சிக்கந்தர் – மத கலவரத்தை தூண்டும் அண்ணாமலை பதவி விலகுவாரா – எம்பி நவாஸ்கனி அதிரடி !
கூட்டத்தினரை அழைத்துச் சென்று மலை மீது அசைவ உணவை சாப்பிட்டதை நிரூபித்தால் நான் பதவி விலக தயார் அதை நிரூபிக்க முடியாமல் போனால் அண்ணாமலை பதவி விலக தயாரா ? எம்பி நவாஸ்கனி மதுரை விமான நிலையத்தில் அதிரடி பேச்சு..
சென்னையில் இருந்து விமானம் மூலம் ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி மதுரை விமான நிலையம் வந்தடைந்தார் இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் …
மதுரை திருப்பரங்குன்றம் மலையின் மீது உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவிற்கு ஆடு கோழிகளை எடுத்துச் செல்வதற்கு தடைவிதித்ததை எடுத்தது குறித்து மதுரை மாநகர காவல் ஆணையரிடம் இது குறித்து பேசிவிட்டு மலையின் அடிவாரத்திற்கு சென்று ஆய்வு செய்த போது உணவுகள் எடுத்துச் செல்ல தடை இல்லை ஆடு கோழிகளை எடுத்துச் செல்ல தற்காலிக தடை செய்யப்பட்டுள்ளது அதை விசாரித்துவிட்டு அனுமதிப்போம் என்று சொன்னார்கள். ஏற்கனவே நடைமுறை உள்ள பழக்கத்தை தொடர் அனுமதி அளியுங்கள் என்று கேட்டிருந்தேன் அது நடைமுறையில் இருந்ததா என்பது குறித்து விசாரித்துவிட்டு அனுமதி அளிப்போம் என்று காவல்துறை தரப்பில் கூறினார்கள்.
கூட்டத்தினரை அழைத்துச் சென்று மலை மீது பிரியாணி சாப்பிட்டதே நிரூபித்தால் நான் பதவி விலகத் தயார் அந்த குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாமல் போனால் அண்ணாமலை தலைவர் பதவியில் இருந்து விலகுவாரா? இதுபோன்று தொடா்ந்து மத கலவரத்தை தூண்டுவதாக அண்ணாமலை இணையதளத்தில் பதிவிட்டு வருகிறார். ஐபிஎஸ் படித்துவிட்டு பொய்தான் பேசிக் கொண்டிருக்கிறார். தற்போது லண்டன் சென்று படித்து விட்டு தேர்ச்சி பெற்று பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார். எம்பி மலை மேலே போனாரா என்பதை நிரூபிப்பாரா அண்ணாமலை மலையின் மேலே செல்லவில்லை மழையின் கீழே இருந்து அதிகாரிகளிடம் மலை மீது செல்வது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தேன்.
ஒற்றுமைக்காகவும் சமூக நல்லினத்திற்காகவும் தான் தொடர்ந்து அமைதியாக இருந்து வருகிறோம். நேற்றிலிருந்து பாஜகவின் தலைவர்கள் தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருகின்றனர். தர்காவிற்கு சென்றவர்கள் சைவம் சாப்பிடலாம் அசைவம் சாப்பிடலாம் என்று இவர்கள் ஏன் கேட்கிறார்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கோவில் வளாகத்திற்கு சென்று அசைவ உணவை சாப்பிடவில்லை அனுமதியின்றி யாரும் மலை மீது உணவு கொண்டு சாப்பிடவில்லை பாஜகவினர் ஒற்றுமை மற்றும் மதநல்லிணக்கத்தை குலைக்க வேண்டும் என்றே கிளப்புகிறார்கள் பாஜகவை தவிர எந்த அரசியல் கட்சிகளும் இது குறித்து கருத்து சொல்லவில்லை என்றார்.
வக்பு வாரிய கட்டுப்பாட்டில் உள்ள தர்காவிற்கு நாங்கள் சென்று ஆய்வு செய்தோம் பொய்யான தகவலை சொல்லக்கூடிய சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கருத்துகளை சொல்லும் எச் ராஜா அண்ணாமலை போன்றவர்களை கைது செய்ய வேண்டும்.
மேலும், தமிழ அரசின் கோரிக்கைக்கு அடிபணிந்து தான் மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்தது என்றும் கூறினார்.
— ஷாகுல், படங்கள் ஆனந்தன்.