திருநெல்வேலில் பி. ஐ. எஸ் 78 ஆவது நிறுவன தின கொண்டாட்டம்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பி.ஐ.எஸ் மதுரை கிளையின் சார்பில் 78 ஆவது நிறுவன தினக்கொண்டாட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலி சங்கர் மேல்நிலைப்பள்ளியில் கண்காட்சித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.  விழாவில் சுமார் 1300 மாணவ மாணவியர், 80 ஆசிரியர்கள், 200 பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.  இந்தநிகழ்வு, தயாரிப்புத்தரம், சான்றிதழ் மற்றும் நமது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் நுகர்வோர் பொருட்களில் தரம் மற்றும் தரப்படுத்தலின் முக்கியத்துவத்தின் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

நிகழ்ச்சியில் மதுரை பி.ஐ. எஸ் கிளையின் மூத்த இயக்குனரும் தலைவருமான சு.த.தயானந்த் வரவேற்புரையுடன் விழா நோக்கங்களை விவரித்தார். இந்தியா சிமெண்ட்ஸ் ஆலை பொறுப்பாளர். கே. சரவணமுத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

Sri Kumaran Mini HAll Trichy

சங்கர் மேல்நிலைப்பள்ளியின் செயலாளர் ஆர்.வி.ஸ்ரீனிவாசன், பள்ளியின் தலைமை ஆசிரியர் திருஅ. ரெங்கநாதன் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் எஸ். உடையார் ஆகியோர் முன்னிலை உரையாற்றினர். கலந்து கொண்ட 1580  பங்கேற்பாளர்கள் தரநிலை உறுதிமொழி எடுத்து தரமான பொருட்களை தேர்ந்தெடுப்போம் என்று உறுதியேற்றனர்.

பிஐஎஸ் இணை இயக்குனர் அறிவழகன்பி.ஐ.எஸ் ஸ்டாண்டர்ட்கிளப்களின் செயல்பாடுகள்,  தரநிலை மற்றும் அதன் முக்க்கியத்துவம் பற்றியும் விளக்கக்காட்சியுரை வழங்கினார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

நிகழ்வில் பல்வேறு விழிப்புணர்வு போட்டிகள் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்டது. அதில் வினாடி வினா, அறிவியல்கண்காட்சி, கேளிக்கை விளையாட்டு போட்டிகள், முக்கிய நிகழ்வாக பி.ஐ.எஸ்-இன்தரச்சான்றிதழிட்ட பொருட்களின் கண்காட்சியும் நடத்தப்பட்டது.

Flats in Trichy for Sale

இதில் தரநிலைப்படுத்தப்பட்டு ஐ.எஸ்.ஐ. முத்திரை வழங்கப்பட்ட வீட்டு உபயோக பொருட்கள், கட்டுமான பொருட்கள், மின்னணு சாதனங்கள் பி.ஐ.எஸ் செயலிவிளக்கம் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டு மாணவ மாணவியருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நிறைவு விழாவில் திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு கல்வி ஒரு விலை மதிக்க முடியாத செல்வம் என்று கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தினார். ஐ.எஸ்.ஐ முத்திரை கொண்ட பொருட்களையும், ஹால்மார்க் முத்திரை கொண்ட நகைகளையும் வாங்கி தரமான பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டுகோள் விடுத்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கும், பெற்றோர்க்கும் பரிசுத்தொகையும் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தார்.

பி.ஐ.எஸ். இணை இயக்குனர் ஹேமலதா.பி பணிக்கர் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சிகளை பிஐஎஸ் பணியாளர் ஜனனி மற்றும் பள்ளி தமிழாசிரியர் கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

 

(சு. த. தயானந்த்),

மூத்த இயக்குனர்&தலைவர்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.