அங்குசம் சேனலில் இணைய

தொடர் நஷ்டத்தில் இயங்கும் செய்தி சேனல்கள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஜனவரி 23 அன்று நான் உட்பட சுமார் 26 பேர் தந்தி தொலைகாட்சியில் இருந்து திடீரென வேலை நீக்கம் செய்யப்பட்டோம். கடந்த மாதம் மேலும் 7 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். பல்வேறு இதர வகை cost cutting exercises நடந்து வருவதாக தகவல்.

இதற்கு காரணம் அதீத நஷ்டம் தான். 2012இல் தந்தி தொலைக்காட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்து தொடர் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. மாதச் செலவு சுமார் ரூ.5 கோடி ஆகும். விளம்பரங்கள் மூலமாக வரவு சுமார் ரூ.2 கோடியில் இருந்து சில மாதங்களில் ரூ.3 கோடி வரை இருக்கும். மாதம் சுமார் ரூ.2 – 3 கோடி நஷ்டம். தந்தி பேப்பரில் (இது லாபத்தில் செல்கிறது) இருந்து மாதம்  தோறும் பெரும் தொகை அனுப்பி, ஈடு செய்து வருகின்றனர். ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் விளம்பர வருவாய் மேலும் குறைந்து, செலவுகள் வெகுவாக அதிகரித்து (பண வீக்கத்தினால்) நஷ்டத்தின் அளவு வெகுவாக அதித்து விட்டது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

செய்தி சேனல்கள்தந்தி ஒன் என்ற general entertainment channel (GEC) ஒன்றை தொடங்கி, அதுவும் தொடர் நஷ்டத்தில் இயங்குவதால் நிதி நெருக்கடி மேலும் அதிகரித்தது. மின்மினி என்ற செயலி ஒன்றை (முகநூலுக்கு போட்டியாக) தொடங்கி அதில் ரூ.85 கோடி நஷ்டம் ஏற்பட்டு, அந்த நிறுவனம் சமீபத்தில் மூடப்பட்டது. இவை அனைத்தும் சேர்ந்ததன் விளைவே ஆட்குறைப்பு. தந்தி குழும வரலாற்றில் இது தான் முதல் முறை. பொதுவாக, they are good people and treat employees with compassion and consideration. ஆனால் தற்போது நிலைமை எல்லை மீறிப் போனதால் இந்த அறுவை சிகிச்சை.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

எனக்கு தெரிந்து பாலிமர் டிவி மட்டுமே லாபத்தில் இயங்குகிறது. மீதி அனைத்து செய்தி சேனல்களும் தொடர் நஷ்டத்தில் இயங்குகின்றன. தமிழகத்தில் செய்தி சேனல்களுக்கு கிடைக்கும் மொத்த விளம்பர வருவாய் மாதம் சுமார் ரூ.10 கோடி மட்டுமே. இதை அனைத்து சேனல்களும் பிரித்துக் கொள்ள வேண்டும். ஆனால் சீரியல்கள், dance shows, music shows கொண்ட GEC  சேனல்களின் மொத்த விளம்பர வருவாய் இதை விட மிக மிக அதிகம்.

KR அதியமான்
KR அதியமான்

ஆனாலும் சன், விஜய், Zee போன்ற ஒரு சில GEC சேனல்கள் மட்டும் லாபத்தில் இயங்குகின்றன. கலர்ஸ் உள்ளிட்ட மீதி அனைத்தும் நஷ்டத்தில் தொடர்கின்றன.

NDTV சேனல் பல நூறு கோடி கடனில் சிக்கியதால், கடன் கொடுத்திருந்த அதானி குழுமம் அதை take over செய்தது. News18 குழுமத்தை சில வருடங்களுக்கு முன்பு வாங்கிய முகேஷ் அம்பானி, இதை ஏன் தான் வாங்கினோமோ என்று வருந்துவதாக தகவல். இது தான் கள யதார்த்தம்.

 

 —  KR  அதியமான்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.