’பராசக்தி’ கள்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அபூர்வ சகோதரர்கள், சதிலீலாவதி, சந்திரலேகா, வேட்டையாடு விளையாடு, படிக்காதவன், பொல்லாதவன் உள்பட பல சினிமா டைட்டில்கள் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளன. உத்தமபுத்திரன் என்ற ஒரே டைட்டிலில் தமிழில் 3 படங்கள்1936, 1958, 2010 ஆகிய ஆண்டுகளில் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு, பழைய பெயர்களைப் பயன்படுத்துவதற்கு திரைப்படத் துறை சார்ந்த சங்கங்கள் அனுமதிக்கின்றன. பழைய படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது படத் தலைப்பைத் தொடர்ந்து புதுப்பித்து வந்தால், அதன் அனுமதியைப் பெற்றே புதுப் படத்திற்கு அதே தலைப்பை வைக்கிறார்கள்.

புகழ்பெற்ற படங்களின் பெயர்களைப் பயன்படுத்துவது குறித்து அந்தப் படத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் படத்துடன் தொடர்புடையவர்கள் மறுப்பு-எதிர்ப்பு தெரிவித்தால் அது பரிசீலிக்கப்பட்டு, பெயர்களில் திருத்தம் செய்வதும் உண்டு. சிவாஜி நடித்த திருவிளையாடல் பட டைட்டிலை தனுஷ் நடித்த படத்திற்கு வைத்தபோது இது போன்ற விவகாரம் ஏற்பட்டு, திருவிளையாடல் ஆரம்பம் எனப் பெயர் வைக்கப்பட்டது. விஜய் நடித்த கீதை என்ற படத்தலைப்புக்கு எதிர்ப்பு வந்தபோது, புதிய  கீதை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இன்னும் சில படங்களும் இந்த வரிசையில் உண்டு.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

 ’பராசக்தி’1952ல் வெளியான பராசக்தி படத்தைத் தயாரித்தது நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம். பாவலர் பாலசுந்தரம் எழுதிய ‘கல்யாணி’ என்ற நாடகம், கலைஞரின் திரைக்கதை வசனத்தில் ‘பராசக்தி’யானது. படத்தின் டைட்டிலில் மூலக்கதை என்று பாலசுந்தரத்தின் பெயர் இருக்கும். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் படம், முத்திரை பதித்த படம், கலைஞரின் அனல் தெறிக்கும் பகுத்தறிவு வசனங்களால் திரையுலகில் திருப்புமுனையை உருவாக்கிய படம் என்பதால் பராசக்தி என்ற டைட்டில் மீது திரையுலகினருக்கு எப்போதுமே ஓர் ஈர்ப்பு உண்டு.

 ’பராசக்தி’அந்த ஈர்ப்பை முதலில் செயல் வடிவமாக்கியவர் இயக்குநர் ஏ.ஜெகந்நாதன். எம்.ஜி.ஆர் நடித்த இதயக்கனி, சிவாஜி நடித்த வெள்ளை ரோஜா, ரஜினி நடித்த மூன்று முகம், தங்க மகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர் 1985ஆம் ஆண்டில் சிவகுமார்-நளினி ஜோடியாக நடிக்க, ‘மீண்டும் பராசக்தி’ என்ற படத்தை இயக்கினார். இளையராஜாவின் இசையில் இதமான 4 பாடல்களும் உண்டு.  பெருமாள் எல்லாம் பெத்தபெருமாள் ஆகிவிடமுடியாது என்பதுபோல, பராசக்தியை ரசித்தவர்கள் ‘மீண்டும் பராசக்தி’யை ரசிக்கவில்லை. அதன்பிறகு இன்னொரு பராசக்தி வந்தது. அது முதல் பராசக்தியைத் தந்தவரின் கைவண்ணத்திலேயே உருவானது.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஆம்.. தெலுங்கு படத்தின் கதை ஒன்றின் ரீ-மேக் உரிமையைப் பெற்று, கலைஞரின் திரைக்கதை வசனத்தில் செல்வா, சுகன்யா, நெப்போலியன் உள்ளிட்டோர் நடித்த ‘புதிய பராசக்தி’ என்ற படம் 1996ஆம் ஆண்டு வெளியானது. கௌரிராஜன் என்பவர் இயக்க, தேவா இசையமைத்திருந்தார். பழைய பராசக்தி டீமில் கலைஞர் மட்டுமே புதிய பராசக்தியில் இருந்தார்.  ஆனால், புதிய பராசக்தியை பார்த்த சிலரும்கூட, பழைய பராசக்தி போல வருமா என்றுதான் சொன்னர்கள். 2025ஆம் ஆண்டில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு, ‘பராசக்தி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு, டீசர் வெளியாகியுள்ளது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

 ’பராசக்தி’பராசக்தி வரிசையில் இது நான்காவது படம். முதல் பராசக்திக்குப் பிறகு வந்த இரண்டு படங்களும் முன்னோட்டுகளாக மீண்டும், புதிய ஆகியவற்றைக் கொண்டிருந்தன. இது நேரடியாக அப்படியே பராசக்தி எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில் விவாதங்களும் சர்ச்சைகளும் உருவாக, படத் தலைப்புக்கான உரிமை தங்களிடம் உள்ளதாக நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்தும் போது சமரச முயற்சி உருவாகலாம். பராசக்தி என்ற தலைப்புடன் முன்னொட்டு-பின்னொட்டு சேர்க்கப்படலாம். பராசக்தியை முற்றிலும் தவிர்த்து வேறொரு தலைப்பு வைக்கப்படலாம். இவையெல்லாம் சினிமா உலகின் நடைமுறை.

 ’பராசக்தி’முதல் பராசக்தியை 1952ல் தீபாவளி ரிலீசாகப் பார்த்தவர்களில் பலர் இன்றில்லை. மிச்சமிருப்பவர்கள் முதுகிழவர்களாகிவிட்டனர். ரீ-ரிலீஸ்களில் பார்த்தவர்கள் சீனியர் சிட்டிசன்களாக உள்ளனர். அதை Gen Zதலைமுறையினருக்ககேற்ற நவீனத் தொழில்நுட்பத்தில் புதுப்பித்து திரையரங்கிலும், ஓ.டி.டி. தளங்களிலும், யூ-டியூப் போன்றவற்றில் உரிய உரிமத்துடன் வெளியிடுவதுடன் சிறுசிறு காட்சிகளாகவும்(Shorts) சமூக வலைத்தளங்களில் பரப்புவதே கலைஞர்-சிவாஜி கூட்டணியில் உருவான பராசக்திக்குப் பெருமை சேர்க்கும்.

 

—    கோவி லெனின்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.