அடகு நகையை திருப்ப கேட்ட தம்பதி- வன்கொடுமை தாக்குதல் நடத்திய அதிமுக பிரமுகர் !!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அடகு வைத்த நகையை திருப்ப சென்ற போது  கடை உரிமையாளரான அதிமுக பிரமுகர் தம்பதியை  தாக்கியதாக புகார் .

கடை உரிமையாளருக்கு ஆதரவாக தேனி மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் முறுக்கோடை ராமர் என்பவரின் தலையீட்டால்  காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கண்ணீர் மல்க பேட்டி.

Srirangam MLA palaniyandi birthday

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த தம்பதிகள் முத்தையா பஞ்சு இவர்களது மகன் குமரேசன் என்பவர் கடந்த மாதம் 24 ஆம் தேதி ஆண்டிபட்டி அருகே கண்டமனூரில் உள்ள தனியார் நகைக் கடையில் 1.5 பவுன் நகையை அடகு  வைத்தார்.

தாக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட தம்பதியினா்
தாக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட தம்பதியினா்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இந்நிலையில் இந்த நகையை திருப்புவதற்காக முத்தையாவும் பஞ்சும் கடந்த 27ஆம் தேதி கண்டமனூர் நகை கடைக்கு வந்தனர். கடை பூட்டப்பட்டிருந்தால் கடை உரிமையாளர் சுப்பிரமணி என்பவரின்  வீட்டை கண்டுபிடித்து வீட்டிற்கு சென்று நகை திருப்புவதற்கு கேட்டனர்.

அப்போது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த தாங்கள் வீட்டிற்கு வந்து கேட்டதால் கோபம் அடைந்த சுப்பிரமணி மற்றும் அவரது மனைவி 2  மகன்கள் உறவினர்கள் சேர்ந்து தங்களை சாதியை சொல்லி ஆபாசமாக பேசியதாகவும், சேலையை பிடித்து இழுத்து மானபங்க  படுத்தி கழுத்தில் இருந்த ஐந்து பவுன்  தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தாக்கியதாகவும், இது தொடர்பாக கணடமனூர் காவல்துறை மற்றும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம்  தாக்குதளக்குள்ளாக்கபட்ட பஞ்சு மற்றும் அவரது கணவர் புகார் அளித்தனர். இதையடுத்து காயம் அடைந்த பஞ்சு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய நிலையில்.

நகைக் கடை உரிமையாளரான அதிமுக பிரமுகர்

வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிடும் எம்.எல்.ஏ. !

நகைக் கடை உரிமையாளரான அதிமுக பிரமுகர்

கடந்த மார்ச் மாதம் ஐந்தாம் தேதி கண்டமனூர் காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் சாதியைச் சொல்லி பேசுதல் ,  தாக்குதல் ,  காயம் ஏற்படுத்துதல் பெண்ணை மானபங்கப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் சுப்பிரமணி அவரது மனைவி மற்றும் இரு மகன்கள் இரண்டு உறவினர்கள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் இவ்வழக்கில் யாரும் கைது செய்யப்படாத நிலையில் மன உளைச்சல் அடைந்த பஞ்சு கடந்த மார்ச் மாதம் ஏழாம் தேதி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இது குறித்து  புகார் அளித்தார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலேயே புகார் கொடுக்க வந்த தங்களை அலுவலக வளாகத்திலேயே  நகை அடகு கடை உரிமையாளரும்  அதிமுக பிரமுகருமான  சுப்பிரமணியும், அவரது மகன் அரவிந்தும் அதிமுக பிரமுகர் குருதேவன் என்பவரும் கொலை மிரட்டல் விடுத்தும் கிண்டலாக பேசியும் சென்றதாகவும்,

அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர்
அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர்

அதற்கான ஆதாரம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் தேனி அதிமுக கிழக்கு மாவட்ட  செயலாளர் முறுக்கோடை ராமர் என்பவரது செல்வாக்கு மற்றும் தலையிட்டால்தான் கண்டமனூர் அதிமுக பிரமுகரான நகை கடை உரிமையாளர் சுப்பிரமணி மீது  நடவடிக்கை எடுக்காமல் கண்டமனூர் காவல்துறையினர் காலம் தாழ்த்தி அலட்சியமாக இருந்து வருவதாகவும் அவர்கள் கண்ணீர் மல்க புகார் கூறி  பேட்டி அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

—   ஜெய்ஸ்ரீராம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.