அங்குசம் சேனலில் இணைய

மோகன்லாலின் ‘L 2 : எம்புரான்’ -ல்  எண்ட்ரியான ஹாலிவுட் நடிகர்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

இயக்குநரும், நடிகருமான பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘லூசிஃபர்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள ‘L 2 எம்புரான் ‘  படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பிருத்விராஜ் சுகுமாறன், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர் , சுராஜ் வெஞ்சரமூடு, சானியா ஐயப்பன், கிஷோர் ,சாய்குமார், சச்சின் கடேக்கர் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஹாலிவுட்டில் வெளியாகி பிரம்மாண்டமான வெற்றியை பெற்ற ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’, ‘ஜான்விக்-3’ படங்கள் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஜெரோம் ஃப்ளின்- இப்படத்தில்  போரிஸ் ஆலிவர் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

மோகன்லாலின் 'L 2 : எம்புரான்'
மோகன்லாலின் ‘L 2 : எம்புரான்’

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு தீபக் தேவ் இசையமைத்திருக்கிறார். ஆக்சன் த்ரில்லர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் எம்புரானை லைக்கா புரொடக்ஷன்ஸ்& ஆசிர்வாத் சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் சுபாஷ்கரன் மற்றும்  ஆண்டனி பெரும்பாவூர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

படம் பற்றி ஜெரோம் ஃப்ளின் வெளியிட்டுள்ள காணொளியில் ,  “இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் கிடைத்த அனுபவத்தை விட இந்திய சினிமாவில் பணியாற்றிய அனுபவம் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. இந்திய கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது மறக்க இயலாத அனுபவத்தை வழங்கி இருக்கிறது.

ஜெரோம் ஃப்ளின்
ஜெரோம் ஃப்ளின்

என்னுடைய வாழ்க்கையில் இந்தியா மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. என்னுடைய இளமைக் காலத்தில் இந்தியாவிற்கு ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறேன். அந்த பயணமும், அதன் மூலம் கிடைத்த அனுபவமும் என் வாழ்க்கையை மாற்றி அமைத்தது. அதன் பிறகு இந்த கலை உலக வாழ்க்கையை தேர்வு செய்தேன். இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தை பற்றி சொல்வதை விட, குரேஷியின் பயணத்தில் என்னுடைய கதாபாத்திரம் முக்கியமானது. அதனை ரசித்து நடித்திருக்கிறேன். அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என பேசியுள்ளார்.

 

—  மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.