பழைய ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இயங்கும் அரசு கல்லூரி ! உயர்கல்வித்துறை அமைச்சரின் மாவட்டத்தின் அவலம் !

1

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பழைய ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இயங்கும் அரசு கல்லூரி ! உயர்கல்வித்துறை அமைச்சரின் மாவட்டத்தின் அவலம் !

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, தற்காலிகமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பழைய கட்டிடம் ஒன்றில் தொடங்கப்பட்ட அரசு கலை அறிவியல் கல்லூரி மூன்றாண்டுகளை கடந்தும் இன்று வரையில் அதே கட்டிடத்தில்தான் தொடர்ந்து இயங்கி வருகிறது என்ற தகவல் அதிர்ச்சியூட்டுகிறது. அதுவும், தற்போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் கோவி.செழியனின் சொந்த மாவட்டமான தஞ்சாவூரில்தான் இந்த அவலம் என்பது கூடுதல் கவனத்தை பெற்றிருக்கிறது.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

கடந்த 2022-23 ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் புதியதாக 20 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டது. அதில் ஒன்றுதான், திருவையாறு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட திருக்காட்டுப்பள்ளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. உயர்கல்வித்துறையின் பதிவேடுகளில் மட்டும்தான், திருக்காட்டுப்பள்ளி கல்லூரி என்றிருக்கிறது.

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இயங்கும் அரசு கல்லூரி
ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இயங்கும் அரசு கல்லூரி

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

ஆனால், நடைமுறையில், திருக்காட்டுப்பள்ளியிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் பூதலூர் என்ற ஊரில்தான் அதுவும் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தில்தான் கல்லூரியே இயங்கி வருகிறது.
திருக்காட்டுப்பள்ளி கல்லூரிக்கென்று சாமிநாதபுரம் என்ற ஊரில் இடம் எல்லாம் தேர்வு செய்து, கல்லூரி கட்டுவதற்கான பூமி பூஜையெல்லாம் போட்டார்கள். அதுவரையில், தற்காலிக ஏற்பாடாக பூதலூரை தேர்வு செய்தவர்கள், தற்போது அதையே நிரந்தரமாக்கிவிட்டார்கள்.

ஐந்து பாடப்பிரிவுகள், 600 மாணவர்கள், 30 பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் என அதன் முழு திறனில் இயங்கும் இந்தக் கல்லூரி பள்ளி மாணவர்களுக்கும் கீழாக அடிப்படை வசதிகள் அற்ற கட்டிடத்தில் இயங்கிவருகிறது. போதிய இடவசதியின்மையால், ஷிப்டு முறையில் கல்லூரி இயங்கி வருகிறது.

பெரும்பான்மையான கிராமப்புற மாணவர்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் ஆகியோரின் எளிய தேர்வாக இந்த கல்லூரி அமைந்திருக்கிறது. கடந்த கல்வியாண்டில், சுமார் 3376 விண்ணப்பங்கள் குவிந்திருக்கின்றன என்பதிலிருந்தே, இந்த சுற்றுவட்டாரத்தில் கல்லூரியின் தேவையை நாம் புரிந்து கொள்ள முடியும்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

அமைச்சர் கோவி.செழியன்
அமைச்சர் கோவி.செழியன்

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு என்று அமைச்சர் ஒருவர் இல்லாது இருந்த குறையை பல ஆண்டுகளுக்குப்பிறகு உயர்கல்வித்துறை அமைச்சராக கோவி.செழியன் பூர்த்தி செய்திருக்கிறார். இதற்கு முன்னர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் கூடுதல் பொறுப்பில் இருந்து வந்தது.

இன்னும் சொல்லப்போனால், கல்லூரி அமைந்திருக்கும் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக திமுகவை சேர்ந்த துரை.சந்திரசேகரன் இருக்கிறார். ஆனாலும் கூட, அரசு கலைக்கல்லூரியை சொந்தக்கட்டிடத்திற்கு மாற்ற முடியாத நிலையை எண்ணி உடன்பிறப்புகளே வேதனைபடுகிறார்கள்.

ஜெ.வின் ஆட்சி காலத்தில், திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்றபோது, தேர்தல் வாக்குறுதியாக சொன்னதுபோல ஸ்ரீரங்கம் தொகுதியில் மகளிர் அரசு கலைக்கல்லூரி ஒன்றை உடனடியாக தொடங்கி வைத்தார் ஜெ. தற்காலிக ஏற்பாடாக, இனாம்குளத்தூர் அரசு பள்ளி ஒன்றில், வெறும் ஐந்து வகுப்பறைகளை ஒதுக்கி கல்லூரி என்று போர்டை மாற்றினார்கள்.

ஒரே பள்ளி வளாகத்தில் இரண்டு அம்புக்குறிகளை வரைந்து, இது கல்லூரி இது பள்ளி என்று வகை பிரித்தார்கள். அந்த விவகாரம் விமர்சனத்திற்குள்ளானது. ஆனாலும்,  அதனையடுத்த   அதன் அருகிலேயே கல்லூரிக்கென்று தனிக்கட்டிடம் கட்டி அப்பிரச்சினையை தீர்த்து வைத்தார்கள். தற்போது அந்தக் கல்லூரி,

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பாரதிதாசன் பல்கலையின் உறுப்புக்கல்லூரிகளுள் ஒன்றாக தனித்து இயங்கி வருகிறது. அதுபோன்றதொரு, விரைவான நடவடிக்கையை, உயர் கல்வித்துறை அமைச்சர் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என்பதே, இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக அமைந்திருக்கிறது.

—  தஞ்சை க.நடராசன்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

1 Comment
  1. பாஸ்கரன் says

    மற்றவர்களுக்கு ஒரு நியாயம் திமுகவுக்கு எப்பவுமே தனி நியாயம் போலிருக்கு .மந்திரி நடவடிக்கை எடுக்க வேண்டும்

Leave A Reply

Your email address will not be published.