அடித்து நொறுக்கப்பட்ட வாகனங்கள் ! நள்ளிரவில் அட்டகாசம் செய்த மர்ம கும்பல் !
கோவில்பட்டியில் நள்ளிரவில் மர்ம கும்பல் அட்டகாசம் வேன் உரிமையாளர் ஒருவருக்கு வெட்டு – பத்துக்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடராஜபுரம் பகுதியில் நள்ளிரவில் கஞ்சா போதையில் வந்த மர்ம கும்பல் அங்கே நிறுத்தி வைத்திருந்த வேன் மற்றும் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.
மேலும் சில வீட்டின் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். மேலும் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த வேன் கண்ணாடியை அந்த கும்பல் அடித்து உடைத்துள்ளது.

இதனை தட்டிக் கேட்ட வேன் உரிமையாளர் நாராயணன் என்பவரை சரமாரியாக வெட்டிய கஞ்சா போதையில் இருந்த கும்பல் தப்பி ஓடிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் அறிந்த வந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் காயம் அடைந்த நாராயணனை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மேலும் மர்ம கும்பல் யார் என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில்பட்டியில் நள்ளிரவில் நடராஜபுரம் தெருவில் புகுந்து வாகனங்களை அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
— மணிபாரதி.