‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘ஏஸ் ( ACE ) ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!
‘7 சி.எஸ்.‘ எண்டெர்டெயின்மென்ட் பேனரில் தயாரிப்பாளர் & இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ ஏஸ் ( ACE) . இதில் கதை நாயகனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இவரின் ஜோடியாக ருக்மணி வசந்த் மற்றும் யோகி பாபு, பி .எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு , ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு, ஜஸ்டின் பிரபாகரன் இசை, ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பு , ஏ. கே. முத்து கலை இயக்கம்.
முழு படப்பிடிப்பும் மலேசியாவில் நடந்தது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியான நிலையில் இப்போது ‘உருகுது உருகுது..’ எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை கவிஞர் தாமரை எழுத, பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷல், பின்னணி பாடகர் கபில் கபிலன் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். ஜஸ்டின் பிரபாகரனின் மயக்கும் மெலோடி பாடலாக உருவாகி இருக்கிறது இப்பாடல்..
— மதுரை மாறன்.