அங்குசம் பார்வையில் ‘நிறங்கள் மூன்று’  திரைப்படம்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

யாரிப்பு : ‘ஐங்கரன் இண்டர்நேஷனல்’ கருணாமூர்த்தி. டைரக்‌ஷன் : கார்த்திக் நரேன். நடிகர்—நடிகைகள் : அதர்வா முரளி, சரத்குமார், ரகுமான், அம்மு அபிராமி, துஷ்யந்த், ஜான் விஜய், சின்னி ஜெயந்த், ராஜேஷ் சிந்து. ஒளிப்பதிவு :டிஜோ டோமி, இசை : ஜேக்ஸ் பிஜாய், எடிட்டிங் : ஸ்ரீஜித் சாரங். எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர் : கே.சுந்தர் ராஜன், கிரியேட்டிவ் தயாரிப்பாளர் : டாக்டர். மனோஜ் பினோ. பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா & அப்துல்நாசர்.

ப்ளஸ் டூ படிக்கும் துஷ்யந்தின் பெற்றோர் தினமும் வீட்டில் சண்டை போடுவதால் படிப்பில் கவனம் சிதறுகிறது. இதை துஷ்யந்த் மூலமே கேள்விப்பட்டு, அவனது பெற்றோரிடம் பேசிப் புரிய வைக்கிறார் ஆசிரியர் ரகுமான். இதனால் ரகுமான் மீது மிகுந்த மரியாதை ஏற்படுகிறது துஷ்யந்துக்கு.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ரகுமானின் மகள் அம்மு அபிராமிக்கு துஷ்யந்த் மீது க்ரஷ். இந்த நிலையில் ஒரு நாள் அதிகாலை டியூஷன் செல்லும் போது, அம்மு அபிராமியை ஒரு சிலர் காரில் கடத்துகிறார்கள். இது நிறம்-1.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

சினிமா டைரக்டராகியே தீரவேண்டும் என்ற லட்சியத்துடன் எல்லா சினிமாக் கம்பெனிகளுக்கும் ஏறி இறங்குறார் அதர்வா முரளி. அதே சமயம் எப்போதுமே போதையில் மிதக்கிறார். இது நிறம்—2.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

லஞ்சம் கொடுத்தால் எதையும் செய்யத் தயாராக இருக்கும் இன்ஸ்பெக்டர் சரத்குமார். இது நிறம் -3.

இந்த மூன்று நிறங்களுக்கிடையே  உள்ள ஒற்றுமை என்ன, வேற்றுமை என்ன, இவர்கள் செய்யும் நன்மை என்னை, தீமைகள் என்ன? என்பதை அழகான காட்சியமைப்புகள், நேர்த்தியான சீன்கள் மூலம் சொல்லியிருக்கார் டைரக்டர் கார்த்திக் நரேன். இடைவேளை வரை, அதுவும் அதர்வா முரளி போதையில் கிறுகிறுத்துக் கிடக்கும் போது ஜான்விஜய் வரும் சீன்கள் தான் நம்மை கிறுகிறுக்க வைக்கின்றன.

இடைவேளைக்குப் பிறகு மூன்று நிறங்களையும் ஒரே மையப்புள்ளியில் கொண்டு வந்து நிறுத்தி, கதை சொல்லலில் ரொம்பவே கவனம் ஈர்த்துவிட்டார் டைரக்டர். சில ஷாட்களும் கட்ஸ்களும் ஆச்சர்யப்படுத்துன்றன. இடைவேளை வரை சில காட்சிகளில் கொஞ்சம் பொறுமை காத்தால், நல்ல ரசனையான படம் பார்த்த அனுபவம் கிடைக்கும்.

அதா்வாமுரளிசரத்குமார் கம்பீரமாகவும் இருக்கிறார், களவாணித்தனமும் பண்ணுகிறார். அம்மு அபிராமியின் அப்பாவாக , பள்ளி வாத்தியார் கேரக்டரில் ரகுமான், தான் ஒரு சீனியர் என்பதை புரூஃப் பண்ணிவிட்டார். அவருக்கு கச்சிதமான க்ளைமாக்ஸ், கரெக்டான க்ளைமாக்ஸ்.

எடிட்டர் ஸ்ரீஜித் சாரங்கின் பிரிலியண்டான ‘கட்ஸ்’ & ’ஜாயிண்ட்ஸ்’ தான் இந்த மூன்று நிறங்களை டெம்போ குறையாமல் ரசிக்க வைக்கிறது. ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசையும் பிரமாதம்.

 

–மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.