150–ஆவது பட பிரஸ் மீட்டில் சரத்குமார் கலகலப்பு!
மேக்னம் மூவிஸ் சார்பில் சலீல் தாஸ் தயாரிப்பில், இரட்டையர்கள் ஷ்யாம் – பிரவீன் இயக்கத்தில், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிக்கும் 150-வது படம் ‘தி ஸ்மைல் மேன்’ . வரும் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆவதையொட்டி படக்குழுவினர் மீடியாவை சந்தித்தனர். அதில் பேசியோர்….
தயாரிப்பாளர் சலீல் தாஸ்
” தயாரிப்பில் என் முதல் தமிழ்ப்படம் இது. முழுமையான ஒத்துழைப்பு தந்த என் குழுவினருக்கு நன்றி. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் ஆதரவு தாருங்கள்”
ஒளிப்பதிவாளர் விக்ரம் மோகன்
“சரத் சாரின் 150 வது படம் செய்கிறோம் என்பது மிகப் பெருமையாக இருந்தது. அவருடன் ஒவ்வொரு நாளும் வேலை செய்யும் போது நிறையக் கற்றுக் கொள்ள முடிந்தது. அவரோட எனர்ஜி லெவல் சூப்பராக இருக்கும். ஷ்யாம், பிரவீன் கற்பனையைத் திரையில் கொண்டு வர முழுமையாக உழைத்துள்ளேன்”.
இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷ்
“இது என் மூன்றாவது படம். எல்லோருடைய கேரியரிலும், உந்துகோலாக ஒரு படம் வரும், இந்த ஸ்மைல் மேன் படம் எனக்கு அப்படிப்பட்ட படமாக அமையும் என நம்புகிறேன். இப்போது சரத்குமாரின்இரண்டு படத்தில் வேலை பார்க்கிறேன்”.
நடிகை சிஜா ரோஸ்
” இப்படத்தில் நடித்த அனுபவம் மறக்க முடியாதது. இதற்கு முன்னாடி என்னை நிறைய ஹோம்லி கேரக்டருக்குத்தான் அழைப்பார்கள். இப்படத்தில் சரத்குமார் சார் டீமில் இன்வஸ்டிகேடிவ் செய்யும் பெண்ணாக நடித்துள்ளேன். என்னை இந்த கேரக்டரில் நடிக்க வைத்ததற்கு நன்றி. எல்லோரும் கடினமாக உழைத்துள்ளார்கள். படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள்”.
இயக்குநர் பிரவீன்
“மெமரீஸ் படம் தான் எங்கள் முதல் படம். அதற்கு நெகடிவ், பாஸிடிவ் என கலவையான விமர்சனங்கள் வந்தன . அதனால் இதை கவனமுடன் எடுத்திருக்கோம். நாங்கள் புது டீம் என்றாலும் முழு ஒத்துழைப்பு தந்தார் சரத் சார்.தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் அவர்கள் படமாக நினைத்து, கடினமான உழைப்பைத் தந்தார்கள். இது ஒரு பக்காவான த்ரில்லர் படம். ரசிகர்களுக்கு புதிய அனுபவம் தரும்”
இயக்குநர் ஷ்யாம்
“தயாரிப்பாளரின் முழு ஒத்துழைப்பு மட்டும் தான் இப்படம் வருவதற்கு காரணம். முதலில் அவருக்கும் அடுத்து இந்தக்கதையில் நடிக்க ஒத்துக் கொண்ட சரத்குமார் சாருக்கும் மிகமிக நன்றி. கதை கேட்டதும் ஆர்வமாகி, உடனே ஒப்புக்கொண்டார். அவருடைய 150 வது படம். எங்களுக்குத் தந்ததற்ககு மீண்டும் ஒரு முறை நன்றி “.
சரத்குமார்
“தயாரிப்பாளர் இப்படத்திற்கு மிகப்பெரிய முதுகெலும்பாக இருந்தார். நன்றி. பிரவீன், ஷ்யாம் மேடையில் கூட ஒன்றாகப் பேசுகிறார்கள். அவர்கள் ஒற்றுமைக்கு இது தான் சான்று. அவர்களுக்கு வாழ்த்துகள். ஒளிப்பதிவாளர் விக்ரம் திறமையானவர். எழுத்தாளர் ஆல்கெமிஸ் புத்திசாலி. படத்தில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள். ராகவன் சார் இப்படத்தை ரிலீஸ் செய்கிறார் நன்றி. எல்லோரும் போர்த்தொழில் மாதிரி இருப்பதாகச் சொன்னார்கள் ஆனால் இப்படம் அதைவிட வித்தியாசமாக இருக்கும்.நல்ல முயற்சிக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்”.
இப்படத்தில் சிஜா ரோஸ், இனியா, ராஜ்குமார், ஜார்ஜ் மரியான், சுரேஷ் மேனன், குமார் நடராஜன், ரௌடி பேபி புகழ் பேபி ஆழியா ஆகியோர் நடித்துள்ளனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
விழா முடிந்ததும் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளக்கு கலகலப்பும் ஜிலுஜிலுப்பாகவும் பதில் சொல்லி பிரஸ்மீட்டை சுவாரஸ்யமாக்கினார் சரத்.
படத்தினை இரட்டையர்கள் ஷ்யாம் – பிரவீன் இயக்குகின்றனர். திரைக்கதை வசனம்: கமலா ஆல்கெமிஸ், எடிட்டிங் : ஷான் லோகேஷ், படத்தொகுப் ‘க்’ படப்புகழ் கவாஸ்கர் அவினாஷ் இசையமைக்கிறார். மக்கள் தொடர்பு: சதீஷ்( AIM).
— மதுரை மாறன்.