விருந்தோம்பல் எனும் உன்னதமான சேவைத்துறை! ஹோட்டல் துறை என்றொரு உலகம்!-தொடா் 10
நான் நினைத்த வேலைக்கு போக மூடியவில்லை என்பதால் வெய்ட்டா் வேலை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன் என்ற சொல் இன்றும் நிலவி வருகிறது. ஆனால் நினைத்துப் பாருங்கள் அனைத்து இடத்திலும், சுயசேவை உணவகங்கள் இருந்தால் நம்மில் பலருக்கு சாப்பிடச் செல்லும் ஆசையே இல்லாமல் போய்விடும்.
வெயிட்டர் எனவும், Steward எனவும், சப்ளையர் எனவும் கூறப்படும் வேலை விருந்தோம்பல் செய்யும் உன்னதமான நேரடி வேலையாகும். இந்தத் துறையில் மேற்கண்ட பதவியில் துவங்கி 7 முதல் 10 மேற்பதவிகள் இருக்கும். Food and Bever-age Manager எனப்படும் உயர்ந்த பதவி இத்துறையின் தலைவர் பதவி ஆகும்.
ஒரு ஸ்டார் ஹோட்டலின் பொது மேலாளர் (General Manager) பதவி, ஒட்டு மொத்த ஹோட்டலின் மேலான பதவி ஆகும். அவர்தான் ஹோட்டலை நடத்தும் முழுப்பொறுப்பினையும் ஏற்றிருப்பார். முதலாளி, விருந்தினர், பணியாளர்கள், அரசு சட்டங்கள், முகவர்கள், பொருட்கள் வழங்குபவர்கள் என அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்து ஹோட்டலின் லாபத்திற்கான பொறுப்பை ஏற்று நடத்தும் General Managerஆகும் General Man-ager பதவிக்கு வரும் பெரும்பாலானோர், Food and Beverage Manager பதவியில் இருந்தவராக இருப்பர், அதற்கு வெயிட்டர், சப்ளையர், Steward என்றழைக்கப்படும் பதவியில் இருந்துதான் மேலே வளர்ந்திருப்பர்.
கிட்டத்தட்ட 13000 நபர்களை இண்டர்வியூ செய்துள்ளேன். ஹோட்டலின் ஆரம்ப பதவிகள் முதல் General Manager பதவி வரை நான் இன்றும் இண்டர்வியூ செய்து கொண்டிருக்கிறேன். இது எனது பணிகளுள் ஒன்றாகும். ஒரு General Manager ஐத் தேர்ந்தெடுக்கும் பொழுது சர்வீஸ் அனுபவம் இருப்பவர்கள்தான் அதிகமாக General Manager ஆக தேர்ந்த்தெடுக்கிறோம். காரணம், வரும் வாடிக்கையாளர்களான விருந்தினரிடம் அதிகம் பேசி அவர்களது தேவை, விருப்பு வெறுப்புகள் பற்றி நன்கு அறிந்த துறை சர்வீஸ் டிபார்ட்மெண்ட் ஆகும்.
Star hotel, restaurant, y restau-rant, bakery, கப்பல், விமானம், ரயில்வே, கல்வி நிறுவனகேண்டீன்,பெரியதொழில் நிறுவனகேண்டீன், மருத்துவமனை தொழில், ராணுவம், சொந்த அவுட்டோர் கேட்டரிங் என்ற ஆர்டர் கேட்டரிங், piz-za shops, fast food, chicken outlets, cloud kitchen, process foods. juice outlets, salad shops, ice cream shops sweet shops, என பல்வேறு இடங்களில் சர்வீஸ் வாய்ப்புகள் உள்ளன. மேலும் புதுப்புதுவகையாகதொழில்கள் உருவாக்கும் வாய்ப்புகளும் இவர்களுக்கு உள்ளது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கேட்டரிங் படிப்பில் Food & Beverage Service எனப்படும் பாடமே இத்துறைக்கான தேவையான பாடம் ஆகும். இந்த துறைக்குள் பல்வேறு பகுதிகள் உள்ளன. அவை – ரெஸ்டாரண்ட், பார், ரூம் சர்வீஸ், Banquet எனப்படும் அரங்குள் போன்றவை ஆகும். பரிமாறுபவர் பலர் நேரத்திற்கு சாப்பிடுவதில்லை. ஆனால், நாங்கள் மேலாளராக இருக்கும் பொழுது, முதலில் பணியாளர்களை எங்கள் தனி கேண்டினில் சாப்பிட வைத்து, பின்னர் விருந்தினருக்கு ரெஸ்டாரண்டில் பரிமாற வைப்போம். அப்போது இன்னும் மகிழ்வாக பரிமாற முடியும். சர்வீஸ் துறைக்கு வேலைக்கு வருபவர்களுக்கு முக்கிய தகுதி என்னதெரியுமா? நான் பரிமாறுவதால் சாப்பிடுபவரின் முகமும் அகமும் மலர்வதைக் கண்டு ரசிப்பேன் என்ற எண்ணம்தான் முக்கிய தகுதி ஆகும். அந்த எண்ணத்துடன் இருப்பவர்கள் நிச்சயம் இத்துறையில் வெற்றி பெற முடியும்.
தொடரும் …
திரு.கபிலன்
ஹோட்டல் துறை என்றொரு உலகம் தொடா்- 9 ஜ படிக்க
நட்சத்திர ஹோட்டலில் செஃப்-ஆக என்ன செய்ய வேண்டும்? ஹோட்டல் துறை என்றொரு உலகம் பகுதி – 9