அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

முடங்கி போயிருந்த தொழிலாளர் நல வாரியத்தை மீட்டெடுத்த முதல்வர் ஸ்டாலின் ! அமைச்சர் கீதா ஜீவன்

0

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

அதிமுக ஆட்சி காலத்தில் முடங்கி போயிருந்த  தொழிலாளர் நல வாரியத்தை முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு மீட்டு,  லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார் கோவில்பட்டியில் அமைச்சருக்கு கீதா ஜீவன் பேச்சு!

கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிலாளர்கள் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாமை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்..

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

நலத்திட்ட சிறப்பு முகாம்தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தனியார் திருமண மஹாலில் வைத்து தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி திமுக சார்பில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தீப்பெட்டி தொழிலாளர்களை நலவாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்வதற்கு சிறப்பு முகாம் நடைபெற்றது.

தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கு திருமணம் மகப்பேறு குழந்தைகளுக்கு கல்வி நிதி உதவி, கண் கண்ணாடி மற்றும் நலவாரிய உறுப்பினருக்கு இயற்கை மரணம் மற்றும் விபத்து மரணம் உதவித்தொகை மற்றும் 60 நிறைவு பெற்றவருக்கான உதவிதொகை  திட்டம்  உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் தமிழக அரசால் வழங்கப்படுகின்றன.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

நலத்திட்ட சிறப்பு முகாம்இம் முகாமை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்து பயனாளிக்கு நலவாரிய அட்டையை வழங்கி தொழிலாளர்கள் மத்தியில் பேசினார்.

தற்போது வரை தீப்பெட்டி தொழிலாளர்  நலவாரிய அட்டை  கிடைக்க பெறாதவர்கள் இம் முகாமை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இம் முகாம் தொழிலாளர் நல வாரிய ஆணையரால் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது..

HARINI JEWELLERS TRICHY

இந்த அட்டையை 5 வருடத்திற்கு ஒரு முறை தாங்கள் புதுபித்து கொள்ள வேண்டும்..

நலத்திட்ட சிறப்பு முகாம்கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தொழிலாளர் நல வாரியம் முடங்கி கிடந்தது  நம் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற பின்பு லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி வருகிறார் என்று பேசினார்..

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்நிகழ்வில் முன்னதாக கலந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கயத்தாறு அருகே உள்ள வாகைகுளம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி முருகன் மின் வயர் அருந்து விழுந்து கழுத்தில் விழுந்ததில் சம்பவ இடத்தில் உயிர் இருந்தார். உயிரிழந்த முருகனின் மனைவி மகேஷ்வரி அமைச்சர் கீதா ஜீவனை சந்தித்தார்  அவருக்கு அமைச்சர் ஆறுதல் கூறி திமுக சார்பில் 1 லட்ச ரூபாய் நிவாரணத் தொகையை வழங்கினார்.

நலத்திட்ட சிறப்பு முகாம்இம் முகாமில் கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி, முன்னாள் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் மகாலட்சுமி சந்திரசேகரன்,  ஒன்றிய செயலாளர்கள் பீக்கிலி பட்டி முருகேசன், ராதா கிருஷ்ணன், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

 

—  மணிபாரதி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.