விடிவு வராதா என்ற நம்பிக்கையில் உறுதியாக இருந்தார்கள்…

ஓய்வூதியர் இயக்குனரகமே கலைக்கப்பட்டதற்கு அடையாளம் – வருவதற்கு வாய்ப்பில்லை என்பதை நிதித்துறை முதன்மை செயலாளர் அறிவித்துள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தெரியுமா?முதலமைச்சர் நினைப்பதையெல்லாம் செய்து முடிக்கிற மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களுக்கு தெரியாமலா இந்த அரசாணை வெளிவந்துள்ளது.

இவர்களின் முழு நம்பிக்கைகுரியவர் அரசின் சாதனைகளின் அடையாள முகவரி நிதித்துறை முதன்மைச் செயலாளர் அவர்கள் தான் என்பது நாட்டுக்கும் தெரியும்… மாண்புமிகு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் நமது வேதனை உணர்வில் பங்கேற்பவராக இருப்பார் என்பதுடன் பிரச்சனைக்கு தீர்வு காண்பவராகவும் செயல்படுவார் என்ற நம்பிக்கை உணர்வில் பயணத்தினை தொடர்வோம்.

ஐபெட்டோ வா.அண்ணாமலை !
ஐபெட்டோ வா.அண்ணாமலை !

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இனி பழைய ஓய்வூதியத்திட்டம் தமிழ்நாட்டில் அமல்படுத்துவதற்கு வாய்ப்பிருக்குமா என்ற ஐயம் எண்ண அலைகளாக பீறிட்டு வெளிவருவதைக் காண முடிகிறது .

முன்னாள் முதலமைச்சர் தலைவர் கலைஞர்  அவர்கள் காலத்தில் சம்பாதித்து வைத்திருந்த வாக்கு வங்கியின் கருவூலத்திலும் சேதாரம் ஏற்படுவதற்கு அனுமதிக்கலாமா?

முன்னாள் முதலமைச்சர் தலைவர் கலைஞர் பெற்றெடுத்த தவப்புதல்வன் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்களின் அரசு பாதுகாக்க வேண்டாமா?

50 தொகுதிகளை நிர்ணயிக்கின்ற வாக்கு வங்கியினை  பாதுகாத்திட வேண்டுகிறோம் !  பாதுகாத்திட வேண்டுகிறோம் !!

மத்திய அரசு கொண்டுவந்த CPS திட்டத்தில் அரசின் பங்குத் தொகை 14%, நியமனதாரரின் பங்களிப்பு 10% இரண்டையும் சேர்த்து ஓய்வு பெற்றால் ஒரு தொகையினை ஓய்வூதியமாக வழங்கி வருகிறார்கள். பணிக்காலத்தில் இறந்து போனால் ஒரு தொகையினை பணிக்கொடையாக வழங்கி வருகிறார்கள்..

ஆனால் தமிழ்நாட்டில் அரசின் பங்குத்தொகை 10% ஊழியர்களின் பங்குத்தொகை 10% என பணிக்காலத்தில் சேர்த்து வைத்த தொகையினை பணிநிறைவு பெறும்போது சிரமப்பட்டு பெறவேண்டியதாக உள்ளது .

மத்திய அரசு கொண்டுவந்துள்ள UPS திட்டம் அரசின் பங்குத் தொகை 18%  25 ஆண்டுகளுக்குப் பிறகு  50% ஓய்வூதியம் தருவதாகவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. நம்மைப் பொறுத்தவரை

CPS- ம் வேண்டாம்…..

UPS- ம் வேண்டாம்….

OPS மட்டுமே அமல்படுத்தப்பட வேண்டும் . நம்பிக்கை வளரட்டும்!

தேர்தல் நெருங்கி வரும் நாளில் வாக்குவங்கியின் பலத்தினை அரசிற்கு உணர வைப்போம்! வென்று காட்டுவோம் என்ற நம்பிக்கையுடன்….  என்பதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

–   அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.