அரசு ஊழியரை தீவைத்து கொளுத்த முயற்சித்த கொடூரம்- பிரத்யேக வீடியோ
அரசு ஊழியரை தீவைத்து கொளுத்த முயற்சித்த கொடூரம்- பகீர் வீடியோ
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் கருங்கல் சார் பதிவாளர் அலுவகத்திற்குள் நுழைந்து, பொறுப்பு சார்- பதிவாளர் மீது மண்ணெணெய் ஊற்றி கொல்ல முயற்சித்த பகீர் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குசம் புலனாய்வு இதழுக்கு கிடைத்த பிரத்யேக வீடியோவில்…
டி -ஷர்ட் அணிந்தபடி கேஷுவலாக உள்ளே நுழைந்த நபர், திடீரென பேண்ட் பாக்கெட்டுக்குள் வைத்திருந்த பாட்டிலை எடுத்து திறந்து, அங்குள்ள அரசு ஊழியர் மீது ஊற்றிவிட்டு தீக்குச்சியை பற்றவைத்து அரசு ஊழியர் மீது வீசுகிறார். நல்வாய்ப்பாக தீ பற்றாததால் அரசு ஊழியர் உயிர் தப்பியுள்ளார். இந்த வீடியோவைப் பார்க்கும்போதே பதை பதைப்பை ஏற்படுத்துகிறது.
இதுகுறித்து, அங்குசம் விசாரித்தபோது, “கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகேயுள்ள கருங்கல் சார்- பதிவாளர் அலுவலகம் உள்ளது. உதவி அலுவலர் கோபி கிருஷ்ணன் என்பவர் பொறுப்பு சார் பதிவாளராக உள்ளார். அலுவலகத்துக்கு வந்த நபர், சட்டத்துக்கு புறம்பான டாக்குமெண்டை பதியச் சொல்லி கட்டாயப்படுத்தினார்.
வீடியோ லிங்
ஆனால், ஏற்கனவே இதுபோன்று பதிவுசெய்ததால் பிரச்சினை ஆனதால் கோபி கிருஷ்ணன் மறுத்துள்ளார். இதனால், கொலை மிரட்டல் விடுத்த நபர், இன்று(6-12-2024) மதியம் உள்ளே நுழைந்து கோபி கிருஷ்ணன் மீது மண்ணணெய் ஊற்றி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்” என்கிறார்கள் பகீர் விலகாமல்.
என்னக் காரணத்துக்காக இப்படி செய்தார்? அரசு அலுவலகத்திற்குள் நுழைந்து தீ வைத்து கொலைமுயற்சி செய்யும் அளவுக்கு தைரியம் வந்துவிட்டதே என பத்திரப்பதிவுத்துறை அலுவலர்கள் மட்டுமல்ல, அரசு ஊழியர்கள் மத்தியில் இந்த வீடியோ பரபரப்பாகி கண்டனங்களை ஏற்படுத்தி வருகிறது.
-மனோசெளந்தர்