பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் சீமான் ! தேர்தல் திறனாய்வாளர் இரவீந்திரன் துரைசாமி போட்ட அணுகுண்டு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

2026ஆம் ஆண்டு மே திங்களில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. இன்னும் முழுமையாக ஓராண்டு இருக்கும் நிலையில், கடந்த 6 மாதத்திற்கு முன்பாகவே தொலைக்காட்சி ஊடகங்கள் யார் யாரோடு கூட்டணி, அதிமுக மெகா கூட்டணி அமைக்குமா? விஜய் அதிமுகவோடு கூட்டணி சேருவாரா? திமுக கூட்டணி நிலைத்திருக்குமா? போன்ற பல்வேறு கேள்விகளோடு கலந்துரையாடல்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன.

அண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசும்போது,“எங்கள் எதிரி திமுகதான். மக்கள் விரோத திமுக ஆட்சியை விரட்டுவதே அதிமுகவின் நோக்கம். எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிந்தாமல் ஒருங்கிணைத்து திமுகவைத் தோற்கடிப்போம்” என்று கூறினார். பாஜகவோடு அதிமுக கூட்டணி சேருமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு எடப்பாடி பதில் அளிக்கும்போது‘இன்னும் ஒரு வருட காலம் உள்ளது’ என்று பிடிகொடுக்காமல் பதில் அளித்தார்.

Frontline hospital Trichy

இந்நிலையில், நேற்று (07.03.25) தொலைக்காட்சி கலந்துரையாடலில் கலந்து கொண்ட தேர்தல் திறனாய்வாளர் இரவீந்திரன் துரைசாமி பேசும்போது,“பாஜக அதிமுகவோடு கூட்டணி உறவைத் தொடர மே மாதம் காத்திருக்கும். அதிமுகவின் நோக்கம் திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவது என்றால் பாஜகவோடு கூட்டணி அமைப்பதைத் தவிர அதிமுகவுக்கு வேறு வழியில்லை.

அதிமுக தவெக தலைவர் விஜய் அவர்களோடு கூட்டணி பேசியது. அந்தக் கூட்டணி அமைய வாய்ப்பில்லை. தவெகவின் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாத் கிஷோர் அண்மையில் பேசும்போது, தவெக தனித்தே போட்டியிடும். கூட்டணியில் இணைந்து போட்டியிடுமா? என்பது 2026 ஜனவரிக்கு மேல்தான் தெரியும் என்று கூறியுள்ளார்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

அதிமுக – பாஜக கூட்டணி அமையவில்லை என்றால், பாஜக தலைமையில் புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக் கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடும். இந்தக் கூட்டணியில் நாம் தமிழர் கட்சியும் இணையும். அப்படி இணைந்தால், பாஜகவின் NDA கூட்டணியின் முதல் அமைச்சர் வேட்பாளர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்தான்” என்று அரசியல் களத்தில் அணுகுண்டை போட்டார்.

இரவீந்திரன் துரைசாமி அண்மையில் சீமான் – ரஜினிகாந்த் சந்திப்புக்குக் காரணமாக இருந்தவர். 2 மணி நேர சந்திப்பில் இரவீந்திரன் துரைசாமி ஏறத்தாழ ஒரு மணி உடன் இருந்தவர். தொலைக்காட்சி உரையாடல்களில் பாஜகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பார். அதைப்போலவே சீமானையும் உயர்த்திப்பிடித்தே பேசுவார். ‘சீமான் சுத்தவீரன். இரண்டு இடைத்தேர்தலில் எதிர்கட்சியான அதிமுக பயந்து ஓடியபோது, எதிர்த்து நின்று வலிமையைக் காட்டியவர் சீமான்.

தொடக்கத்தில் 2% வாக்கு பின் 4% வாக்கு என்பது இப்போது 8% வாக்கு வங்கியாக உயர்ந்துள்ளது. நாம் தமிழர் தமிழ்நாட்டில் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது. இப்படியொரு வளர்ச்சியை யாரும் இதுவரை கண்டதில்லை. தனித்துப் போட்டியிட்டு தன் வலிமையை நிரூபித்துள்ளார்’ என்று சீமான் புகழ்பாடுவதை வாடிக்கையாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தகுந்தது. பாஜகவின் ஒப்புதல் இல்லாமல் காட்சி ஊடகத்தில் சீமான் முதல் அமைச்சர் வேட்பாளர் என்பதை குறிப்பிட்டிருக்க மாட்டார்.

இரவீந்திரன் துரைசாமி
இரவீந்திரன் துரைசாமி

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இரவீந்திரன் துரைசாமி பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் சீமான் என்று குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி நாம் தமிழர் மாநில பொறுப்பாளரிடம் பேசியபோது,“நாம் தமிழர் இதுவரை தனித்தே போட்டியிட்டு வந்துள்ளது. இனியும் அப்படித்தான் போட்டியிடும் என்று அண்ணன் செந்தமிழன் சீமான் உறுதியாக கூறிவருகிறார். பல சட்டமன்றத் தொகுதிகளுக்கு வேட்பாளர்கள்கூட அறிவித்து வருகிறார்.

இந்நிலையில் தேர்தல் திறனாய்வாளர் இரவீந்திரன் துரைசாமி அண்ணன் சீமான் பாஜக கூட்டணியின் முதல் அமைச்சர் வேட்பாளர் என்று கூறியிருப்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமைதான் முடிவு சொல்ல வேண்டும். அண்ணன் சீமானை முதல் அமைச்சர் வேட்பாளர் என்பதை ஏற்று கூட்டணியில் எந்தக் கட்சி வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம் என்று இடுபாவனம் கார்த்தி போன்றவர்கள் கடந்த காலங்களில் கூறிவந்துள்ளார்கள்.

இப்போது பாஜக தலைமையை ஏற்கமுடியுமா? என்பது ஒரு பெரிய கேள்விதான். நாம் தமிழர் கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்கள் பல விலகியதால் கட்சி கொஞ்சம் பலவீனமாகத்தான் உள்ளது. இந்நிலையில் பாஜகவோடு நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைத்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு இல்லை என்று உறுதியாக கூறிவிட முடியாது.

போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தால் அண்ணன் சீமான் போன்றவர்கள் சட்டமன்றத்திற்குள் நுழையும் வாய்ப்பு ஏற்படும். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் நாம் தமிழர் எப்படி முடிவு எடுக்கும் என்பதை இப்போதைக்குச் சொல்ல முடியாது” என்று மழுப்பலாகக் கூறினார்.

திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக+நாதக கூட்டணி, தவெக கூட்டணி என்று தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு 4 முனைப் போட்டி இருந்தால் திமுக கூட்டணி சுமார் 200க்கும் மேற்பட்ட இடங்களை திமுக கூட்டணி வெற்றிபெறும். பாஜகவின் நோக்கம் திமுகவை வெல்வது அல்ல. பாஜகவின் 18% + நாதக 8% வாக்கு இவற்றைச் சேர்த்தால் 26% வாக்குகளைக் கூட்டணி பெறும். அதிமுக 20% வாக்குகள் பெற்று 3ஆவது இடத்திற்குத் தள்ளப்படும். அடுத்துவரும் 2029 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவை இல்லாமல் செய்வதுதான் பாஜகவின் தொலைநோக்காக உள்ளது என்பதையும் இரவீந்திரன் துரைசாமி சுட்டிக்காட்டுகின்றார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இரவீந்திரன் துரைசாமி கூறுவதுபோல் பாஜக கூட்டணியில் நாம் தமிழர் கட்சி இணைந்து, சீமான் முதல் அமைச்சர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டால் சீமான் காட்டில் மழைதான். கட்சியில் முன்னணியினர் பலர் விலகிய நிலையில், பாஜக தேர்தல் செலவுக்காக வைட்டமின் ’ப’-வை வாரி இறைக்கும். சீமான் கட்சி தேர்தல் களத்தில் தோல்வியைச் சந்தித்தாலும், இன்னும் 2 தேர்தல்களைச் சந்திக்கும் நிதி வலிமையோடு நாம் தமிழர் இருக்கும் என்று அரசியல் திறனாய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 2026 ஜனவரியில் புத்தாண்டு பிறந்த பின்னர் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் சூழ்ந்துள்ள மேகக்கூட்டங்கள் மறைந்து வானம் தெளிவாகும். அதுவரை காத்திருப்போம்.

 

—   ஆதவன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.