திருச்சி – கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி
திருச்சிராப்பள்ளி மாவட்டம் – கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தினுடைய 75 வது ஆண்டு விழா 26.11.2024 காலை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் கல்லூரியினுடைய செயலர் தந்தை அருள்பணி லூயிஸ் பிரிட்டோ தலைமை வகித்தார். முதல்வர் முனைவர் ப.நடராஜன் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
இந்நிகழ்வில் மாணவர்கள் 75 ஆவது ஆண்டு அரசமைப்பு சட்டத்தின் உடைய ஆண்டு விழாவை போற்றும் விதத்தில் அண்மையில் தமிழ்நாடு அரசு மாண்புமிகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுடைய வழிகாட்டுதலின் பேரில் அரசு கல்வி நிறுவனங்கள் அரசு அலுவலகங்களில் 75 ஆம் ஆண்டு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்புரையை உறுதிமொழி ஏற்று கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் இன்றைய தினம் திருச்சி மாவட்ட கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி மாணவர்கள் அரசமைப்பு சட்டத்தினுடைய முகப்புரையை உறுதிமொழியாக ஏற்றனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்நிகழ்வில் இருபால் மாணவர்கள் ஆசிரிய பெருமக்கள் அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் இந்நிகழ்வை தமிழ்த் துறை உதவி பேராசிரியர் கி. சதீஷ்குமார் அவர்கள் ஒருங்கிணைத்தார்கள்.