கீழ் ஜாதி பெண்ணை திருமணம் செய்ததால் சமூகத்தில் மதிப்பில்லை – கணவனால் பெண்ணுக்கு நேர்ந்த கதி !

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

கீழ் ஜாதி பெண்ணாகிய உன்னை திருமணம் செய்ததால் சமூகத்தில் மதிப்பில்லை”  என காதல் கணவரே சாதிய மனப்பான்மையுடன் தனது குடும்பத்தாருடன் சேர்ந்துகொண்டு தன்மீது தாக்குதல் நடத்தியதாகவும்; இதுகுறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும்கூறி, பாதிக்கப்பட்ட பெண் செல்வதேவி குற்றஞ்சுமத்தியிருக்கிறார்.

தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக அவர் குற்றஞ்சுமத்திய நிலையில், நடுரோட்டில் செல்வதேவியை அவரது கணவர் போதையில் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

தேனி மாவட்டம் அரண்மனை புதூர் பகுதி பரமானந்தம் மகன் காளிதாஸ். இவர் அதே பகுதியை சேர்ந்த செல்வதேவி இருவரும் காதலித்து சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு 4 வயதில் யோகித் என்ற ஆண் குழந்தை உள்ளது.

செல்வ தேவி
செல்வ தேவி

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இந்த நிலையில், சாதிமறுப்பு திருமணம் செய்த பெண்ணை சாலையில் வைத்து கணவர், செல்வதேவியை கீழ் ஜாதி பெண் உன்னை திருமணம் செய்ததால் சமூகத்தில் மதிப்பில்லை என காளிதாஸ் குடும்பத்தார், தாக்குதல் நடத்தினர். இது குறித்து பழனிசெட்டிபட்டி காவல் துறையில் வழக்கு பதிவு செய்யாமல் மெத்தன போக்குடன் செயல்படுவதாக செல்வதேவி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

மேலும், தேனி அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக மது போதையில் கணவர் காளிதாஸ் செல்வதேவியை தாக்கும் வீடியோ சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கணவர் காளிதாஸ், மாமனார் பரமானந்தம், மாமியார் – ருக்குமணி சேர்ந்து தொடர்சியாக சாதி பெயரை சொல்லி இழிவாக பேசி, கொடுமைபடுத்தி, கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக, செல்வதேவி பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து உள்ளார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தற்போது தேனி கானா விளக்கு அரசு மருத்துவமனையில் செல்வதேவி படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். தற்பொழுது செல்வதேவியை சாலையில் வைத்து தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

   —   ஜெய்ஸ்ரீராம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.