திருச்செந்தூர் – யானை பாகன் உதயகுமார் மனைவிக்கு பணி நியமன ஆணையை வழங்கிய எம்.பி கனிமொழி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த கடந்த நவம்பர் 18ம்தேதி தெய்வானை யானை தாக்கியதில் பாகன் உதயகுமாரும், அவரது உறவினரான சிசுபாலனும் படுகாயமடைந்து உயிரிழந்தனர். திருச்செந்தூர் வ.உ.சி. தெருவில் உள்ள யானைப் பாகன் உதயகுமார் அவர்களின் வீட்டிற்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி அவர்கள் நேரில் சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும், உயிரிழந்த யானைப்பாகன் மனைவிக்கு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உதவி அலுவலராக பணியாற்ற பணி நியமன ஆணையை கனிமொழி கருணாநிதி எம்.பி வழங்கினார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலம் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
— மணிபாரதி.