திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு அன்பின் பகிர்வு நிகழ்ச்சி

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சிராப்பள்ளி, செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை – செப்பர்டு சார்பாக 17.12.2024 மாலை கல்லூரி மாணக்கர்களுக்கான  கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அன்பின் பகிர்வு நிகழ்ச்சி  கல்லூரி வளாகத்திலுள்ள விரிவாக்கத்துறையில் நடைபெற்றது.

கல்லூரியின் அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கிள் சே ச அவர்கள் கல்லூரி மாணவர்களாக இருக்க கூடிய இன்றைய இளைஞர்கள் சமூக சீர்கேட்டிற்கு அடிமையாகமலும் நல்ல பழக்க வழக்கங்களை வளர்த்து கொள்ள வேண்டும் என ஆசீயையும் வாழ்த்தையும் வழங்கினார்.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

திருச்சிராப்பள்ளி, செயின்ட் ஜோசப் கல்லூரிகல்லூரியின் செயலர் அருள்முனைவர் அமல் சே ச ஒவ்வொரு மனிதனும் சகமனிதர்களுக்கு நேரத்தில் செய்ய கூடிய உதவிகள் மூலம் இறைவனின் பண்புகளை வெளிப்படுத்துவது என்று வாழ்த்துரை வழங்கினார்.

கல்லூரியின் முதல்வர் அருள்முனைவர் மரியதாஸ் சே ச இன்றைய சமூகத்தில் உறவுகள் சிதைந்து வரும் சூழல் நிலவுகிறது. இதனை கல்வி மற்றும் சமூகப்பணியில் ஏழை எளிய மக்களோடு பணிபுரியும் மாணாக்கர்கள் நல்ல பண்பு நலன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். கருவறை புனிதமானது வகுப்பறை மனிதமானது என்று கிறிஸ்துமஸ் வாழ்த்துரை வழங்கினார்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

திருச்சிராப்பள்ளி, செயின்ட் ஜோசப் கல்லூரிஅன்பின் பகிர்வின் நிகழ்ச்சியில் கல்லூரியின் விரிவாக்கத்துறை இயக்குநர் அருள்முனைவர் சகாயராஜ் வந்தவர்களை வரவேற்றார். முதுநிலை ஒருங்கிணைப்பாளர் ஜெயசந்திரன் இறைவார்த்தைகளை வேதகமத்திலிருந்து வாசித்தார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

விரிவாக்கத்துறையின் ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன் நிகழ்ச்சியின் நிறைவில் நன்றி கூறினார். விரிவாக்கத்துறையின் முதுநிலை ஒருங்கிணைப்பாளர் லெனின் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

திருச்சிராப்பள்ளி, செயின்ட் ஜோசப் கல்லூரிமுன்னதாக கிறிஸ்து பிறப்பின் அடையளமாக கிறிஸ்மஸ் குடிலை அதிபர் செயலர் முதல்வர் அருட்தந்தையார்கள் புனிதபடுத்தி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தனர். விரிவாக்கத்துறையின் ஒருங்கிணைப்பாளர்கள் விஜயகுமார் ஜோசப் கிறிஸ்து ராஜா யாசோதை அலுவலக உதவியாளர் அமலேஸ்வரன் ஆகியோர் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

50- க்கும் மேற்பட்ட சமூகப்பணியில் ஈடுபடும் மாணாக்கர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கிறிஸ்மஸ் கேக்குகளும் பரிசு பொருட்களும் வழங்கப்பட்டன.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.