19 சிறப்பு விருதுகள் பெற்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் ! பணியாளர்களை பாராட்டிய அமைச்சர் !
அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு (ASRTU) மூலமாக வழங்கப்படும் 2023 -2024 ஆண்டிற்கான தேசிய பொது பேருந்து போக்குவரத்து சிறப்பு விருதுகளில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் 19 விருதுகள் பெற்றுள்ளது. – மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் தகவல்.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் வளங்கள் மற்றும் செயல்திறனை ஆராய்ந்து பொதுவான கட்டமைப்பின் கீழ் கொண்டு வர 1965 ஆம் ஆண்டு ஆகஸ்டு 13-ஆம் நாள் அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு (ASRTU) ஏற்படுத்தப்பட்டது. இக்கூட்டமைப்பு மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இக்கூட்டமைப்பில் உறுப்பினர்களாக 70 மாநில போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன.
இக்கூட்டமைப்பு ஆண்டுதோறும் அனைத்து மாநில போக்குவரத்துக் கழகங்களை ஊக்குவிக்கும் வண்ணம் அவற்றின் செயல்திறன்களை ஆய்வு செய்து விருதுகள் வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து விருதுகள் பெற்று வருகின்றன.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
2023-24 ஆம் ஆண்டிற்கான விருதுகளில்இ 19 விருதுகள் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 07.03.2025 அன்று தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்இ சிறப்பு விருந்தினர் முன்னாள் ஆளுநர் கிரண்பேடி இ.கா.ப.இ அவர்கள் வழங்கிடஇ இவ்விருதுகளை மேலாண் இயக்குநர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர் அவர்களின் சீரிய மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின்படிஇ தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் 19 விருதுகளை பெறும் வகையில் தேவையான கட்டமைப்பினை ஏற்படுத்தித் தந்ததற்குஇ மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியினை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் தெரிவித்துக் கொண்டார்கள்.
இதன்படி
சிறந்த சாலைப் பாதுகாப்பு நடைமுறைக்கான விருது (Best Road Safety Practices) முதல் இடம்இ நிதி நடைமுறைக்கான விருது (Financial Practices) இரண்டாம் பரிசு மாநகர் போக்குவரத்துக் கழகம் (சென்னை) லிமிடெட் 2 விருதுகள் பெற்றுள்ளது.
புறநகர் பணியாளர் செயல் திறனுக்காகவும் (Employee Productivity Award) முதல் இடத்திற்கும்இ கிராமப்புறப் பேருந்துகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைக்காக (Digital Transaction Award) முதல் இடத்திற்கும்இ கிராமப்புறம் வாகன பயன்பாட்டிற்காகவும் (Vehicle Utilization Award) இரண்டாம் பரிசுஇ அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (தமிழ்நாடு) லிமிடெட் 3 விருதுகள் பெற்றுள்ளது.
எரிபொருள் செயல்திறனுக்கான விருது (HSD KMPL) முதல் இடத்திற்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட் 1 விருது பெற்றுள்ளது.
நகர்புற எரிபொருள் செயல்திறனுக்கான விருது (HSD KMPL) முதல் இடத்திற்கும்இ சாலை பாதுகாப்பு விருது (புறநகர் பேருந்துகள்) முதல் இடத்திற்கும் 1 விருதும் மற்றும் (நகர்புறம் பேருந்துகள்) முதல் இடத்திற்கும் 1 விருதுஇ கிராமப்புறம் வாகன பயன்பாட்டிற்காகவும் (Vehicle Utilization Award) முதல் இடத்திற்கும் ஆக மொத்தம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (சேலம்) லிமிடெட் 4 விருதுகள் பெற்றுள்ளது.
எரிபொருள் செயல்திறனுக்கான (புறநகர்) விருது (HSD KMPL) முதல் இடத்திற்கும் இ எரிபொருள் செயல்திறனுக்கான (நகர்புறம்) விருது (HSD KMPL) முதல் இடத்திற்கும்இ கிராமப்புற உருளிப்பட்டை செயல்திறனுக்காகவும் (Rural – Tyre Performance Award) இராண்டாம் பரிசுஇ நகர்புற பேருந்துகளில் உருளிப்பட்டை செயல்திறனுக்கவும் (Urban – Tyre Performance Award) முதல் பரிசும்இ நகர்ப்புற வாகன பயன்பாட்டிற்காகவும் (Urban – Vehicle Utilization Award) முதல் பரிசு ஆக மொத்தம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட் 5 விருதுகள் பெற்றுள்ளது.
கிராமப்புற உருளிப்பட்டை செயல்திறனுக்காகவும் (Rural – Tyre Performance Award) முதல் இடத்திற்கும்இ எரிபொருள் செயல்திறனுக்கான (நகர்புறம்) விருது (HSD KMPL) இரண்டாம் இடத்திற்கும்இ நகர்புறம் உருளிப்பட்டை செயல்திறனுக்காகவும் (Urban– Tyre Performance Award) இரண்டாம் இடத்திற்கும்இ நகர்புற வாகன பயன்பாடு (Urban – Vehicle Utilization Award) இரண்டாம் இடத்திற்கும் ஆக மொத்தம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட் 4 விருதுகள் பெற்றுள்ளது.
மேலும், மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் இந்த 19 விருதுகள் பெறும் வகையில் சிறப்பாக பணியாற்றிய ஒட்டுநர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களையும் பாராட்டி, தனது நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார்கள்.